இன்சிடாடஸ்

இன்சிடாடஸ் (Incitatus) என்பது உரோமானிய பேரரசர் காலிகுலாவின் ( ஆ. 37–41 AD விருப்பமான குதிரை ஆகும். செவிவழிக் கதைகளின் படி, காலிகுலா இக் குதிரையை ஒரு வெளிநாட்டுத் தூதராக மாற்ற திட்டமிட்டார். இருப்பினும் அது நடக்கவில்லை என்பது பண்டைய ஆதாரங்கள் வழியாக தெளிவாகத் தெரிகிறது. இன்சிடேட்டாசுக்கு பணிவிடை செய்ய 18 வேலைக்காரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு பளிங்கு தொழுவத்தில் வசித்து வந்தது. அரிய மற்றும் சிறப்பு வாய்ந்த கற்கள்/நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பட்டையை அணிந்து இருந்தது. ஊதா நிற சால்வை அணிந்து தந்தத்தினானால தீவனத் தொட்டியில் சாப்பிட்டது.
செவிவழிக் கதை
[தொகு]சூட்டோனியஸ் தனது "பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்கை" (கி.பி. 121) புத்தகத்தின்படி, காலிகுலா இன்சிடேட்டசாவை ஒரு வெளிநாட்டுத் தூதராக நியமிக்க திட்டமிட்டார்.[1] மேலும் அவ்வப்போது தன்னுடன் விருந்து உண்ண அழைத்துச் செல்வார். குதிரைக்கு பளிங்கினால் கட்டப்பட்டத் தொழுவம், தந்தத் தீவனத் தொட்டி தொட்டி, ஊதா நிற போர்வைகள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன ஒரு கழுத்துப்பட்டை இருந்தது என்றும் சூட்டோனியஸ் எழுதினார்.
காசியஸ் டியோ (கி.பி. 165–235) குதிரைக்கு பணிவிடை செய்ய வேலைக்காரர்கள் இருந்தனர், தங்கத் துகள்கள் கலந்த ஓட்ஸ் உணவாகக் கொடுக்கப்பட்டதாகவும்[2], கலிகுலா அந்தக் குதிரையை ஒரு பாதிரியாராக ஆக்கினார் என்று குறிப்பிட்டார்.[3]
வரலாற்றுத் துல்லியம்
[தொகு]இதன் வரலாற்றுத் துல்லியம் பொதுவாக கேள்விக்குறியாகவே உள்ளது. பிற்கால ரோமானிய வரலாற்றாசிரியர்களான சூட்டோனியஸ், டியோ காசியஸ் போன்றோர், தங்கள் காலத்தின் அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டனர். எனவே முந்தைய ஜூலியோ குளாடிய மரபு கிளாடியன் பேரரசர்களை இழிவுபடுத்தி தற்போதைய பேரரசர்களுக்கு மகிழ்ச்சிக்குள்ளாக இவ்வாறாக கதைகள் அவர்களால் கூறப்பட்டிருக்கலாம் என்று அந்தோணி ஏ. பாரெட் போன்ற வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இக்கதையின் தெளிவற்ற தன்மை அவர்களின் கதைகளுக்கு மசாலாவைச் சேர்த்து, கூடுதலானவர்களால் பேசப்பட்டது.
கலிகுலாவால் இன்சிடேட்டஸ் குதிரை நடத்தப்பட்ட விதம் பைத்தியக்காரத்தனமாக இல்லாமல், செனட்டை கேலி செய்வதற்கும் அவர்கள் தங்கள் பணிகளைச் சரியாக செய்யவில்லை என்று கூறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறும்பு செயல் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு குதிரையே ஒரு செனட்டரின் பணிகளைச் செய்ய முடியும் என்ற உட்குறிப்புடன் கூடிய ஒரு வகையான நையாண்டியாகவும் இருக்கலாம்.
இக்குதிரை எப்போதும் தூதராக ஆக்கப்படவில்லை என்பது பண்டைய ஆதாரங்கள் தெளிவாக கூறுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suetonius. De vita Caesarum, Caligula, 55: consulatum quoque traditur destinasse "it is also said that he planned to make him consul"
- ↑ Cassius Dio, Roman History LIX.14.
- ↑ Cassius Dio, Roman History LIX.28.
- ↑ Mythbusting Ancient Rome – Caligula’s Horse, Shushma Malik and Caillan Davenport, The Conversation, May 4, 2017