இன் த லைன் ஆஃப் ஃபயர்
நூலாசிரியர் | பெர்வேஸ் முஷாரஃப் |
---|---|
நாடு | பாகிஸ்தான் |
மொழி | ஆங்கிலம் |
பொருண்மை | தன்வரலாறு, வாழ்க்கை நினைவுக் குறிப்பு |
வெளியீட்டாளர் | ஃபிரீ பிரஸ் |
வெளியிடப்பட்ட நாள் | 2006 |
ஆங்கில வெளியீடு | செப்டம்பர் 25, 2006 |
ஊடக வகை | கடின அட்டை |
பக்கங்கள் | 368 |
ISBN | 074-3283449 |
OCLC | 70778393 |
954.9105/3 22 | |
LC வகை | DS389.22.M87 A3 2006 |
இன் த லைன் ஆஃப் ஃபயர் (In the Line of Fire) என்பது பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எழுதிய புத்தகம் ஆகும். இப்புத்தகமானது 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் பெர்வேஸ் முஷாரஃபின் நினைவுகளின் தொகுப்பு ஆகும். அவரது சுயசரிதை என்ற விளம்பரத்தோடு வெளியிடப்பட்டது.
உள்ளடக்கம்
[தொகு]இப்புத்தகத்தில் முஷாரஃபின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தேசிய சர்வதேச விஷயங்கள் அடங்கியுள்ளது. அவர் அவரது இளமைக் காலத்தைப் பற்றியும் அவரது கல்வி மற்றும் துருக்கியில் அவர் கழித்த வாழ்க்கையைப் பற்றியும் இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் அவர் அதிகாரத்தில் மற்றும் ஆட்சியில் இருந்த போது நடந்த நிகழ்வுகளையும் எழுதியுள்ளார். இதில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய போது நடந்த நிகழ்ச்சிகளையும் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு
[தொகு]இப்புத்தகம் ஆங்கிலம், உருது தவிர இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் மற்றும் வங்காள மொழிகளில் வெளியானது.
தமிழில்
[தொகு]இப்புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக உடல் மண்ணுக்கு என்ற தலைப்பில் (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8368-252-9) வெளியாகியுள்ளது. இப்புத்தகம் ரூபாய் 250 விலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி 30 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது.