இன்குலாப் ஜிந்தாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்குலாப் ஜிந்தாபாத் (Inquilab Zindabad) ஓர் இந்துசுதானி சொற்றொடராகும். [1] [2] இதற்கு "புரட்சியே நீண்ட காலம் வாழ்க" என்பது பொருள்.

வரலாறு[தொகு]

உருது கவிஞரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய காங்கிரசு தலைவருமான மயுலானா அசரத் மோகானி 1921 ஆம் ஆண்டில் இம்முழக்கத்தை உருவாக்கினார். பகத் சிங் (1907-1931) தனது உரை மற்றும் எழுத்துக்கள் மூலம் இதை பிரபலப்படுத்தினார். இந்துசுதான் சோசலிச குடியரசுக் கழகத்தின் உத்தியோகபூர்வ முழக்கமாகவும், அத்துடன் அகில இந்திய ஆசாத் முசுலீம் மாநாட்டின் முழக்கமாகவும் இருந்தது.[3] 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த முழக்கத்தை பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளியான பி.கே. தத் ஆகியோர் தில்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய பின் முழங்கினர்.[4] பின்னர், இந்த முழக்கம் 1929 சூன் மாதம் டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக அவர்களின் கூட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக எழுப்பப்பட்டது. [5] [6]அப்போதிருந்து, இந்திய சுதந்திர இயக்கத்தின் முழக்கங்களில் ஒன்றாகவும் மாறியது. சுதந்திர இயக்கத்தை விவரிக்கும் இந்திய அரசியல் நாவல்களில், சுதந்திர சார்பு உணர்வு பெரும்பாலும் இந்த முழக்கத்தை உரக்க எழுப்பும் கதாபாத்திரங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]