இபான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபான் மொழி
Jaku Iban
நாடு(கள்)புரூணை, இந்தோனேசியா, மலேசியா
பிராந்தியம்போர்னியோ
இனம்இபான் மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,297,700  (2017)[1]
1,700,000 (மலேசியா) (2017)[1]
ஆஸ்திரோனீசிய மொழிகள்
இலத்தீன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2iba
ISO 639-3iba
மொழிக் குறிப்புiban1264[2]

இபான் மொழி, (மலாய்: Bahasa Iban; ஆங்கிலம்: Iban Language); என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள இபான் மக்களின் (Iban People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். அத்துடன் இந்த மொழி தயாக்கு மக்கள் (Dayak People) பேசும் மொழியின் இனத்தைச் சேர்ந்த மொழி என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மொழியைப் பேசுபவர்கள் புரூணை, இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மாநிலம் மற்றும் மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் வாழ்கின்றனர்.

பொது[தொகு]

இபான் மொழி என்பது தயாக்கு (அதாவது போர்னியோவின் பூர்வீக மக்கள்) என்ற பொதுக் குழுவின் கீழ் வரும் இபான் மக்களின் தாய் மொழியாகும். முன்னதாக, காலனித்துவ காலத்தில் இபான்கள் "கடல் தயாக்குகள்" என்று குறிப்பிடப்பட்டனர்.

இபான் மக்களின் தாயகம் போர்னியோ தீவு ஆகும். இந்தத் தீவு மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இபான்கள் பெரும்பாலும் மலேசிய மாநிலமான சரவாக்கில் காணப் படுகின்றனர்.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 இபான் மொழி
    Jaku Iban
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Iban". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இபான்_மொழி&oldid=3672320" இலிருந்து மீள்விக்கப்பட்டது