இபின் வராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபின் வராக்
பிறப்பு1946
ராஜ்கோட்
படித்த இடங்கள்
பணிஎழுத்தாளர், பத்திரிக்கையாளர்

இபின் வாரக் (Ibn Warraq) எனும் புனைப் பெயரால் இவர் இஸ்லாத்தை விமர்சிக்கும் எழுத்தாளர் ஆவார் . இவர் இஸ்லாமிய சங்கத்தின் மதச்சார்பின்மைக்கான நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், மேலும் குர்ஆனிய விமர்சனங்களை மையமாகக் கொண்ட விசாரணை மையத்தில் [1][2] மூத்த ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.[3][4] தற்போது இவர் உலக என்கவுண்டர் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார்.[5]

இஸ்லாமிய வரலாற்று வல்லுநர்களால் இவரின் இசுலாம் பற்றிய வர்ணனையானது முரண்பாடானது, அதிகப்படியான சீராய்வுவாதி மற்றும் நிபுணத்துவம் இல்லாதது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது,[6][7] அதே சமயத்தில் மற்றவர்கள் இவரின் கருத்துக்கள் யாவும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும், ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை மற்றும் துல்லியமானவை என்று பாராட்டினர்.[8][9]

அவர் ஒன்பது புத்தகங்கள் உட்பட, குரான் தோற்றம் (1998), வரலாற்று முஹம்மதுவுக்கான நீண்ட தேடல் (2000), குரான் உண்மையில் என்ன கூறுகிறது: மொழி, உரை மற்றும் வர்ணனை (2002) உள்ளிட்ட ஒன்பது நூல்களை இவர் எழுதியுள்ளர்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தனது 19 ஆம் வயதில் இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர ஸ்காட்லாந்து சென்றார், அங்கு அவர் இஸ்லாமிய ஆய்வு அறிஞரான டபிள்யூ. மாண்ட்கோமெரி வாட் உடன் இணைந்து தத்துவம் மற்றும் அரபு மொழியைப் பயின்றார்.[10]

பட்டம் பெற்ற பிறகு, இவர் ஐந்து ஆண்டுகள் லண்டனில் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தார், மேலும் 1982 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் பிரான்சுக்குச் சென்று, ஒரு இந்திய உணவகத்தினை சொந்தமாக நடத்தி வந்தார். இவர் ஒரு பயண முகவராகவும் பணியாற்றினார்.

எழுதுதல் மற்றும் வேலை[தொகு]

ருஷ்டி விவகாரத்தின்போது, கிறிஸ்தவம் மற்றும் யூத மதம் மீது அடிக்கடி கடுமையான தாக்குதல்கள் நடப்பதை இப்னு வாரக் கவனித்தார், ஆனால் இஸ்லாத்தின் மீது இவ்வாறான தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதனைக் கவனித்தார். மேலு ஒரு மனிதன் சுயமாக சிந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் இங்கு இல்லை எனத் தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்துக்கள் கண்டனங்களுக்கு ஆளானது.பலர் இவரை குற்றம் சாட்டினர்.[11] இதன் காரணமாக, வார்ராக் அமெரிக்க மதச்சார்பற்ற மனிதநேய வெளியீடான ஃப்ரீ என்கொயரி இதழுக்காக "நான் ஏன் முஸ்லீம் அல்ல" போன்ற தலைப்புகளில் இவர் எழுதத் துவங்கினார்.[10][12]

வரவேற்பு[தொகு]

பாராட்டு[தொகு]

1996 ஆம் ஆண்டில் நான் ஏன் ஒரு முஸ்லீம் அல்ல என்ற நூலினைப் பற்றி பின்வருமாரு டேனியல் பைப்ஸ் எழுதினார், "சில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் இவரின் இந்த நூலானது மேற்கத்திய பாரம்பரிய இஸ்லாமிய ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதாகவும் இசுலாம் மதத்தின் மீதான இவரின் கோபத்தினைத் தவிர்த்துப் பார்த்தால் இவர் ஒரு தீவிரமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் நீல் ஒன்றினை எழுதியுள்ளார் எனத் தெரிவித்தார்.[13] நான் ஏன் ஒரு முஸ்லீம் அல்ல (1995) நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட மற்றும் மிகவும் புத்திசாலியான ஒரு நூல் என பைப்ஸ் எனும் விம்ர்சகர் இந்த நூலினைப் பாராட்டினார்..[8] டேவிட் பிரைஸ்-ஜோன்ஸ் என்பவர் இந்த நூலானது குர்ஆன் மற்றும்நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் அவரின் போதனைகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கலாச்சார மாற்றங்கள் பற்றிய ஒரு ஆவணம் என்று கூறினார்.[14] கிறித்தோபர் இட்சன்சு நான் ஏன் ஒரு முஸ்லீம் அல்ல எனும் நூல் இசுலமில் தனக்கு மிகவும் பிடித்த நூல் எனத் தெரிவித்துள்ளார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. Murray, Douglas (3 October 2007). "Don't be afraid to say it". http://www.spectator.co.uk/essays/all/222546/part_2/i-am-not-afraid-to-say-the-wests-values-are-better.thtml. 
 2. Ronald A. Lindsey (2010-09-30). "A Bittersweet Farewell". http://www.centerforinquiry.net/blogs/entry/a_bittersweet_farewell/. 
 3. "Intelligence Squared Debates on the topic "We should not be reluctant to assert the superiority of Western values"". 9 October 2007. http://www.spectator.co.uk/intelligence/242761/we-should-not-be-reluctant-to-assert-the-superiority-of-western-values.thtml. 
 4. "Religion, Ethics, and Society - Experts and Scholars". http://www.centerforinquiry.net/newsroom/press_information/religion/. 
 5. "World Encounter Institute Mission Statement". http://www.newenglishreview.org/World%5FEncounter%5FInstitute/. 
 6. Donner, Fred. (2001) Review: The Quest for the Historical Muhammad பரணிடப்பட்டது 11 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம். Middle East Studies Association Bulletin, University of Chicago.
 7. Dutton, Y. (2000) Review: The Origins of the Koran: Classic Essays on Islam’s Holy Book. Journal of Islamic Studies.
 8. 8.0 8.1 Daniel Pipes, "Why I Am Not a Muslim," Weekly Standard, January 22, 1996 pg1 "Ibn Warraq brings a scholarly sledge-hammer to the task of demolishing Islam. Writing a polemic against Islam, especially for an author of Muslim birth, is an act so incendiary that the author must write under a pseudonym; not to do so would be an act of suicide. And what does Ibn Warraq have to show for this act of unheard-of defiance? A well-researched and quite brilliant, if somewhat disorganized, indictment of one of the world's great religions. While the author disclaims any pretense to originality, he has read widely enough to write an essay that offers a startlingly novel rendering of the faith he left."
 9. David Cook, "Ibn Warraq. Virgins? What Virgins? and Other Essays" in Reason Papers: A Journal of Interdisciplinary Normative Studies, vol. 34, no. 2 (October 2012), p. 235
 10. 10.0 10.1 Priya Abraham, "Dissident voices," World Magazine, Vol. 22, No. 22, June 16, 2007 (accessed January 1, 2014; archive available at World Magazine "Dissident Voices" at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 11 நவம்பர் 2013))
 11. D.J. Grothe. "Ibn Warraq - Why I Am Not a Muslim". http://www.pointofinquiry.org/ibn_warraq_why_i_am_not_a_muslim/. 
 12. Lee Smith (August 2003). "Losing his religion". http://www.boston.com/news/globe/ideas/articles/2003/08/17/losing_his_religion_boston_globe?mode=PF. 
 13. Daniel Pipes, "Why I Am Not a Muslim," Middle East Quarterly, Vol. III, Num. 1, March 1996
 14. David Pryce-Jones "Enough Said," The New Criterion, January 2008
 15. Christopher Hitchens, "Holy Writ," The Atlantic, April 1, 2003.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபின்_வராக்&oldid=3593272" இருந்து மீள்விக்கப்பட்டது