இப்திகார் கைசர்
இப்திகார் கைசர் (Iftikhar Qaisar உருது: افتخار قیصر ; பிறப்பு 2 மே) ஒரு பிரித்தானிய பாகிஸ்தான் பத்திரிகையாளர், கவிஞர், ஒளிபரப்பாளர், பயண எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] தனது சக எழுத்தாளர்களிடையே ஒரு அச்சமற்ற, மற்றும் முழுமையான தொழில்முறை நிபுணராக இவர் அறியப்படுகிறார்.[2]
கோடைகால விடுமுறை நாட்களில் தனது ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகணத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு பயணம் செய்வதினை பழக்கமாகக் கொண்டதனால் அவர் ஒரு சாகச பயணி என்று அறியப்படுகிறார்.[3] லண்டனை தலைமையிடமாகக் கொண்ட அதிக அளவில் விற்பனை ஆன உருது செய்தித்தாள்களான டெய்லி ஜாங் [4] மற்றும் தி நியூஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றில் இவர் ஆசிரியராக பணியாற்றினார். செய்தித்தாள்களில் தனது நிலைப்பாடுகளுக்கு இணங்க, அவர் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கான ஜியோ நியூஸின் பணியகத் தலைவராக இருந்தார்.[5]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]குடும்பம்
[தொகு]பாகிஸ்தானின் சாஹிவால் மாவட்டத்தில் உள்ள சூஃபி கவிஞர் பாபா ஃபரித்தின் பிறந்த நகரமான பாக்பட்டனில் இப்திகார் கைசர் பிறந்தார். அது அவரது தாயின் பூர்வீக நகரமாகவும் இருந்தது. பக்பட்டனில் பிறந்தவர் என்றாலும் இவர் மற்றொரு சுஃபி கவிஞர் (கவாஜா அம்ஜயர் கிருஸ்டி) சிஸ்தியன் மண்ட்டியில் வளர்ந்தார். கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பாடகர்களை உருவாக்கும் மாவட்டமாக ஜலந்தர் அறியப்பட்டது. இப்திகார் கைசர் பிறப்பதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்புதான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது, எனவே இவரின் வீட்டிற்கு குடிபெயர்ந்து வந்த நோயாளிகள் அடிக்கடி வந்ததாக இவர் கூறியுள்ளார். அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல இரு தரப்பு அதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் கூறினர். இந்தியாவில் தான் வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை இவர் நினைவு கூர்கிறார். மேலும் தனது இந்து மற்றும் சீக்கிய நண்பர்களையும் இவர் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் உள்ள பல கலாச்சாரம் மற்றும் பல மத இந்திய சமுதாயத்தை அவர்கள் பாராட்டியதாகவும், புலம்பெயர்ந்தோர் பாக்கிஸ்தானுக்கு செல்வது தற்காலிகமானது என்றும், இனவெறித் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டவுடன் தாங்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகளால் கூறப்பட்டதாகக் கூறினார். அவர்களில் பலர் தங்கள் உடைமைகளில் பெரும்பகுதியை இந்தியாவில் விட்டுச் சென்றார்கள், அவர்கள் ஒரு நாள் திரும்பி வருவார்கள் என்று நினைத்ததாகக் கூறியதாக இவர் கூறினார். இந்திய முஸ்லீம் புலம்பெயர்ந்தோர் அனைவரும் இந்தியாவில் இதுவரை ஆட்சி செய்தவர்களில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தது பிரித்தானிய ஆட்சி என்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
கல்வி மற்றும் கவிதை
[தொகு]அவர் ஒரு குழந்தையாக இருந்தபோது பாகிஸ்தான் கல்வி முறையை வெறுத்தாகக் கூறியுள்ளார். எனவே தனது பெரும்பாலான நேரத்தை பள்ளியை விட தனது ஊரில் உள்ள ஒரே உள்ளூர் நூலகத்தில் கழித்தார். இங்குதான் அவர் உருது இலக்கியம், அரசியல் மற்றும் கவிதை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். அவர் தனது கவிதைகளை பள்ளியில் படிக்கும் காலம் முதலே எழுதத் தொடங்கினார், மேலும் அவர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்த அவரது ஆசிரியர் அப்துல் ஹமீத் ஷாகேப் என்பவரால் ஊக்கப்படுத்தப்பட்டார். சிறு வயதிலிருந்தே அவரது கவிதைகள் 'டெய்லி இம்ரோஸ்' போன்ற செய்தித்தாள்களின் குழந்தைகள் பிரிவில் வெளியிடப்பட்டன. அவர் தனது கல்லூரியில் வெளியான பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். மேலும் அவரது கல்லூரியின் (அரசு பட்டப்படிப்பு கல்லூரி சிஷ்டியன் மண்டி) இலக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது கல்லூரியின் கவிதை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர்களுக்கான கவிதைப் போட்டிகளில் பலவற்றில் வெற்றி பெற்றார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Hello Ibn Battuta". See TV. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A Tribute to Iftikhar Qaisar Ex Editor Daily Jang Geo UK". Daily Motion. Overseas Pakistan Trust OPT. பார்க்கப்பட்ட நாள் 21 March 2016.
- ↑ "Hello Ibn Battuta - See Tv". See Tv (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
- ↑ "The Daily Jang". The Daily Jang.
- ↑ "London protest in defence of Geo TV in Pakistan". Socialist Worker. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.