இமயமலைக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலைக் குயில்
கிழக்கு சிக்கிம், நாத்தாங் பள்ளத்தாக்கில்
ஓசை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கு. சாச்சுரேட்டசு
இருசொற் பெயரீடு
குக்குலசு சாச்சுரேட்டசு
(பிளைத், 1790)

இமயமலைக் குயில் (Himalayan cuckoo)(குக்குலசு சாச்சுரேட்டசு) என்பது குக்குலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு குயில் சிற்றினமாகும். இது இமயமலையிலிருந்து கிழக்கு நோக்கி தெற்கு சீனா மற்றும் தைவான் வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் சுந்தா பெருந் தீவுகளுக்குக் குளிர்காலத்தில் வலசைப்போகின்றது.

வகைப்பாட்டியல்[தொகு]

இமயமலைக் குயில், முன்னர் "ஓரியண்டல் குயில்" என்று அழைக்கப்பட்டது. ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் இது பல துணையினங்களைக் கொண்டிருந்தது. 2005ஆம் ஆண்டில், இந்த "இனம்" மூன்று தனித்துவமான பரம்பரைகளைக் கொண்டுள்ளது என்று தீர்மானிக்கப்பட்டது:

  • இமயமலை குயில், குக்குலசு (சாச்சுரேடசு) சாச்சுரேட்டசு
  • ஓரியண்டல் குயில், குக்குலசு (சாச்சுரேடசு) ஆப்டேடசு
  • சுந்தா குயில், குக்குலசு (சாச்சுரேடசு) லெபிடசு

தற்காலத்தில் இவை பொதுவாக தனித்தனி சிற்றினங்களாகக் காணப்படுகின்றன. முன்னாள் மாதிரி இனமானது ஓரியண்டல் குயில் இமயமலை பறவை கூட்டமாகக் கருதப்பட்டதால், இமயமலைக் குயிலிற்கு சாச்சுரேடசு என்ற பெயர் பொருந்தும்.

இமயமலை குயில் - கேங் கிராசென் தேசியப் பூங்கா, தாய்லாந்து

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Cuculus saturatus". IUCN Red List of Threatened Species 2019: e.T61450351A155502296. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61450351A155502296.en. https://www.iucnredlist.org/species/61450351/155502296. பார்த்த நாள்: 12 November 2021. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலைக்_குயில்&oldid=3487952" இலிருந்து மீள்விக்கப்பட்டது