உள்ளடக்கத்துக்குச் செல்

இமானி பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமானி பானர்ஜி
பிறப்பு1942
சில்ஹெட், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்விஸ்வபாரதி பல்கலைக்கழகம், (இளங்கலை)
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், (முதுகலை)
தொராண்டோ பல்கலைக்கழகம், முதுகலை
தொராண்டோ பல்கலைக்கழகம், (முனைவர்)

இமானி பானர்ஜி (Himani Bannerji, பிறப்பு: 1942) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த கனடாவை அடிப்படையாகக் கொண்ட எழுத்தாளரும், சமூகவியலாளரும், ஆய்வாளரும் தத்துவவாதியும் ஆவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

இமானி பானர்ஜி, பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கொல்கத்தாவில் மேற்கொண்டார். இவர் விசுவ பாரதி பல்கலைக்கழகம் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முறையே ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். இதன் பின்னர், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றார்.[2]

ஆய்வு நூல்

[தொகு]

“The Politics of Representation: A Study of Class and Class Struggle in the Political Theatre of West Bengal” என்ற தலைப்பில் நிறைவடைந்தது.

பணி

[தொகு]

இமானி பானர்ஜி, கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை,[3] சமூக மற்றும் அரசியல் சிந்தனைப் பட்டமேற்படிப்பு திட்டம், பெண்ணியல் ஆய்வு பட்டமேற்படிப்பு திட்டம் என்ற பிரிவுகளில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது சமூக செயற்பாடுகள் மற்றும் கவிதைகள் மூலமாக நன்கு அறியப்படுகிறார்.

இமானி பானர்ஜி, மார்க்சிய, பெண்ணிய, இனவெறி எதிர்ப்பு[4] கோட்பாடுகளின் துறைகளில் பணியாற்றுகிறார். கார்ல் மார்க்சின் சித்தாந்தம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, காலனிய உரையாடல்களை வாசிப்பதில் இவர் சிறப்பு கவனம் செலுத்துகிறார். ஒதுக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு நோக்கு, மற்றவராக்கல் மற்றும் மௌனப்படுத்தல் ஆகியவற்றிற்கு உள்ளாகின்றனர் என்பதையும் இவர் விரிவாக உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இலக்கியப் பங்களிப்புகள்

[தொகு]

இவரது குறுநாவல் “Coloured Pictures”, குழந்தைகளுக்கு இனவெறியை எதிர்கொள்வது குறித்து கற்பிக்கிறது.[5]

கல்வி உலகத்துக்கு அப்பாலும், பல்வேறு வாசகர்களை அடைய பல இதழ்கள் மற்றும் வெளியீடுகளை இவர் வெளியிட்டுள்ளார். இவரது இரண்டு கட்டுரைகள் “ரங் (Rungh)" இதழில் வெளியிடப்பட்டுள்ளன.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Himani Bannerji". CSPI (in ஆங்கிலம்). Retrieved 2020-11-25.
  2. "Himani Bannerji – Asian Heritage in Canada" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 October 2020. Retrieved 2020-11-25.
  3. "Bannerji, Himani – York Centre for Asian Research" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 27 January 2021. Retrieved 2020-11-25.
  4. "Himani Bannerji". CSPI (in ஆங்கிலம்). Retrieved 2021-09-28.
  5. "Himani Bannerji – Asian Heritage in Canada" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 October 2020. Retrieved 2020-11-25.
  6. Bannerji, Himani. "A Letter from the Gulf". Archived from the original on 6 May 2023. Retrieved 12 March 2022.
  7. Bannerji, Himani (19 December 2019). "Reorganizing Orientalist Constructions". Rungh. Retrieved 12 March 2022.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமானி_பானர்ஜி&oldid=4459233" இலிருந்து மீள்விக்கப்பட்டது