இன்டெர்னெட்.ஆர்க்
![]() | |
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
---|---|
நிறுவுகை | 2013 |
நிறுவனர்(கள்) | மார்க் சக்கர்பெர்க் |
இணையத்தளம் | Internet.org |
இன்டெர்னெட்.ஆர்க் (Internet.org) என்ற அமைப்பு வளர்ச்சி குறைந்த நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணைய சேவைகளுக்கான அணுக்கத்தை குறைந்த கட்டணத்தில் அல்லது கட்டணமின்றி வழங்க சமூக வலைத்தள நிறுவனமான முகநூல் ஏழு நகர்பேசி நிறுவனங்களுடன் (சேம்சங், எரிக்சன், மீடியாடெக், மைக்ரோசாப்ட், ஓபரா மென்பொருள், ரிலையன்சு மற்றும் குவால்காம்) கூட்டாக ஏற்படுத்தப்பட்டதாகும். இணைய அணுக்கத்தினை வழங்குவதில் புதிய வணிக ஏற்பாடுகளை உருவாக்கியும் வழங்குதிறனை கூட்டியும் இந்த குறிக்கோளை அடைய இந்த அமைப்பு முயல்கின்றது.[1][2]
இது இணைய சமத்துவத்தை மீறுவதாகவும் தனது போட்டியாளர்களுக்கு எதிராக முகநூலின் சேவைகளை முன்னிலைப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.[3] இந்தியாவின் ஏழை மக்களை குறிவைத்த முகநூலின் நிகராளி என இன்டெர்னெட்.ஆர்கை விமர்சித்து இந்தியாவில் பதிவுகள் வெளியாகின.[4] ஏப்ரல் 2015 வரை இன்டெர்னெட்.ஆர்க் பயனாளர்கள்ஒரு சில வலைத்தளங்களையே விலையின்றி காணவியைந்தது. எந்தெந்த வலைத்தளங்களை விலையின்றிக் காணலாம் எனும் பட்டியலை முகநூல் தீர்மானிப்பது இணைய சமத்துவத்தை மீறுவதாக அமைகின்றது. இருப்பினும், மே 2015இல் முகநூல் நிறுவனம் தனது வரையறைகளுக்குட்பட்ட அனைத்து வலைத்தளங்களும் இன்டெர்னெட்.ஆர்க் மூலம் கிடைக்கும் என அறிவித்துள்ளது.[5]|}
வரலாறு
[தொகு]தொடக்கம்
[தொகு]இன்டெர்னெட்.ஆர்க் ஆகத்து 20, 2013 அன்று துவங்கப்பட்டது.[2][6][7] தொடக்க விழாவின்போது முகநூல் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் தனது திட்டத்தை விவரித்து பத்து பக்கங்கள் கொண்ட விரிதாளை வெளியிட்டார்.[8] இதில் உலகின் அனைத்து மக்களுக்கும் இணைய அணுக்கத்தை மேம்படுத்தும் முகநூலின் முந்தைய திட்டமான பேஸ்புக் சீரோவின் முன்னெடுப்பாக இதனை விவரித்திருந்தார். மேலும் "இணைக்கப்பட்டிருப்பது மாந்த உரிமை" என அறிவித்திருந்தார். இந்த தொடக்கத்தை கூகுளின் லூன் திட்டத்துடன் டெக்கிரஞ்சு இதழ் ஒப்பிட்டது.[2]
பங்கேற்பு
[தொகு]குறிப்பிட்ட சில தொடக்க நாட்களும் பங்கேற்கும் நகர்பேசி நிறுவனங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- சூலை 2014: சாம்பியா[9]
- அக்டோபர் 2014: தன்சானியா[10]
- நவம்பர் 2014: கென்யா[11]
- சனவரி 2015: கொலொம்பியா[12]
- சனவரி 2015: கானா, ஏர்டெல்லுடன்[13]
- 10 பெப்ரவரி 2015: இந்தியா, ரிலையன்சுடன்[14]
- 18 மார்ச் 2015: பிலிப்பீன்சு இசுமார்ட்டு கம்யூனிகேசன்சுடன்[15]
- 31 மார்ச் 2015: குவாத்தமாலா டைகோவுடன் [16]
- 20 ஏப்ரல் 2015: இந்தோனேசியா இந்தோசாட்டுடன்[17]
- 10 மே 2015: வங்காளதேசம் ரோபியுடன்[18]
- 13 மே 2015: மலாவி ஏர்டெல் மற்றும் டிஎன்எம் உடன்[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Internet.org: About". Retrieved சனவரி 8, 2014.
- ↑ 2.0 2.1 2.2 Constine, Josh (ஆகத்து 20, 2013). "Facebook And 6 Phone Companies Launch Internet.org To Bring Affordable Access To Everyone". Retrieved சனவரி 8, 2014.
- ↑ "Blow To Internet.org As Indian Internet Companies Begin To Withdraw". Huffington Post. ஏப்ரல் 15, 2015. Retrieved ஏப்ரல் 20, 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Murthy, Mahesh (ஏப்ரல் 17, 2015). "Internet.org is just a Facebook proxy targeting India's poor". FirstPost. Retrieved ஏப்ரல் 20, 2015.
- ↑ "Facebook Opens Internet.Org To All Developers In Response To Net Neutrality Concerns". டெக்கிரஞ்சு. மே 4, 2015. Retrieved மே 9, 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Farr, Christina (ஆகத்து 20, 2013). "Mark Zuckerberg launches Internet.org to connect 'the next 5 billion'". VentureBeat. Retrieved சனவரி 8, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Schroeder, Stan (ஆகத்து 21, 2013). "Zuckerberg Wants to Bring the Whole Planet Internet Access". மாசபிள். Retrieved சனவரி 8, 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Zuckerberg, Mark (ஆகத்து 20, 2013). "Is Connectivity a Human Right?" (PDF). Retrieved சனவரி 8, 2014.
- ↑ Guy Rosen, Product Management Director (31 சூலை 2014). "Introducing the Internet.org App". Internet.org. https://internet.org/press/introducing-the-internet-dot-org-app.
- ↑ David Cohen (29 அக்டோபர் 2014). "Internet.org App Launches in Tanzania". Adweek. http://www.adweek.com/socialtimes/internet-org-app-tanzania/438930.
- ↑ Federico Guerrini (13 நவம்பர் 2014). "Facebook's Internet.Org App Launches In Kenya - Just Don't Call It Philanthropy". Forbes. http://www.forbes.com/sites/federicoguerrini/2014/11/13/facebook-gateway-drug-internet-app-comes-to-kenya/.
- ↑ Owen Williams (14 சனவரி 2015). "Facebook’s Internet.org app launches in Colombia". The Next Web. http://thenextweb.com/apps/2015/01/14/facebooks-internet-org-app-launches-colombia/.
- ↑ Lilian Mutegi (26 சனவரி 2015). "Ghana: Facebook, Airtel Partner to Bring Internet.org APP to Ghana". AllAfrica (Nairobi). http://allafrica.com/stories/201501270091.html. பார்த்த நாள்: சனவரி 27, 2015.
- ↑ "Facebook Takes Internet.org And Its Free Mobile Data Services To India". TechCrunch. 10 பெப்ரவரி 2015. http://techcrunch.com/2015/02/09/internet-org-india/.
- ↑ "Facebook and Smart’s Talk ‘N text bring basic Internet mobile service without the charge". http://www.philstar.com/lifestyle-features/2015/03/18/1434997/facebook-and-smarts-talk-n-text-bring-basic-internet-mobile.
- ↑ "FACEBOOK LAUNCHES INTERNET.ORG IN GUATEMALA, MOVES TO NEW OFFICES IN CALIFORNIA". 7 ஏப்ரல் 2015. http://techtrendske.co.ke/?p=4472.
- ↑ Russell, John (ஏப்ரல் 20, 2015). "Under Fire In India, Facebook's Internet.org Launches In Indonesia". டெக்கிரஞ்சு. Retrieved மே 8, 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Internet.org to be launched today". The Daily Star. 10 மே 2015. http://www.thedailystar.net/backpage/internetorg-be-launched-today-81422. பார்த்த நாள்: 10 மே 2015.
- ↑ EnGadget.com