உள்ளடக்கத்துக்குச் செல்

இன்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்வா
အင်းဝ
அவா
ஆள்கூறுகள்: 21°51′N 95°59′E / 21.850°N 95.983°E / 21.850; 95.983
நாடுமியான்மர்
மாநிலம்மண்தாலே பிரதேசம்
மாவட்டம்கயாக்சி மாவட்டம்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு26 பிப்ரவரி 1365
மக்கள்தொகை
 • Ethnicities
Bamar
 • Religions
தேரவாத பௌத்தம்
நேர வலயம்ஒசநே+6.30 (MST)

இன்வா அல்லது அவா (Inwa அல்லது Ava,) என்பது மியான்மரின் மண்தாலே மாநிலத்தில் உள்ள ஒரு பழமையான நகரம். 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பர்மிய இராச்சியங்களின் பண்டைய ஏகாதிபத்திய தலைநகரமாக இருந்திருக்கிறது. வரலாறு முழுவதும், இந்நகரம் பலமுறை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டள்ளது. மார்ச் 1839 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பெரும் பூகம்பங்களால் இந்நகரம் அழிக்கப்பட்டது, பின்னர் இந்நகரம் கைவிடப்பட்டது. இந்த நகரம் இருந்ததற்கான ஒரு சில தடயங்கள் மட்டுமே இன்று இருந்தபோதிலும், மண்தாலே பகுதியில் ஒரு மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது.

சொல்லிலக்கணம்

[தொகு]

இன்வா என்றப் பெயரின் பொருள் இலக்கியரீதியாக ஏரியின் வாய் என்பதாகும். இந்தப் பெயர் கயாக்சி மாவட்டத்தில் உள்ள இந்நகரத்தின் புவியியல் அமைப்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்நகரம் ஏரியின் அருகில் அமைந்துள்ளது. மற்றொரு கோட்பாடு இனாவாவில் இருந்து இன்வா பெறப்பட்டதாகக் கூறுகிறது, இதன் பொருள் ஒன்பது ஏரிகள் என்பதாகும். [1] பாலி மொழியில் நகரின் பாரம்பரிய பெயர் இரத்தினபுரா (பொருள்-இரத்தினங்களின் நகரம்) என்பதாகும். [2][3]

வரலாறு

[தொகு]

இன்வா பர்மாவின் தலைநகரமாக கிட்டத்தட்ட 360 ஆண்டுகள், ஐந்து தனித்தனி சந்தர்ப்பங்களில், 1365 முதல் 1842 ஆண்டு வரை இருந்தது. இவ்வாறு பர்மாவின் முக்கிய ஆட்சி அதிகார மையமாக இருந்த இன்வாவின் பெயராலேயே 19 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பியர்கள் பர்மாவை அறிந்திருந்தனர்.

அடித்தளம்

[தொகு]

புவியியல் ரீதியாக மேல் பகுதி பர்மாவில், அரிசி விளையும் கயாக்சி மாவட்டத்தில், இர்ராவாடி மற்றும் மயிடகி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இன்வா அமைந்துள்ளது. அவாவின் இடம் 1310 ஆம் ஆண்டில் மன்னர் திஹாதுவால் தலைநகரம் அமைக்க சாத்தியமான தளமாகக் கருதப்பட்டது. எனினும் மன்னர் திஹத்து இறுதியில் 1313 ல் கிழக்கே சில மைல் தூரத்தில் பின்யாவில் தனது புதிய தலைநகரத்தைக் கட்டி எழுப்பினார். செப்டம்பர் 1364 ஆண்டில் சகாங் மற்றும் பின்யா ராஜ்யங்களை இணைத்த திஹதுவின் கொள்ளுப் பேரன் தாடோ மின்பியா, தனது புதிய தலைநகரமாக இன்வாவின் தளத்தைத் தேர்ந்தெடுத்தார். வடக்கில் இர்ரவாடி ஆற்றையும் கிழக்கில் மயிடகி ஆற்றையும் இணைக்கும் தென்மேற்காக அமைந்த கால்வாயால் உருவான செயற்கைத் தீவில் 26 பிப்ரவரி, 1365 ஆண்டில் இன்வா நிறுவப்பட்டது. ஏரி மற்றும் சதுப்பு நிலங்களை நிரப்புவதன் மூலம் அந்த செயற்கை தீவு உருவாக்கப்பட்டது.


அவா காலம் (14 முதல் 16வது நூற்றாண்டு வரை)

[தொகு]

1555 ஆம் ஆண்டில் மன்னர் தடோ மின்பியாவால் இன்வா தலைநகரமாக மாற்றப்பட்டு அவா இராச்சியம் என்றழைக்கப்பட்டு, மேல் பகுதி பர்மாவின் பெரிய அரசியல் சக்தியாய் இருந்தது. இந்த காலகட்டத்தில், பிரதானமாக பாலி மொழியில் மட்டுமல்லாது உள்ளூர் பர்மிய மொழியிலும் எழுத முற்பட்ட துறவிகளின் முயற்சிகள் மூலம் பர்மிய இலக்கியம் நன்கு வளர்ச்சிப் பெற்றது. [4] இந்தக் காலத்தில் தான் விமர்சனத்திற்குட்பட்ட பல பர்மிய சட்டக் குறியீடுகளின் இரண்டாம் தலைமுறை (தாம்மதாட்ஸ்) முந்தைய தொகுப்புகள், புதிய கவிதை வடிவங்கள் மற்றும் பழைய வேத வசனங்கள், ஆரம்பகால பர்மாவின் பர்மிய மொழியின் வரலாற்றுக் கூறுகள் அனைத்தும் திருத்தப்பட்டு பரிபூரணம் ஆனது. [4] 1511 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்நகரில் உருவாக்கப்பட்ட புதிய நேர்த்தியான தங்க அரண்மனை மன்னர் சவேநன்கயாசின் பெயரால் அவரது இறப்புக்குப்பின் அறியப்படுகிறது. [5]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khin Khin Aye 2007: 60
  2. ဦးဟုတ်စိန်. "Entry for ratana". ပါဠိမြန်မာ အဘိဓာန် (Pāḷi-Myanmar Dictionary) (in Burmese). Pali Canon E-Dictionary Version 1.94. பார்க்கப்பட்ட நாள் 15 February 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. ဦးဟုတ်စိန်. "Entry for pura". ပါဠိမြန်မာ အဘိဓာန် (Pāḷi-Myanmar Dictionary) (in Burmese). Pali Canon E-Dictionary Version 1.94. பார்க்கப்பட்ட நாள் 15 February 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 Lieberman 2003: 134
  5. Khin Khin Aye 2007: 61

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Inwa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்வா&oldid=3723163" இலிருந்து மீள்விக்கப்பட்டது