இமயமலை யோகா அறிவியல் மற்றும் தத்துவ நிறுவனம்

இமயமலை யோகா அறிவியல் மற்றும் தத்துவ நிறுவனம் (The Himalayan Institute of Yoga Science and Philosophy) என்பது ஒரு சர்வதேச இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இந்நிறுவனம் யோகா பயிற்சி முகாம்களை நடத்துகின்றது. அதோடு இந்நிறுவனத்தில் தங்கி ஓய்வு எடுக்கும் இடங்களும் உடல் நலத்திற்கு தேவையான பொருட்களும், சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும் இந்நிறுவனமானது பன்னாட்டு யோகா இதழையும் வெளியிடுகிறது. மனிதாபிமான திட்டங்களையும் மனிதர்களின் ஆரோகியத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளையும் வழங்குகிறது. இந் நிறுவனத்தின் பிரதான வளாகம் வடகிழக்கு பென்சில்வேனியாவின் போகோனோ மலைகளில் (1.6 சதுர கிலோமீட்டர்) அமைந்துள்ளது. மேலும் நிறுவனத்திலேயே தங்கி எடுக்கும் பயிற்சிகளானது பெரும்பாலானவை இங்கேதான் நடத்தப்படுகிறது. இதன் கிளை மையங்கள் கேமரூன் இந்தியா மற்றும் மெக்சிக்கோவிலும் செயல்படுகின்றன. முன்பு கிரேட் பிரிட்டன் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் மையங்கள் இருந்தன.[1]
திட்டங்கள்
[தொகு]இமயமலை யோகா அறிவியல் மற்றும் தத்துவ நிறுவனம் இந்திய யோகா குரு சுவாமி ராமாவால் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] இங்கு யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்காக பயிற்சி பட்டறைகள், இணையவழிக் கல்வி கருத்தரங்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங்கைளயும் வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்திற்கென்று தனியாக அச்சகம் உள்ளது அதன் மூலம் பன்னாட்டு யோகா இதழ் உட்பட பல புத்தகங்களை வெளியிடப்படுகின்றன.[3] மேலும் உடல் நலத்திற்கு உதவக்கூடிய சுகாதார பொருட்களான வர்ச்சோ வேதா மூலிகைச் சாறுகள் விற்பனை மற்றும் நாசி கழுவுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[4]
தன்னலமற்ற தொண்டுகள்
[தொகு]இமயமலை நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.[5] கேமரூன் நாட்டின் கும்போ நகரத்தில் விவசாயம் முழுமையான மருத்துவம் மற்றும் தச்சு வேலைகளில் தொழிற்பயிற்சி கல்வியை வழங்கி வருகிறது.[6] அடுத்ததாக மெக்சிகோவின் இயோனோட்லா நகராட்சியில் இந்த நிறுவனத்தின் ஒரு கிளை மையம் நிலையான விவசாய பட்டறைகளை நடத்துகிறது.[7] மேலும் இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகளுக்கு கர்நாடக மாநிலத்தின் பைலக்குப்பே மற்றும் ரப்கெய்லிங் போன்ற இடங்களில் மக்கள் குடியேற்ற திட்டங்களுக்கு உதவி செய்து வருகின்றது.[8]
இந்தியா[9] கேமரூன் மற்றும் மெக்சிக்கோ [10] ஆகிய நாடுகளில் எரிபொருள் பிரச்சனையை போக்குவதற்காக உயிரி எரிபொருள் பயிர்களை பயிரிடுவது உட்பட பல குறிப்பிடத்தக்க நிலைத்தன்மை மற்றும் மாற்று எரிபொருள் ஆற்றல் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறது. 2010 ஆம் ஆண்டு இந்த அமைப்பானது தலைமையகத்தில் சூரிய வெப்ப ஆற்றல் உற்பத்தி செய்யும் அலகை அமைப்பதற்கு அரசு மானியத்தை பெற்றுள்ளது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Himalayan Institute Branch Centers". Archived from the original on 29 November 2010. Retrieved 2 December 2010.
- ↑ "Our Teaching Legacy". Himalayan Institute. Retrieved 5 March 2022.
- ↑ "Publisher's Catalogues - Himalayan Institute Press". Archived from the original on 2011-07-06. Retrieved 2010-12-02.
- ↑ "Himalayan Institute - Varcho Veda Botanicals". Archived from the original on 2010-11-29. Retrieved 2 December 2010.
- ↑ "Himalayan Institute - Global Humanitarian Projects". Archived from the original on 2011-11-25. Retrieved 2011-12-06.
- ↑ WNEP news story [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Cronkleton, Emily (2021-01-02). "An Energizing Yoga Sequence to Balance Kapha" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-07-22.
- ↑ Tibetan Prime Minister shares insights
- ↑ River Reporter: Biodiesel project started in Africa by local institute
- ↑ "Himalayan Institute - About Pongamia". Archived from the original on 2012-01-04. Retrieved 2012-01-21.
- ↑ Solar Water System to be Installed at Institute