இமயம் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இமயம் (About this soundஒலிப்பு ) (Imayam, பிறப்பு: 1964, இயற்பெயர் வெ. அண்ணாமலை) புகழ்பெற்ற இந்திய நாவலாசிரியர்களில் ஒருவர் ஆவார். இவருடைய முதல் நாவலான "கோவேறு கழுதைகள்", லட்சுமி ஹாம்ஸ்டார்ம் என்பவரால், “Beasts of Burden“ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டு கால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

எனினும் ராஜ் கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித் சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்[1]

படைப்புகள்[தொகு]

 • கோவேறு கழுதைகள் (1994)
 • ஆறுமுகம் (1999)
 • மண்பாரம் (சிறுகதைகள் 2002)
 • சேடல் (2006)
 • மாரியம்மன் வீடியோ தொகுப்பு (2008)
 • கொலை சேவல் (சிறுகதைத் தொகுப்பு 2013)
 • சாவுச் சோறு (சிறுகதைத் தொகுப்பு 2016)
 • என் கதை (நாவல்) - 2015
 • நறுமணம் (சிறுகதைத் தொகுப்பு) - 2016
 • பெத்தவன் (சிறுநாவல்) - 2012

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டவை[தொகு]

 • கோவேறு கழுதைகள்(Beasts of Burden-2011) - 
 • ஆறுமுகம் (2006)- கதா,புதுடெல்லி
 • பெத்தவன் -( The Begetter]' 2015 - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப்பதிப்பு.

கன்னடத்தில் மொழிபெயர்ப்பு[தொகு]

 • கோவேறு கழுதைகள்- 2009 -  .பாஷாபாரதி-பெங்களூர்

விருதுகள்[தொகு]

 • அக்னி அக்சரா (1994)
 • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் விருது(1994)
 • அமுதன் அடிகள் இலக்கிய விருது(1998)
 • இந்தியக் கலைப் பண்பாட்டுத் துறையின் விருது - 2000
 • தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது(தமிழ்நாடு அரசு) - 2009

மேற்கோள்கள்[தொகு]

 1. Satyanarayana and Tharu (2011). No Alpahbet in Sight: New Dalit Writing from South India 1. New Delhi: Penguin Books. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-143-41426-1. 

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

 • Satyanarayana, K & Tharu, Susie (2011) No Alphabet in Sight: New Dalit Writing from South Asia, Dossier 1: Tamil and Malayalam, New Delhi: Penguin Books.
 • Satyanarayana, K & Tharu, Susie (2013) From those Stubs Steel Nibs are Sprouting: New Dalit Writing from South Asia, Dossier 2: Kannada and Telugu, New Delhi: HarperCollins India.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயம்_(எழுத்தாளர்)&oldid=2715038" இருந்து மீள்விக்கப்பட்டது