இன்லே ஏரி
| இன்லே ஏரி | |
|---|---|
இன்லே ஏரியில் உள்ள தூண் வீடும், மிதக்கும் தோட்டப் பாத்தியும் | |
| அமைவிடம் | ஷான் மாநிலம் |
| ஆள்கூறுகள் | 20°33′N 96°55′E / 20.550°N 96.917°E |
| வகை | பல வெப்பஅடுக்கு ஏரி |
| முதன்மை வெளியேற்றம் | நாம் பிலு |
| வடிநில நாடுகள் | மியான்மர் |
| மேற்பரப்பளவு | 44.9 sq mi (116 km2) |
| சராசரி ஆழம் | 5 அடி (1.5 m) (வறண்ட பருவத்தில்) |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | 2,900 அடி (880 m) |
| அலுவல் பெயர் | Inlay Lake Ramsar Site |
| தெரியப்பட்டது | 5 திசம்பர் 1974 |
| உசாவு எண் | 2356[1] |
இன்லே ஏரி (Inle Lake, பர்மீயம்: εύλτηνη, MLCTS: ang:le:kan, [ɑːɪ̃lé kà̃]]) என்பது மியான்மரில் உள்ள ஷான் மலைப்பகுதிகளில் உள்ள ஷான் மாநிலத்தின் நியாங்ஷ்வே நகரியத்தில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். இது மியான்மரின் இரண்டாவது பெரிய ஏரியாகும், இதன் பரப்பளவு சுமார் 44,9 சதுர மைல்கள் (116 கிமீ) ஆகும். மேலும்கடல் மட்டத்தில் இருந்து 2,900 அடி (880 மீ) உயரத்தில் அமைந்துள்ள, இது நாட்டின் மிக உயரமான ஏரியில் ஒன்றாகும். வறண்ட பருவத்தில், இதன் சராசரி ஆழம் 7 அடி (2 மீ) ஆகவும், அதிகபட்ச ஆழம் 12 அடி (3.7 மீ) ஆகவும் இருக்கும். மழைக்காலத்தில், இதன் ஆழம் 5 அடி (1.5 மீட்டர்) வரை அதிகரிக்கக்கூடும்.
ஏரியின் நீர்பிபிப்புப் பகுதி பெரும்பாலும் ஏரியின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஏரியின் தெற்குப் பகுதியில் நாம் பிலு அல்லது பாலு சௌங் வழியாக நீர் வெளியேறுகிறது. இதன் வடமேற்குக் கரையில் ஒரு வெந்நீர் ஊற்றும் உள்ளது.
ஏரியின் பெரும் பகுதிகள் நீர் வாழ் தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் தெளிவான மற்றும் சற்றே காரத்தன்மை கொண்ட நீர் (பி.எச் 7.8–8) பலதரப்பட்ட விலங்கினங்களுக்கும், உலகில் வேறு எங்கும் காணப்படாத பல உயிரினங்களுக்கும் (அகணிய உயிரி) இருப்பிடமாக உள்ளது.[2] 17 அகணிய உயிரினங்கள் உட்பட, 35-இக்கும் மேற்பட்ட உள்ளூர் மீன் இனங்கள் உள்ளன. இவற்றில் சில, குறிப்பாக சாப்வா பார்ப், சிவப்பு குள்ள ராஸ்போரா, மரகத குள்ள ராஸ்போரா, இன்லே ஏரி டேனியோ, இன்லே லோச், இன்லே ஸ்னேக்ஹெட் ஆகியவை நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை வர்த்தகத்திற்கு ஓரளவு வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பல மீன்கள் இங்கு அறிமுகப்படுத்தபட் உயிரினங்களாக உள்ளன.[2][3] கூடுதலாக, இந்த ஏரி சுமார் 45 நன்னீர் நத்தை இனங்களுக்கு இருப்பிடமாக உள்ளது, அவற்றில் 30 அகணிய இனங்கள்,[2] மேலும் இன்லெதெல்ஃபுசா அகந்திகா என்ற ஒரு சிறிய அகணிய நன்னீர் நண்டும் உள்ளது.[4] இது நவம்பர் முதல் சனவரி வரை சுமார் 20,000 வலசை செல்லும் கடல் புறாகளுக்கு உணவளிக்கிறது.
2015 சூனில், இது மியான்மரின் உலக உயிர்க்கோளக் காப்பகங்களின் வலையமைப்பின் நியமிக்கப்பட்ட முதல் இடமாக ஆனது.[5] யுனெஸ்கோவின் 27 வது மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (எம்ஏபி) சர்வதேச ஒருங்கிணைப்பு குழு (ஐசிசி) கூட்டத்தில் சேர்க்கப்பட்ட 20 இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[6] 2018 முதல் இது பாதுகாக்கப்பட்ட ராம்சர் தளமாக அறிவிக்கபட்டுள்ளது. இன்று மாசுபாட்டால், வண்டல் மண், ஊட்டஞ் செறிதல், அதிகப்படியான மீன்பிடித்தல் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட ஆகாயத் தாமரை உள்ளிட்ட அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்கள் காரணமாக ஏரியின் சுற்றுச்சூழல் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. உள்ளூர் வேட்டையாடும் மீன் இனமான சிஸ்டோமஸ் கம்ப்ரஸிஃபார்மிஸ் ஏற்கனவே அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2]
இங்கு மாறுபடும் பருவங்களைக் கொண்ட வெப்பமண்டல பருவமழை காலநிலை நிலவுகிறது (நவம்பர் முதல் பிப்ரவரி வரை வறண்ட காலம், மார்ச் முதல் மே வரை வெப்பமான காலம், [சூன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம்).[7]
மக்களும் பண்பாடும்
[தொகு]இன்லே ஏரிப் பகுதி மக்கள் (இன்தா இனத்தவர் உட்பட) ஏரியின் எல்லையில் உள்ள நான்கு நகரங்களிலும், ஏரியின் கரையில் உள்ள ஏராளமான சிறிய கிராமங்களிலும், ஏரியின் மீதே அமைக்கப்பட்ட குடியிருப்புகளிலும் வசிக்கின்றனர். இந்த ஏரியின் முழு பகுதியும் நியாங் ஷ்வே நகரத்தில் உள்ளது .[8] இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் இன்தா இனத்தவர் ஆவர். இவர்களுடன் ஷான், டவுங்யோ, பா-ஓ (டவுங்து), டானு, கயா, டானாவ், பாமர் ஆகிய இனத்தவர்களும் கலந்து வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தீவிர பௌத்த சமய நம்பிக்கையாளர்கள்; இவர்கள்ஏரியில் உயரமான தூண்களின் மீது அமைக்கப்பட்ட எளிய வீடுகளில் வசிக்கின்றனர். இந்த வீடுகள் மரத்தாலும், மூங்கிலால் பின்னப்பட்ட இருக்கும். இவர்கள் பெரும்பாலும் தற்சார்பு கொண்ட விவசாயிகளாகத் திகழ்கின்றனர்.
இந்த ஏரியில் போக்குவரத்து பாரம்பரியமாகச் சிறிய படகுகள் மூலமாகவோ அல்லது ஒற்றை-சிலிண்டர் டீசல் இயந்திரம் பொருத்தப்பட்ட சற்று பெரிய படகுகள் மூலமாகவோ நடைபெறுகிறது. உள்ளூர் மீனவர்கள் ஒரு தனித்துவமான துடுப்பு வலிக்கும் முறையைக் கையாள்வதில் பெயர் பெற்றவர்கள். இம்முறையில் அவர்கள் படகின் பின்பகுதியில் ஒரு காலில் நின்றுகொண்டு, மற்றொரு காலைத் துடுப்பைச் சுற்றி வைத்து இயக்குவர். ஏரி முழுவதும் நாணல் புற்களும் மிதக்கும் தாவரங்களும் நிறைந்திருப்பதால், அமர்ந்த நிலையில் அவற்றைத் தாண்டி பார்ப்பது கடினமாக உள்ள சூழலில், அதன் அவசியத்தின் காரணமாகவே இத்தனித்துவமான முறை உருவானது. நின்றுகொண்டு துடுப்பு வலிப்பது, நாணல்களுக்கு அப்பால் உள்ள பகுதியைப் பார்க்க மீனவருக்கு உதவுகிறது. இருப்பினும், காலால் துடுப்பு வலிக்கும் இம்முறை ஆண்களால் மட்டுமே பின்பற்றப்படுகிறது. பெண்கள் வழக்கமான முறையிலேயே, அதாவது படகின் பின்பகுதியில் சம்மணமிட்டு அமர்ந்து கைகளால் துடுப்பு வலித்துச் செல்கின்றனர்.
ஏரியில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் உணவின் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளூரில் நாகா ஹ்பெய்ன் என்று அழைக்கப்படும் இன்லே கார்ப் (சைப்ரினஸ் இந்தா) மீன்கள் அதிக அளவில் கிடைத்து வந்தன; ஆனால் இன்று அவை கடுமையான அழிவு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.[2] ஹ்தமின் ஜின்' என்பது இங்கு பிரபலமான ஒரு உணவாகும்; இது மீன் மற்றும் உருளைக்கிழங்குடன் பிசைந்த 'புளிக்கவைக்கப்பட்ட' சாதத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது 'ஹ்னாப்யான் ஜ்யோ' - அதாவது 'இருமுறை பொரிக்கப்பட்ட ஷான் டோஃபு' உடன் பரிமாறப்படுகிறது. மீன்பிடித்தல் மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் ஏரியின் மேற்பரப்பில் மிதக்கும் பெரிய தோட்டங்களில் காய்கறிகளையும், பழங்களையும் பயிரிடுகின்றனர். இந்த மிதக்கும் தோட்டப் பாத்திகள் கடினமான உடல் உழைப்பின் மூலம் உருவாக்கப்படுகின்றன. விவசாயிகள் மூங்கில் கம்புகள் மூலம் நிலைநிறுத்தப்பட்ட மிதக்கும் பாத்திகளாகத் தங்கள் தோட்டப் பகுதிகளை அமைக்கின்றனர். நீர்மட்ட உயர்வுக்கு ஏற்ப இந்தத் தோட்டங்கள் மேலே உயர்ந்து கீழே இறங்குவதால், இவை வெள்ளப்பெருக்கைத் தாங்கும் திறன் கொண்டவையாக உள்ளன. சத்துக்கள் நிறைந்த நீர் எப்போதும் கிடைப்பதால், இத்தோட்டங்கள் மிகுந்த வளத்துடன் திகழ்கின்றன. நெல் சாகுபடியும் அரிசி உணவும் இப்பகுதி மக்களின் உணவுமுறை மற்றும் விவசாய மரபில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.
- காலால் துடுப்பு வலிக்கும் 'இந்தா' மக்களைக் கொண்ட இன்லே ஏரி, பர்மாவில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
- இன்லே ஏரியில் மீனவர்
- மிதக்கும் தோட்டங்கள்
- இன்லே ஏரியில் மிதக்கும் தக்காளித் தோட்டம்
- இன்லே ஏரியின் கரைகள்
- புத்தருக்கு ஒரு நல்ல மேலங்கியை நெய்வதற்குத் தாமரை நூல் பயன்படுத்தப்படுகிறது.
- ஏரியில் களைகளை அகற்றிவிட்டு வீடு திரும்பும் வழியில்
- மிதக்கும் பண்ணை
- ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள சந்தை
- நியாங்ஷ்வேயின் தெருக்கள்
- மீனவர் தனது வலையை வீசுகிறார்.
சுற்றுச்சூழல் கவலைகள்
[தொகு]மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் விவசாயம், சுற்றுலாத் துறைகளின் விரைவான வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இன்லே ஏரி ஆளாகியுள்ளது. 1935 முதல் 2000 வரையிலான 65 ஆண்டு காலத்தில், ஏரியின் மேற்குப் பகுதியில் பெருமளவில் மேற்கொள்ளப்படும் 'மிதக்கும் தோட்ட விவசாய' முறையின் (இது 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்டது) விரிவாக்கத்தால், இன்லே ஏரியின் திறந்த நீர் பரப்பு 69.10 சதுர கிலோமீட்டரிலிருந்து (26.68 சதுர மைல்) 46.69 சதுர கிலோமீட்டராகக் (18.03 சதுர மைல்) குறைந்துள்ளது. இது 32.4 விழுக்காடு இழப்பாகும்.[9]
ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் மரம் வெட்டுதல் மற்றும் நிலையற்ற சாகுபடி முறைகள் (எரித்துச் சாகுபடி செய்யும் முறைகள்) காரணமாக, ஏரிக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் ஆறுகளில் — குறிப்பாக அதன் மேற்கு மற்றும் வடக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் — அதிக அளவிலான வண்டல் மண்ணும் ஊட்டச்சத்துக்களும் அடித்து வருகின்றன. இந்த வண்டல் மண் ஏரியில் படிகிறது. இது ஊட்டச்சத்துக்கள் களைகள், பாசிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. இருப்பினும், மிக முக்கியமாக ஏரியின் மேற்குப் பகுதியில் பெருமளவில் மேற்கொள்ளப்படும் 'மிதக்கும் தோட்டச் சாகுபடி' முறையாகும். காலப்போக்கில் இந்த மிதக்கும் சாகுபடிப் படுகைகள் திடமான நிலமாக மாறுவதால், இம்முறை ஏரியின் பரப்பு சுருங்க காரணமாகிறது. ஏரியின் நீர் பரப்பளவில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள இழப்பில் — குறிப்பாக மேற்குப் பகுதியில் — சுமார் 93% (ஏறக்குறைய 21 சதுர கிலோமீட்டர் அல்லது 8.1 சதுர மைல்) பகுதிக்கு இந்தச் சாகுபடி முறையே காரணம் என்று கருதப்படுகிறது. ஏரியின் நீர்தடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஒருங்கிணைந்த விவசாய நடவடிக்கைகளால் ஏற்படும் நேரடி சுற்றுச்சூழல் பாதிப்புகளில் வண்டல் படிதல், ஊட்டஞ் செறிதல் மற்றும் மாசுபாடு ஆகியவை அடங்கும்.[9]
அந்நியத் தாவரமான 'வாட்டர் ஹயாசிந்த்' ஏரிக்கு ஒரு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இது மிக வேகமாக வளர்ந்து, ஏரியின் சிறிய நீரோடைகளையும் பரந்த பகுதிகளையும் ஆக்கிரமித்துக்கொள்வதால், அப்பகுதியின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்களும் சூரிய ஒளியும் தடுக்கப்படுகின்றன. ஒரு காலத்தில், நயாங் ஷ்வே பகுதிக்குள் வரும் அனைத்துப் படகுகளும் குறிப்பிட்ட அளவு வாட்டர் ஹயாசிந்த் செடிகளைக் கொண்டுவர வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டிருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக, இத்தாவரத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இயந்திரங்கள் மற்றும் இறைப்பான்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு ஓரளவு வெற்றியும் காணப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.
மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கில், 'கிராஸ் கார்ப்' போன்ற அயல்நாட்டு மீன் இனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருப்பது கவலைக்குரிய மற்றொரு விஷயமாகும்.
ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும், கழிவுகளும் ஏரிக்குள் கலப்பதால், பொது சுகாதாரத் துறையினருக்கு அங்குள்ள சுகாதாரம் ஒரு தொடர் கவலையாக உள்ளது (இங்கு 72% வீடுகளில் கழிப்பறைகளுக்குப் பதிலாகத் திறந்த குழிகளே பயன்படுத்தப்படுகின்றன.[10] தூய்மையான பாதுக்காப்பான நீரை உறுதிசெய்ய, சில கிராமங்களில் இப்போது மூடப்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களும் அக்கிணற்று நீரைப் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏரியின் மேற்பரப்பு நீரின் தரம் குறித்த சில ஆய்வுகள், அந்த நீர் மனிதப் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானதல்ல என்பதைக் காட்டுகின்றன.[10] இன்லே ஏரி நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விற்குத் தேவையான அளவைவிடக் குறைவாக உள்ளது. அதேவேளையில், நைட்ரைட், நைட்ரேட், பாஸ்பேட் ஆகியவற்றின் அளவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளன.[10]
ஒலி மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். படகின் பின்புற உந்துவிசைச் சுழலிகளை இயக்கும் மலிவான, சரியாக ஒலி அடக்கப்படாத டீசல் இயந்திரங்களிலிருந்து வரும் இரைச்சல் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது, மேலும் அது அமைதியாக இருக்கும் ஏரிக்கு ஒரு கவனச்சிதறலாகவும் அமையலாம்.
2010-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் மிக அதிக வெப்பநிலை நிலவியதால், ஏரியின் நீர்மட்டம் கடந்த 50 ஆண்டுகளிலேயே மிகக் குறைந்த அளவிற்குச் சரிந்தது; இதனால் குடிநீரை வேறு இடங்களிலிருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், மிதக்கும் சந்தை மறைந்துபோகும் அபாயமும் உருவானது.[11] மற்றொரு தீவிரமான விளைவு என்னவென்றால், முன்னாள் தலைநகரான யாங்கோனுக்கு மின்சாரம் வழங்கிய லாபிடாவில் உள்ள நீர்மின் நிலையத்தால் அதன் முழு திறனில் செயல்பட முடியவில்லை.
2015-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை 'இன்லே ஏரி'யை தனது 'உயிர்க்கோளக் காப்பகங்களின் உலகளாவிய வலையமைப்பில்' இணைத்தது. இந்த வலையமைப்பில் 120 நாடுகளில் மொத்தம் 651 இடங்கள் உள்ளன. எனினும், மியான்மரிலிருந்து இதில் இணைக்கப்பட்ட முதல் உயிர்க்கோளக் காப்பகம் இன்லே ஏரியே ஆகும்.[12]
சுற்றுலா
[தொகு]

இன்லே ஏரி ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இதனால் சுற்றுலா சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் அங்கு மேம்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான பல சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா சேவை நிறுவனங்களும் அங்கு உருவாகியுள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நுகர்வோர் பொருட்களால் உள்ளூர் கடைகள் நிரம்பி வழிகின்றன. அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஹெஹோ விமான நிலையமாகும், இது 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ளது. யங்கோன் மற்றும் மாண்டலே ஆகிய இரு இடங்களிலிருந்தும் விமான சேவைகள் உள்ளன. சாலை வழியாக யாங்கோன் 660 கிலோமீட்டர் (410 மைல்) தொலைவிலும், மண்டலே 330 கிலோமீட்டர் (210 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளன.
இன்லே ஏரியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆகத்து முதல் அக்டோபர் வரை பல விழாக்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 18 நாட்கள் நீடிக்கும் சடங்குபூர்வமான ஹ்பாங் டாவ் யூ திருவிழாவைத் தொடர்ந்து, தடிங்யுட் ஒளித் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. பௌத்த நோன்பைக் கொண்டாட, இன்தா மற்றும் ஷான் இன மக்கள் சிறந்த ஆடைகளை அணிந்து பெருந்திரளாகக் கூடுகின்றனர். பாரம்பரிய ஷான் உடைகளை அணிந்த பத்துக்கும் மேற்பட்ட கால்-துடுப்பாளர்கள், ஒவ்வொரு படகிலும் ஒரு அணியாக, பாரம்பரிய படகுப் பந்தயங்களில் போட்டியிடுகின்றனர். இந்தப் படகுப் பந்தயங்கள், ஹ்பாங் டாவ் யூ திருவிழாவின் போது உள்ளூரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.[13]
ஏரியிலேயே உள்ள கிராமத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்று பாரம்பரிய வெள்ளி வேலைப்பாடாகும், இது உள்ளூர் சுற்றுலாப் பொருளாதாரத்திற்கு ஊட்டமளித்துள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள மலைகளை வரிசைப்படுத்தும் சுரங்கங்களிலிருந்து வெள்ளி கொண்டு வரப்பட்டு கிராமத்திற்குள் படகு மூலம் செலுத்தப்படுகிறது. ஏரியிலேயே உள்ள கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் ஸ்டில்ட்களில் அமர்ந்துள்ளன, அவை நெய்த மூங்கிலால் செய்யப்பட்டவை. சுற்றுலாப் பயணிகள் வெள்ளி அடிக்கப்படுவதைக் கவனித்து, அந்த இடத்தில் பொருட்களை வாங்குவதன் மூலம் தங்கள் சிறிய பொருட்கள் மற்றும் மறக்கமுடியாத டோக்கன்களின் தேவையை பூர்த்தி செய்யலாம். வெள்ளித் தயாரிப்பில் ஒரு பார்வையாளர் ஆர்வம் காட்டவில்லை என்றால், உள்ளூர் பட்டு பட்டறைகளும் உள்ளன, அவை ஏரியில் வெள்ளித் தயாரிப்பாளர்களைப் போலவே செயல்படுகின்றன.[14] உள்ளூர் பயன்பாடு மற்றும் வர்த்தகத்திற்காக கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வர்த்தகத்தின் மற்றொரு ஆதாரமாகும். கருவிகள், சிற்பங்கள் மற்றும் பிற அலங்கார பொருட்கள், ஜவுளி மற்றும் செரூட்டுகள் ஆகியவை பொதுவான தயாரிப்புகளில் அடங்கும். ஒரு உள்ளூர் சந்தை மிகவும் பொதுவான ஷாப்பிங் தேவைகளை பூர்த்தி செய்கிறது மற்றும் தினசரி நடத்தப்படுகிறது, ஆனால் நிகழ்வின் இடம் ஏரி பகுதியைச் சுற்றியுள்ள ஐந்து வெவ்வேறு தளங்கள் வழியாக சுழல்கிறது, இதனால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஐந்தாவது நாளும் ஒரு பயணச் சந்தையை நடத்துகின்றன.[15] ஏரியிலேயே நடத்தப்படும்போது, சிறிய படகுகளில் இருந்து வர்த்தகம் நடத்தப்படுகிறது. இந்த 'மிதக்கும் சந்தை' நிகழ்வு மற்ற நான்கை விட சுற்றுலா வர்த்தகத்தை மிகவும் வலியுறுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Inlay Lake Ramsar Site". ராம்சர் Sites Information Service. Retrieved 10 September 2018.
- 1 2 3 4 5 Allen, D.J.; K.G. Smith; W.R.T. Darwall, eds. (2012). The status and distribution of freshwater biodiversity in Indo-Burma. Cambridge, UK and Gland, Switzerland: IUCN. pp. 62, 67, 130–131. ISBN 978-2-8317-1424-0.
- ↑ Miao, W.; S.D. Silva; B. Davy, eds. (2010). Inland Fisheries Enhancement and Conservation in Asia. FAO Regional Office for Asia and the Pacific, Bangkok, Thailand. pp. 95–96. ISBN 978-92-5-106751-2.
- ↑ Ng, P.K.L.; W. Mar; D.C.J. Yeo (2020). "On the taxonomy of the endemic Inle Lake crab, Inlethelphusa acanthica (Kemp, 1918) (Crustacea: Brachyura: Potamidae) of Myanmar". Raffles Bulletin of Zoology 68 (452): 453–463. doi:10.26107/RBZ-2020-0063.
- ↑ Aye Sapay Phyu. "Inle Lake joins UN list of biosphere sites". mmtimes.com/. Retrieved 19 June 2015.
- ↑ "Inle Lake designated biosphere reserve". nationmultimedia.com/. Archived from the original on 10 September 2018. Retrieved 19 June 2015.
- ↑ "Озеро Инле: природное и культурное богатство Мьянмы". inlelake.ru. Retrieved 2026-03-13.
- ↑ "Intha" (PDF). ASIA HARVEST. Archived from the original (PDF) on 20 May 2022. Retrieved 8 April 2026.
- 1 2 Roy C. Sidle, Alan D. Ziegler and John B. Vogler (April 2007). "Contemporary changes in open water surface area of Lake Inle, Myanmar". Sustainability Science 2 (1): 55–65. doi:10.1007/s11625-006-0020-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1862-4065. Bibcode: 2007SuSc....2...55S.
- 1 2 3 Fumiko, Akaishi; Motoyoshi Satake; Masahiro Otaki; Noriko Tominaga (13 April 2006). "Surface water quality and information about the environment surrounding Inle Lake in Myanmar". Limnology (Japanese Society of Limnology) 7 (1): 57–61. doi:10.1007/s10201-006-0165-1. Bibcode: 2006Limno...7...57A.
- ↑ Ko Htwe. "Electricity for Businesses Cut Off in Rangoon". The Irrawaddy, May 17, 2010. Archived from the original on May 19, 2010. Retrieved 2010-05-17.
- ↑ Sapay Phyu, Aye (June 11, 2015). "Inle Lake Joins UN List of Biosphere Sites". Myanmar Times. http://www.mmtimes.com/index.php/national-news/14976-inle-lake-joins-un-list-of-biosphere-sites.html.
- ↑ "Inle Lake Myanmar". Archived from the original on 2004-11-02.
- ↑ "Myanmar's Traditional Silversmiths Shine On". MyanmarBurma.com. September 13, 2013. Archived from the original on 2013-11-07. Retrieved March 23, 2017.
- ↑ "Fifth day markets". JourneysMyanmar. Retrieved 2007-02-19.