உள்ளடக்கத்துக்குச் செல்

இபிஸா பேராலயம்

ஆள்கூறுகள்: 38°54′24″N 1°26′12″E / 38.90667°N 1.43667°E / 38.90667; 1.43667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபிஸா தேவாலயம்
இபிஸா தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இபிஸா நகரம், இபிசா, பலேரிக் தீவுகள், எசுப்பானியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
நிலைதுணை தேவாலயம்

இபிஸா தேவாலயம் (காட்டலான் மொழி: Catedral de la Verge de les Neus, எசுப்பானியம்: Catedral de Nuestra Señora de las Nieves) இபிஸா நகரின் பிரதான கிருத்துவ திருக்கோயிலும் தேவாலயமும் ஆகும்.

வரலாறு

[தொகு]
இபிஸா தேவாலயம் உள்ள பழைய நகரம்

1234 ம் ஆண்டில், அத்தீவை பிற்காலத்தில் கைப்பற்றிய கில்லர்மோ டி மான்ட்கிரி, போர்த்துக்கலை சேர்ந்த பீட்டர், நூனோ சான்க் ஆகியோர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் படி அவர்கள் இபிஸாவை கைப்பற்றியவுடன் புனித மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருச்சபை ஸ்தாபிப்பது தங்கள் முதல் கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர். இதன் விளைவாக, இபிஸா நகரம் 1235 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று கைப்பற்றப்பட்டவுடன் ஒரு திருச்சபை நிறுவப்பட்டது. முதலில் வழிபாடு அப்பகுதியில் ஏற்கனவே இருந்த ஒரு இசுலாமிய மசூதியில் நடைபெற்றது.

தற்போதுள்ள கட்டமைப்பு மூல கட்டிடத்திற்கு செய்யப்பட்ட ஏராளமான மாற்றங்களின் விளைவாக உருவானது. கிழக்கு பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இது ஒரு சரிவக மணி கோபுரம், மற்றும் ஐந்து சிறு கோயில்கள் அடங்கிய ஒரு பல்கோண கவியத்தையும் உள்ளடக்கும்.

இபிஸா தேவாலயம்

1435ம் ஆண்டில், இந்த தேவாலயத்தில் செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் மிக்கேல், புனித தெக்ளா மற்றும் புனித அந்தோனியார், புனித திருமுழுக்கு யோவான், யோவான் மற்றும் திருத்தூதர் பேதுரு மற்றும் திருத்தூதர் பவுல் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து சிறு கோயில்கள் இருந்தன. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு நடு கூடம் கட்டப்பட்டு, பிரான்கோளினால் கட்டப்பட்ட ஃபோண்டா கோயிலுடன் நிறைவுக்கு வந்தது.

கடும் சேதத்திற்கு உள்ளானதால், எட்டாம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டது. இப்பணி நகர கட்டுமானத்திற்கு பொருப்பாளர்களான (obrers de la vila) ஜேமி எஸ்பினோஸா மற்றும் பேரே பெர்ரோ ஆகியோரின் மேற்பார்வையில் 1715 - 1728 ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது. 1782ம் ஆண்டில், புனித தந்தை ஆறாம் பியஸ் இபிஸாவின் episcopal see தோற்றுவித்தார். இதன் காரணமாக புனரமைக்கப்பட்ட இந்த இடைக்கால தேவாலயம், தேவாலயம் ஆனது.

இன்று இத்தேவாலயம் குறிப்பிடத்தக்க பல கலை படைப்புகளை வைத்திருக்கிறது:

  • 1399ம் ஆண்டில் ஃப்ரான்சே மார்டியால் தங்கத்தாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட புனித அப்பம் வைக்கும் கோதிக் கலம்.
  • நான்காம் நூற்றாண்டில் ஃப்ரான்சே கார்னெஸினால் வரையப்பட்ட புனித தெக்ளா, புனித அந்தோனியார் அகியோருக்கு இரண்டு கோதிக் சட்டங்கள்.
  • புனித  ஜேம்ஸ், புனித மத்தேயு ஆகியோரை போற்றும் விதமாக ஐந்தாம் நூற்றாண்டில் மாஸ்டர் வேலண்டி மோன்டோலியூவால் மூலம் வரையப்பட்ட மேலும் இரண்டு கோதிக் சட்டங்கள்.

சான்றுகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இபிஸா_பேராலயம்&oldid=4128323" இலிருந்து மீள்விக்கப்பட்டது