இன்பகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இன்பகவி (சேவியர் ஹென்ரிக் லீம்) என்பவர் ஒரு தமிழ்ப் புலவரும் நாடகவியலாளரும் ஆவார்.

இளமைக் காலம்[தொகு]

இன்பகவி, சேவியர் ஹென்ரிக் லீம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறையில் பிறந்தார். [1] இவருடைய பெற்றோர்கள் பரதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.[1] மிகவும் இளைய வயதிலேயே இன்பகவி, தூத்துக்குடியில் பரதர் இனத்தின் தலைவராக விளங்கிய டான் கேப்ரியல் வாஸ் கோமஸ்ஸின் ஆதரவு பெற்று, எட்டயபுர அரசரை அணுகினார். [1] ஆரம்பத்தில், அரசர் இவரை விரும்பாததைப் போலத் தெரிந்தாலும், அரசரைத் தன்னுடைய எழுத்துகளால் கவர்ந்தார், அரசரும் பரிசுகளை அள்ளி வழங்கினார்.[1]

சிறிது காலத்திற்குப் பிறகு, தஞ்சாவூரில் உள்ள இரண்டாம் சரபோஜியின் அரண்மனைக்கு அனுப்பப்பட்டார்.[2] தஞ்சாவூரில், இவர் அமைச்சர் தாதூஜியை கவர்ந்தார். [2] இவர் தூத்துக்குடியில் குறைந்தகாலமே தங்குவதற்கு இவருடைய உடல்நலக் குறைவும் ஒரு காரணமாக விளங்கியது.[2]

தன்னுடைய பிந்தைய நாட்களில், இன்பகவி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புவிற்கும் சுற்றுலா சென்றார்.[2] இவருடைய குடிப்பழக்கத்தால், உடல்நலக்குறைவும் அவருடைய புகழும் குறையத் தொடங்கியது.[2] இவர் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் முன்பு, பிலிப் ரோட்ரிகோ முத்துக்கிருஷ்ணாவைக் குறித்து குறவஞ்சி என்னும் நாடகத்தினை உருவாக்கினார். .[3]

இன்பகவி 1835-ம் ஆண்டு காலமானார்.

படைப்புகள்[தொகு]

இன்பகவி பல்வேறு நாடகங்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் கிறித்தவம் மட்டுமின்றி சைவம் மற்றும் வைணவத் துதிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 The Tamil Plutarch, பக் 26
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 The Tamil Plutarch, பக் 27
  3. The Tamil Plutarch, Pg 28

மேற்கோள்கள்[தொகு]

  • Chitty, Simon Casie (1859). The Tamil Plutarch, containing a summary account of the lives of poets and poetesses of Southern India and Ceylon. Jaffna: Ripley & Strong. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பகவி&oldid=2401149" இருந்து மீள்விக்கப்பட்டது