இமாச்சலப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | எல்லைகளற்ற கல்வியறிவு பெறுதல் |
---|---|
வகை | சர்வதேசப் பல்கலைக்கழகம் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆய்வுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2010 |
நிதிநிலை | ₹448.13 crore (US$54.07 Million) [1] |
தலைவர் | பேராசிரியர் கே. கே. அகர்வால்[2] |
துணைத் தலைவர் | எஸ். கே. வேணுகோபால் (பொறுப்பு)[3] |
மாணவர்கள் | 800+ |
அமைவிடம் | , 28°22′N 73°26′E / 28.37°N 73.43°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | சார்க் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது |
இணையதளம் | sau |
இமாச்சலப் பிரதேசத்தின் மத்தியப் பல்கலைக்கழகம் (CUHP Central University of Himachal Pradesh) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா, காங்க்ராவில் அமைந்துள்ள ஒரு மத்திய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். இது காங்க்ரா மாவட்டத்தின் சாபூரில் உள்ள ஒரு தற்காலிக வளாகத்தில் இருந்து செயல்படுகிறது.[4] தெகுராவிலும் தர்மசாலாவிலும் இரண்டு நிரந்தர வளாகங்கள் கட்டுவதற்கான நடைமுறைகள் நிலுவையில் உள்ளது. [5] ஏற்கனவே மத்தியப் பல்கலைக்கழகம் இல்லாத ஒவ்வொரு மாநிலத்திலும் மத்தியப் பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் என்ற அரசின் கொள்கையின் விளைவாக 2009 இல் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் மத்தியப் பல்கலைக்கழகம், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009 (எண். 25 இன் 2009) கீழ் நிறுவப்பட்டது.
வரலாறு
[தொகு]பிரதமர் மன்மோகன் சிங், 15 ஆகஸ்ட் 2007 இல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏற்கனவே மத்திய பல்கலைக்கழகம் இல்லாத மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009 (எண். 25, 2009) இன் படி 16 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குத் திட்டக் குழு ஒப்புதல் வழங்கியது. இந்தச் சட்டம் 20 மார்ச் 2009 இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இமாச்சலப் பிரதேசத்தின் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பிறவற்றில் நிறுவப்பட்டது. பேராசிரியர் ஃபுர்கான் கமர், பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை]
அமைப்பும் நிர்வாகமும்
[தொகு]இந்தியக் குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையாளராவார். அதிபர் பல்கலைக்கழகத்தின் சம்பிரதாயத் தலைவராக இருக்கும் போது, நிர்வாக அதிகாரங்கள் துணைவேந்தரிடம் இருக்கும். நீதிமன்றம், நிர்வாகக் குழு, கல்விக் குழு, ஆய்வு வாரியம் மற்றும் நிதிக் குழு ஆகியவை பல்கலைக்கழகத்தின் ஆட்சி ஆணைக்குழுக்களாகும்.
பல்கலைக்கழக நீதிமன்றம் பல்கலைக்கழகத்தின் உச்ச அதிகாரம் மற்றும் பல்கலைக்கழகத்தின் பரந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் அதிகாரம் கொண்டதாகும்; நிர்வாகக் குழு என்பது பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த நிர்வாக அமைப்பாகும். கல்வி அலுவல் குழு என்பது பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த கல்வி அமைப்பாகும், மேலும் பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கைகளின் மீது ஒருங்கிணைத்தல் மற்றும் பொது மேற்பார்வைக்கு பொறுப்பாகும். அனைத்து கல்வி தொடர்பான விடயங்களில் நிர்வாக சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு உரிமை உண்டு. நிதிக் கொள்கைகள், இலக்குகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களைப் பரிந்துரைப்பது நிதிக் குழுவின் பொறுப்பாகும். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.mea.gov.in/Images/attach/ru3062.pdf/
- ↑ SAARC Official Website(22 December 2023). "South Asian University to get Chairman from Pakistan and President from India". செய்திக் குறிப்பு.
- ↑ https://sau.int/about/key-university-functionaries/
- ↑ "Contact Us". cuhimachal.ac.in. Central University of Himachal Pradesh. Archived from the original on 10 September 2017. பார்க்கப்பட்ட நாள் 10 September 2017.
- ↑ "Location of the University". cuhimachal.ac.in. Central University of Himachal Pradesh. Archived from the original on 10 September 2017. பார்க்கப்பட்ட நாள் 10 September 2017.
- ↑ "Central Universities Act, 2009". 2009-03-20.