இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2022 (2022 Himachal Pradesh Legislative Assembly election), இமாச்சல சட்டமன்றத்தின் 68 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 8 திசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் 8 சனவரி 2023 அன்றுடன் முடிவடைகிறது.[1]இத்தேர்தலுக்கு அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் 14 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது.[2][3]68 தொகுதிகள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு 40 தொகுதிகளை வென்றது.[4]10 டிசம்பர் 2022 அன்று முதலமைச்சராக சட்டமன்ற உறுப்பினர் சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார்.
ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் (ABP News-CVoter’s) 1 அக்டோபர் முதல் 14 அக்டோபர் 2022 வரை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகள் 15 அக்டோபர் 2022 அன்று வெளியிட்டது.[9][10]
கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 38 முதல் 46 தொகுதிகளின் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவாக 48.8% முதல் 46% வரையான வாக்குகளே பெறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய காங்கிரசு சென்ற தேர்தலை விட 41.7% முதல் 35.2% வரையான வாக்குகள் பெற்று 20 முதல் 28 தொகுதிகளைக் கைப்பற்றும்.
ஆம் ஆத்மி கட்சி 6.3% வாக்குகள் பெற்று 0 முதல் 1 இடம் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய தேசிய காங்கிரசு 40 தொகுதிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளை வென்றுள்ளனர்.[13]