இமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

(எண்வகை யோகம்)

   தமிழ்நாட்டில் தோன்றி வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தமிழ் உலகுக்குத் தந்த ஞானப்புதையலே எண்வகை யோகம் அல்லது அஷ்டாங்க யோகம் அல்லது ராஜயோகம் ஆகும்.  இதையே பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் எனவும் கூறப்படுகிறது.

இந்த எண்வகை யோகங்களில் முதல்வகையது இமயம், இமயம் என்பது அறநெறிக்கட்டுப்பாடு ஆகும். இயற்கைக்கு மாறான அனைத்துச் செயற்கைப் பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளைத் தவிர்க்க முயற்சிக்கும் செயலே முதல் நிலையான இமயம் எனக் கொள்ளலாம்.

எப்படி நல்ல அடிப்படையின் மேல் எழுப்பப்படும் கட்டடம் உறுதியுடன் விளங்குமோ அதுபோல இமயம் நியமங்களே சிறந்த மானிட வாழ்வு எனும் கட்டடத்திற்கு சிறந்த மானிட உடலமைப்பிற்கு சிறந்த அடிப்படையாகும்.


ஒப்புநூல்:

விஞ்ஞான நோக்கில் நோய் நீக்கும் மூலிகைகள்: அறந்தாங்கி மருத்துவர் சுப சதாசிவம் எம்.டி,பி.எச்.டி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயம்&oldid=2328526" இருந்து மீள்விக்கப்பட்டது