இப்ராகிம் ரையீசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்ராகிம் ரையீசி
ஈரானின் 8-வது குடியரசுத் தலைவர்
பதவியேற்பு
3 ஆகஸ்டு 2021
துணை குடியரசுத் தலைவர் TBA
முன்னவர் அசன் ரூகானி
ஈரானின் தலைமை நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மார்ச் 2019
நியமித்தவர் அலி காமெனி, ஈரானின் அதியுயர் தலைவர்
முதல் துணைத் தலைவர் குலாம்-உசைன் மொசெனி-இஜெய்
முன்னவர் சாதிக் லாரிஜனி
ஈரானின் தலைமை அரசு வழக்கறிஞர்
பதவியில்
23 ஆகஸ்டு 2014 – 1 ஏப்ரல் 2016
நியமித்தவர் சாதிக் லரிஜனி
முன்னவர் குலாம்-உசைன் மொசெனி-இஜெய்
பின்வந்தவர் முகமது ஜாபர்
வல்லுநர்கள் மன்றம்
பதவியில்
24 மே 2016 – 21 மே 2016
தொகுதி தெற்கு கொராசான் மாகாணம்
பெரும்பான்மை 325,139 (80.0%)[1]
பதவியில்
20 பிப்ரவரி 2007 – 21 மே 2016
தொகுதி தெற்கு கொராசான் மாகாணம்
பெரும்பான்மை 200,906 (68.6%)
ஈரானின் துணைத் தலைமை நீதிபதி
பதவியில்
27 சூலை 2004 – 23 ஆகஸ்டு 2014
ஈரானின் தலைமை நீதிபதி முகமது ஹஷ்மி ஷாரூத்
முன்னவர் முகமது-ஹாதி மார்வி [2]
பின்வந்தவர் குலாம்-உசைன் மொசெனி-இஜெய்
தலைவர், பொது ஆய்வு அலுவலகம்
பதவியில்
22 ஆகஸ்டு 1994 – 9 ஆகஸ்டு 2004
நியமித்தவர் முகமது யாசிதி
முன்னவர் முஸ்தபா மொககேக் தமாத்
பின்வந்தவர் முகமது நியாசி
தனிநபர் தகவல்
பிறப்பு சையத் இப்ராகிம் ரைசோல்-சதாதி
14 திசம்பர் 1960 (1960-12-14) (அகவை 62)
மஷ்தாத், ஈரானின் பகலவிப் பேரரசு
அரசியல் கட்சி இசுலாமிய மதகுருமார்கள் சங்கம் [3]
பிற அரசியல்
சார்புகள்
இசுலாமிய குடியரசுக் கட்சி (1987 வரை)[3]
வாழ்க்கை துணைவர்(கள்) ஜாமிய அலமோல்ஹூதா [4]
உறவினர் அகமது அலமோல்ஹூதா (மாமனார்)
பிள்ளைகள் 2[5]
படித்த கல்வி நிறுவனங்கள் சாகித் மொதாஹரி பல்கலைக் கழகம்[3]
கோம் செமினரி [3]
இணையம் https://raisi.ir/

செய்யது இப்ராகிம் ரைசோல் அல்லது (இப்ராஹீம் ரையீசி) (Sayyid Ebrahim Raisol-Sadati) (பாரசீக மொழி: سید ابراهیم رئیسالساداتی‎; பிறப்பு 14 டிசம்பர் 1960),[6][7] பொதுவாக இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) என அழைக்கப்படும் இவர் ஈரான் நாட்டின் 8-வது குடியரசுத் தலைவராக 19 சூன் 2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]இவர் அரசியல்வாதியும், ஈரானின் வல்லுநர்கள் மன்ற உறுப்பினரும், இசுலாமிய அறிஞரும் மற்றும் ஈரான் நாட்டின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆவார். மேலும் இவர் ஈரான் நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் போன்ற நீதித்துறையில் பல பதவிகளில் பணிபுரிந்தவர். மேலும் இவர் பழமை வாய்ந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் அஸ்தான் கட்ஸ் ரசாவி அமைப்பின் தலைவராக 2016 முதல் 2019 முடிய பணியாற்றினார்.[10]இவர் தெற்கு கொராசான் மாகாணம் சார்பாக 2006-இல் ஈரானிய அறிஞர் சபைக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியால், 2021 ஈரானிய அதிபர் தேர்தலில்[11] போட்டுயிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட 4 வேட்பாளர்களில் இப்ராகிம் ரைசியும் ஒருவராவர். இவர் வலதுசாரி இசுலாமிய புரட்சிகர படைகளின் பாப்புலர் முன்னணி கட்சியின் சார்பாக 2021 ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.[12]2017-இல் இவர் ஈரானிய அதிபர் தேர்தலில் அசன் ரவ்கானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாமிடத்தில் வந்தார்.[13]

1980களில் இப்ராகிம் ரைசி

தேர்தல் வரலாறு[தொகு]

2021 ஈரான் அதிபர் தேர்தலில்[14] இப்ராகிம் ரையீசி 61.95% வாக்குகளைப் பெற்று ஈரான் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இரானில் சுமார் 5.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.8 கோடி பேர் வாக்களித்தனர். இதில் இப்ராகிம் ரையீசி சுமார் 1.8 (61.95%) கோடி வாக்குகள் பெற்றுள்ளார்.[15] மிகப் பழமையான பார்வைகளை உடைய இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசு தடை விதித்தவர்களில் ஒருவர். இரானில் அதி உயர் தலைவருக்கு அடுத்தபடியாக இராண்டாவது பெரிய அதிகாரம் மிக்க பதவி அதிபர் பதவி ஆகும்.[16]

ஆண்டு தேர்தல் வாக்குகள் % தர வரிசை குறிப்புகள்
2006 2006 ஈரானிய வல்லுநர்கள் மன்றம் 200,906 68.6% முதலிடம் வெற்றி[1]
2016 2016 ஈரானிய வல்லுநர்கள் மன்றம் 325,139 80.0% முதலிடம் வெற்றி[17]
2017 2017 ஈரானிய அதிபர் தேர்தல் 15,835,794 38.28% இரண்டாமிடம் தோல்வி[18]
2021 2021 ஈரானிய அதிபர் தேர்தல் 17,926,345 61.952% முதலிடம் வெற்றி

இப்ராகிம் ரையீசி மீதான உலக நாடுகளின தலைவர்கள் கருத்துகள்[தொகு]

 • இரானில் இப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லியோர் ஹையட், 1988-ஆம் ஆண்டில் அரசியல் கைதிகளை கூண்டோடு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி, டெஹ்ரானின் கசாப்புக்காரர் இப்ராகிம் ரையீசி என தெரிவித்துள்ளார். இப்ராகிம் ரையீசியால் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஹையட் தெரிவித்துள்ளார் இதே எண்ணிக்கையைதான் இரானின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது. இப்ராகிம் ரையீசி த்லைமையிலான நான்கு நீதிபதி கொண்ட மரணக் குழு 5 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மரண தண்டனை விதித்ததாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவிக்கிறது.
 • இரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள "பாரம்பரியமான நட்பு மற்றும் நல் உறவை" சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இப்ராஹிம் ரையீசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சிரியா, இராக், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாட்டின் தலைவர்களும் இதே போன்றதொரு வாழ்த்து செய்தியையும் தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்திதொடர்பாளர், இரான் வளமும் வளர்ச்சியும் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.[19]

ஈரானின் குடியரசுத் தலைவர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "اعلام آرای مجلس خبرگان رهبری در خراسان جنوبی" (in fa). Alef. 27 February 2016 இம் மூலத்தில் இருந்து 8 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170708200533/http://alef.ir/vdchvmnx623nxzd.tft2.html?335108. 
 2. "از نمایندگی امام در مسجد سلیمان تا معاون اولی قوهٔ قضائیه" (in fa). Sadegh Newsletter. 2 March 2015 இம் மூலத்தில் இருந்து 4 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170904235316/http://isunews.ir/11797/%D8%A7%D8%B2-%D9%86%D9%85%D8%A7%DB%8C%D9%86%D8%AF%DA%AF%DB%8C-%D8%A7%D9%85%D8%A7%D9%85-%D8%AF%D8%B1-%D9%85%D8%B3%D8%AC%D8%AF-%D8%B3%D9%84%DB%8C%D9%85%D8%A7%D9%86-%D8%AA%D8%A7-%D9%85%D8%B9%D8%A7%D9%88/. 
 3. 3.0 3.1 3.2 3.3 "زندگی‌نامه حجت‌الاسلام و المسلمین سیدابراهیم رئیسی" (in fa). Official Website of Seyyed Ebrahim Raisi இம் மூலத்தில் இருந்து 2017-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170323021652/http://raisi.org/page/biography. 
 4. "با دختر علم الهدی و همسر رئیسی آشنا شوید/عکس". 22 April 2017 இம் மூலத்தில் இருந்து 24 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170424235455/http://aftabnews.ir/fa/news/440730/%D8%A8%D8%A7-%D8%AF%D8%AE%D8%AA%D8%B1-%D8%B9%D9%84%D9%85-%D8%A7%D9%84%D9%87%D8%AF%DB%8C-%D9%88-%D9%87%D9%85%D8%B3%D8%B1-%D8%B1%D8%A6%DB%8C%D8%B3%DB%8C-%D8%A2%D8%B4%D9%86%D8%A7-%D8%B4%D9%88%DB%8C%D8%AF%D8%B9%DA%A9%D8%B3. 
 5. "مشخصات شناسنامه‌ای 6کاندیدای ریاست‌جمهوری". 21 April 2017 இம் மூலத்தில் இருந்து 14 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190114035031/https://www.tabnak.ir/fa/news/686838/%D9%85%D8%B4%D8%AE%D8%B5%D8%A7%D8%AA-%D8%B4%D9%86%D8%A7%D8%B3%D9%86%D8%A7%D9%85%D9%87%E2%80%8C%D8%A7%DB%8C-6%DA%A9%D8%A7%D9%86%D8%AF%DB%8C%D8%AF%D8%A7%DB%8C-%D8%B1%DB%8C%D8%A7%D8%B3%D8%AA%E2%80%8C%D8%AC%D9%85%D9%87%D9%88%D8%B1%DB%8C. 
 6. "Birth certificate image" இம் மூலத்தில் இருந்து 2017-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170415200607/https://newsmedia.tasnimnews.com/Tasnim/Uploaded/Image/1396/01/25/1396012521503837110529704.jpg. 
 7. "مرد 54 ساله ای که دادستان کل کشور شد، کیست؟/ ابراهیم رئیسی را بیشتر بشناسید" இம் மூலத்தில் இருந்து 2016-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161016044151/http://www.khabaronline.ir/detail/371636/society/judiciary. 
 8. Hardliner Ebrahim Raisi elected Iran’s new president
 9. Who is Ebrahim Raisi, Iran’s next president?
 10. Ra'eesi became chairman of AQR
 11. "Hardline cleric Raisi to take on Rouhani in Iran's presidential election". Reuters. 2017-04-09. https://www.reuters.com/article/us-iran-elections-raisi-idUSKBN17B0DZ. 
 12. "Iran News Round Up", Critical Threats Project, 7 April 2017
 13. "Iran Official Poll Shows Lower Turnout After Elimination Of Key Candidates" (in en). 2021-05-28. https://iranintl.com/en/iran/iran-official-poll-shows-lower-turnout-after-elimination-key-candidates. 
 14. 2021 Iranian presidential election
 15. இரான் தேர்தல்: கடும்போக்காளர் எப்ராஹீம் ரையீசி வெற்றி பெற்றார்
 16. எப்ராஹீம் ரையீசி: இரானின் புதிய அதிபரின் பின்புலம் என்ன? அடுத்த அதி உயர் தலைவர் ஆவாரா எப்ராஹீம் ரையீசி?
 17. "نتایج نهائی انتخابات مجلس خبرگان رهبری در خراسان جنوبی" (in fa). Khavarestan. 27 February 2016 இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170316113552/http://www.khavarestan.ir/node/58685. 
 18. "Final results of presidential election by province and county" (in fa). Ministry of Interior. 8 June 2017 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171010165111/https://www.moi.ir/Portal/home/?news%2F469742%2F469971%2F497969%2F%D8%A7%D9%86%D8%AA%D8%B4%D8%A7%D8%B1-%D9%86%D8%AA%D8%A7%DB%8C%D8%AC-%D8%AA%D9%81%D8%B5%DB%8C%D9%84%DB%8C-%D8%A7%D9%86%D8%AA%D8%AE%D8%A7%D8%A8%D8%A7%D8%AA-%D8%B1%DB%8C%D8%A7%D8%B3%D8%AA-%D8%AC%D9%85%D9%87%D9%88%D8%B1%DB%8C. 
 19. எப்ராஹீம் ரையீசி: இரானின் புதிய அதிபர் குறித்து எச்சரிக்கும் இஸ்ரேல்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ebrahim Raisi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராகிம்_ரையீசி&oldid=3543859" இருந்து மீள்விக்கப்பட்டது