இப்ராகிம் பின் கலீஃபா அல் கலீஃபா
இப்ராகிம் பின் கலீஃபா அல் கலீஃபா ( அரபு : الشيخ ابراهيم بن خليفة آل خليفة) ஓர் பஹ்ரைனின் முன்னாள் வீட்டுவசதிதுறை அமைச்சர் ஆவார்.
பணி
[தொகு]ஷேக் இப்ராகிம் பின் க்லிஃபா அல் கலீஃபா 2007 டிசம்பர் முதல் 2011 வரை பஹ்ரைன் இராச்சியத்தின் வீட்டுவசதிதுறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் இவருக்குப் பதிலாக மன்னர் ஹமாத் இப்னு ஈசா அல் கலீஃபா அவர்கள் மஜீத் அல் அல்வாய் அவர்களை பதவியில் நியமித்தார்.
இவர் வீட்டுவசதி வங்கியின் தலைவர் மற்றும் எப்தா வங்கியின் தலைவர் பதவிகளையும் வகிக்கிறார்.
ஓர் சட்டப்படிப்பில் பட்டதாரியான ஷேக் இப்ராஹிம் பஹ்ரைன் இராச்சியத்தில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். முன்னாள் நிதி துணை செயலாளராக (1993 முதல் 2007 வரை), பஹ்ரைன் பொருளாதார அமைப்பின் துணை ஆளுநராகவும் (இப்போது மத்திய பஹ்ரைன் மத்திய வங்கி) (1982 முதல் 1993 வரை) பணியாற்றியுள்ளார்.
பெய்ரூட் அரபு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பெற்றார்.[1][2]
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shaikh Ibrahim Al Khalifa".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Business Leaders Biography".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)