இமயமலை வரி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலை வரி அணில்
மேற்கு சிக்கிம், கஞ்சன்சுங்கா தேசியப் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சையுரிடே
பேரினம்: தாமியோப்சு
இனம்: தா. மெக்சிலேயாண்டி
இருசொற் பெயரீடு
தாமியோப்சு மெக்லெல்லாண்டி
கோர்சூபீல்டு, 1840
துணையினங்கள்
  • தா. மெ. மெக்லெல்லாண்டி (கோர்சூபீல்டு, 1840)
  • தா. மெ. பார்பி (பிளைத், 1847)
  • தா. மெ. கொலினசு மூரே, 1958
  • தா. மெ. இன்கான்சுடன்சு தாமசு, 1920
  • தா. மெ. கொங்கென்சிசு (போன்கோடே, 1901)
  • தா. மெ. லுகோடிசு (தெம்மினிக், 1853
வேறு பெயர்கள் [2]
  • ? மெக்லெல்லாண்டி கோர்சூபீல்டு, 1840
  • தாமியோப்சு மெக்லெல்லாண்டி (கோர்சூபீல்டு, 1840)
  • தாமியோப்சு மேக்கெல்லாண்டி துணையினம். (தவறு)

இமயமலை வரி அணில் (Himalayan striped squirrel)(தாமியோப்சு மெக்சிலேயாண்டி), என்பது மேற்கத்திய வரி அணில் அல்லது பர்மிய வரி அணில் என்றும் அழைக்கப்படுகிறது.

பரவல்[தொகு]

இமயமலை வரி அணில் சையுரிடே குடும்பத்தில் உள்ள கொறிணிச் சிற்றினமாகும். இது பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வெப்பமண்டலத்திலிருந்து மிதவெப்ப மண்டல பகுதி வரை பல்வேறு காடுகளில் வாழ்கிறது. இந்த சிற்றினம் மரங்களில் வாழும் பகலாடி வகையினைச் சார்ந்தது. இது பழங்கள், காய்கறிகள் மற்றும் பூச்சிகளை உண்ணும். பெரும்பாலும் சிறிய குழுக்களாகக் காணப்படும் இந்த அணில் தங்குமிடத்திற்கு மர துளைகளைப் பயன்படுத்துகிறது.[3][4]

தோற்றம்[தொகு]

இமயமலை மலைகளின் விரைவான மேம்பாடு காரணமாக தாமியோப்சு பரம்பரைகளின் மூன்று பிரிவுகளை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இது 5.8 முதல் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கிடையில் தோன்றிய பல வேறுபாடுகள் காரணமாக இன்றைய தாமியோப்சு சிற்றினங்கள் உருவாக வழிவகுத்திருக்கலாம்.[5]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Duckworth, J.W.; Lunde, D.P.; Molur, S. (2017). "Tamiops mcclellandii". IUCN Red List of Threatened Species 2017: e.T21379A22252047. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T21379A22252047.en. https://www.iucnredlist.org/species/21379/22252047. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Tamiops mcclellandii". Global Biodiversity Information Facility (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 April 2021.
  3. Francis, Charles M. (2008).
  4. Thorington, R. W. Jr., Koprowski, J. L., Steele, M. A. and J. F. Whatton. (2012).
  5. Chang, S.-W.; Oshida, T.; Endo, H.; Nguyen, S. T.; Dang, C. N.; Nguyen, D. X.; Jiang, X.; Li, Z.-J. et al. (2011). "Ancient hybridization and underestimated species diversity in Asian striped squirrels (genus Tamiops ): inference from paternal, maternal and biparental markers: Multi-locus phylogeny of Asian striped squirrels" (in en). Journal of Zoology 285 (2): 128–138. doi:10.1111/j.1469-7998.2011.00822.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_வரி_அணில்&oldid=3510046" இலிருந்து மீள்விக்கப்பட்டது