இன்றியமையா மருந்துகள்
Jump to navigation
Jump to search
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி இன்றியமையா மருந்துகள் (essential drug) என்பவை ஒரு நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் உடல்நலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எல்லா வேளைகளிலும் போதுமான அளவு கையிருப்பில் மக்கள் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் மருந்துகள் ஆகும். இந்த இன்றியமையா மருந்துகளின் பட்டியல் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்படும். ஒவ்வொரு நாடும் தங்கள் தேவைகளுக்கேற்ப அந்தப் பட்டியலை மாற்றிக் கொள்ளும். ஒவ்வொரு நாட்டிலும் இந்த இன்றியமையாத மருந்துகளின் பட்டியல் மாறுபடும். ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் நோய்களின் பரவல் வேறுபடுகிறது.
இன்றியமையா மருந்து எனும் கோட்பாடு அல்மா ஆட்டா பிரகடனத்தின் பத்து பாகங்களுள் ஒன்றாக வெளியிடப்பட்டிருந்தது.