இன்ஷா அல்லாஹ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்ஷா அல்லாஹ்
இயக்கம்சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்
தயாரிப்புசாகுல் அமீது
திரைக்கதைசீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்
நடிப்பு
கலையகம்நேசம் எண்டர்டெயன்மெண்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்ஷா அல்லாஹ் என்பது வெளிவரவுள்ள ஒரு தமிழ் இசுலாமிய திரைப்படமாகும். உலக சினிமா பாஸ்கரன் என்னும் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கிய இத்திரைப்படத்தில் மோக்லி கே. மோகன், மேக்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேசம் எண்டர்டெயன்மெண்ட் என்ற பதாகையின் கீழ் சாகுல் அமீது படத்தை தயாரித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

உருவாக்கம்[தொகு]

தோப்பில் முகமது மீரானின் அன்பிற்கு முதுமையில்லை என்ற சிறுகதையும், பிர்தவுஸ் ராஜகுமாரனின் ரணம் என்ற சிறுகதையும் ஒரு புள்ளியில் இணைவதைக் கண்ட பாஸ்கரன் அந்த இரு சிறுகதைகளையும் இணைத்து திரைக்கதை அமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது கோவைப் புறநகர் பகுதியான பிள்ளையார்புரம், பழனிக்கு அருகிலுள்ள கீரனூர், கேரளத்தின் கொடுங்கலூர் ஆகிய இடங்களில் நடத்தபட்டது. மேலும் இந்தியாவில் முதன் முதலாகக் கட்டப்பட்டதாக கருதப்படும் சேரமான் பள்ளிவாசலில் படமாக்கப்பட்டிருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையும் இதற்கு உண்டு.

நடிகர்கள்[தொகு]

திரைப்பட விழாக்களில்[தொகு]

இத்திரைப்படமானது உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, இதுவரை ஏழு விருதுகளைப் பெற்றிருப்பதுடன், 25 படவிழாக்களில் ‘அஃபீஷியல் செலக்‌ஷன்’ என்கிற கௌரவத்துடன் திரையிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ‘உபுட்’ சர்வதேசத் திரைப்பட விழாவில், இப்படத்தின் நாயகியான மேக்னாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.[1]

வெளியீடு[தொகு]

இன்ஷா அல்லாஹ் படமானது 2021 மே 14 அன்று ரம்ஜானை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]