இப்ளோ திரைப்படம்

இப்ளோ திரைப்படம் (Flow) என்பது 2024 ஆம் ஆண்டு அகாதமி விருது பெற்ற அசைவூட்டத் திரைப்படம் ஆகும். இதனை இலாட்விய நாட்டுத் திரைப்பட இயக்குனர் சீன்ட்சு சில்பாலோடிசு (Gints Zilbalodis) இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மனிதர்களே இல்லாத ஒரு உலகில் விலங்குகளின் உயிர்வாழும் போராட்டத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் இலாட்வியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படமாகும். இதில் வசனங்கள் எதுவும் கிடையாது. விலங்குகளின் அசைவுகள், ஒலிகள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாகவே உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கட்டற்ற மென்பொருளான பிளெண்டர் (மென்பொருள்) துணைக் கொண்டு ஐந்தரை ஆண்டு உழைப்பில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]உலகம் ஒரு மாபெரும் வெள்ளத்தில் மூழ்கும் தருவாயில் உள்ளது. ஒரு தனிமையான பூனை, அந்தப் பெருவெள்ளத்தில் இருந்து தப்பிக்க முயல்கிறது. அது ஒரு படகில் தஞ்சம் புகும்போது, அங்கிருக்கும் மற்ற விலங்குகளான ஒரு நீர்நாய் (Capybara), ஒரு லெமூர், ஒரு நாய் மற்றும் ஒரு செயலர் பறவை (Secretary Bird) ஆகியவற்றுடன் இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இந்த விலங்குகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, இந்த இயற்கைப் பேரிடரில் இருந்து எப்படி உயிர் தப்பின என்பதே படத்தின் கதையாகும்.
வரவேற்பு
[தொகு]2024 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' (Un Certain Regard) பிரிவில் இது திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. 97-வது அகாடமி விருதுகளில் (Oscars 2025) 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' மற்றும் 'சிறந்த அனிமேஷன் திரைப்படம்' ஆகிய பிரிவுகளுக்கான லாட்வியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரையாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A Free Software Program Helped Create This Oscar-Winning Movie — And That's a Big Deal". Retrieved 9 February 2026.