உள்ளடக்கத்துக்குச் செல்

இன்பவல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்பவல்லி
இயக்கம்எஸ். நொடானி
தயாரிப்புசியாமளா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை ஆர். சி. பிள்ளை
கதை பி. ஏ. குமார் உரையாடல் இளங்கோவன்
இசைஜி. ராமனாதன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஆர். சுவாமிநாதன்
ஈ. ஆர். சகாதேவன்
பி. எஸ். சரோஜா
பி. கே. சரஸ்வதி
டி. ஏ. மதுரம்
எஸ். மேனகா
ஒளிப்பதிவுவசந்தராவ்
விநியோகம்சூப்பர் பிக்சர்ஸ்[1]
வெளியீடுசெப்டம்பர் 16, 1949
நீளம்15465 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்பவல்லி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். நொடானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. எஸ். சரோஜா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.[2]

கதைக்களம்

[தொகு]

இது ஒரு இளவரசிக்கும் அமைச்சரின் மகனுக்கும் இடையிலான காதல் பற்றிய கதையாகும். இளவரசியும், அமைச்சர் மகனும் ஒன்றாக வளர்ந்து ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால் பட்டத்தரசிக்கோ தன் மகளை இளவரசன் ஒருவனுக்கே மணம் செய்விக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இதை அறிந்த காதலர்கள் ஒருநாள் இரவு அரண்மனையைவிட்டு ஓடிவிடுகின்றனர். இளவரசியின் மீது மையல் கொண்ட ஒரு மந்திரவாதி அமைச்சரின் மகனை தன் மந்திர சக்தியால் கண்டுபிடித்து தன் தந்தித்தால் அமைச்சர் மகனை பிடித்து வைத்துக்கொள்கிறார். ஆனால் ஒரு வயதான பெண்மணி அமைச்சரின் மகனை கிளியாக மாற்றி காப்பாற்றுகிறார். கிளியாக மாறிய அமைச்சரின் மகன் பறந்து சென்று தப்பிக்கிறான். அரண்மனை நடனக் கலைஞரிடம் கிளி தஞ்சம் அடைகிறது. பல திருப்பங்களுக்குப் பிறகு இறுதியாக காதலர்கள் ஒன்றுபடுகிறனர்.[2]

நடிப்பு

[தொகு]

நடிகர்கள்
நடிகைகள்
  • இளவரசியாக பி. எஸ். சரோஜா
  • டி. ஏ. மதுரம்
  • அரண்மனை நடனக் கலைஞராக பி. கே. சரஸ்வதி
  • எஸ். மேனகா
  • பட்டத்தரசியாக எம். டி. கிருஷ்ணா பாய்
  • கே. எஸ். அங்கமுத்து
  • எம். சரோஜா
  • கே.ஜெயலட்சுமி
  • சேதுலட்சுமி
  • பாக்யலட்சுமி

தயாரிப்பு

[தொகு]

இந்தப் படத்தை சியாமளா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து. சேலம் ரத்னா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதை ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதை ஒன்றின் பாதிப்பால் உருவானது. இந்தப் படத்தில், மனிதர்கள் கரடிகள், குரங்குகள் போன்ற விலங்குகளாக மாற்றப்படும் காட்சிகள் உள்ளன. இதில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கக்கூடிய ஒரு மாயக் கண்ணாடியையும் சித்தரிக்கபட்டுள்ளது.[2] இப்படத்திற்கு வி. பி. ஜக்தாப் ஒளிப்பதிவு செய்தார்.[3]

ஆர். ஆர். ராஜகோபால ஐயர் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமனாதன் இசையமைத்தார்.

எண். பாடல் பாடகர் பாடல் வரிகள் நீளம்
1"அன்பே பெரும் நிதியே"டி. ஆர். மகாலிங்கம், பி. ஏ. பெரியநாயகி02:47
2"தெய்வ சோதனை தானோ"பி. ஏ. பெரியநாயகி03:33
3"தங்குடா டிங்கலே"என். எஸ். கிருஷ்ணன், டி. ஆர். மகாலிங்கம்
பொய்கால் குதிரை ஆட்டம்
04:42
4"ஜகதாம்பா"பி. ஏ. பெரியநாயகி, பி. லீலா03:35 (02:43 – 06:18)
5"ஏனோ இன்னும் வர காணேன்"டி. ஆர். மகாலிங்கம்03:44
6"மாலை சூட அவர் வந்தாரடி"பி. லீலா02:48
7"ஓ ஐயா மாரே வாருங்க"02:14
8"நீ துணை புரிவாய்"பி. லீலா02:37
9"ஆருயிரே எனதாசை அன்பே வா"பி. லீலா02:24
10"இன்னும் வரக் காணேனே"பி. ஏ. பெரியநாயகி03:11
11"இன்பமான மோகினி மானே"டி. ஆர். மகாலிங்கம், பி. லீலா03:20
12"சம்பளமே எழுமிச்சம்பழமே"என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்
13"நாதா என் ஆசை"டி. ஆர். மகாலிங்கம், டி. வி. ரத்னம்02:13
14"யார் உமை போலே"பி. ஏ. பெரியநாயகி04:27
15"மந்திரத்தின் பேரைச் சொல்லி"என். எஸ். கிருஷ்ணன், டி. ஆர். மகாலிங்கம்01:35

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Inbavalli". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 9 September 1949. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19490909&printsec=frontpage&hl=en.
  2. 1 2 3 Randor Guy (2013-11-30). "Inbavalli (1949)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 17 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210517220916/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/inbavalli-1949/article5408315.ece.
  3. "1949 – இன்பவல்லி – சியாமளா பிக்சர்ஸ்" [1949 – Inbavalli – Shyamala Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 16 September 2016. Retrieved 16 September 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பவல்லி&oldid=4588172" இலிருந்து மீள்விக்கப்பட்டது