இனூத் எண்குறிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Inupiaq digit table.png

இனூத் மொழி மற்ற எசுக்கிமோ மொழிகளைப் போலவும் கெல்டிக், மாயா மொழிகளைப் போலவும், அடிமானமாக 20 ஐப் பயன்படுத்தி, இருபதின்ம எண்குறி முறைமையைக் கடைப்பிடிக்கிறது. இனூத் எண்ணுத்லில் மேலும் 5, 10, 15 ஆகிய துணை அடிமானங்களும் உண்டு. 20 ஐ அடிமானமாக்க் கொண்ட எண்குறிமுறைமையைக் குறிக்க அரபு எண்குறி முறைமை உதவாததால், காக்தோவிக் அலாசுக்கா மாணவர்கள் காக்தோவிக இனூபியாக் எண்குறி முறைமையை உருவாக்கினர்.[1] எனவே இது அல்லாசுக்கா இனூபியாத் மொழியில் பரவியதோடு, இனூபியாத் மொழியின் திசைமொழிகளைப் பேசுவோரிடமும் பரவத் தொடங்கியுள்ளது.[1]

இந்த எண்குறி முறைமை இனூத் மொழியில் எண்ணுதலுக்குப் புத்துயிர்ப்பு ஊட்டியது. பள்ளிகளில் முன்பிருந்த பதின்ம முறைக்கு மாற்றாக அமையலானது.

படம் 1, 19, 0 ஆகிய எண்குறிகளைக் காட்டுகிறது. 20 ஒன்றின் பக்கத்தில் சுழி எழுதிக் காட்டப்படுகிறது.40 இரண்டின் பக்கத்தில் சுழி எழுதிக் காட்டப்படுகிறது. 400 ஒன்றின் பக்கத்தில் இரண்டு சுழிகளைஎழுதிக் காட்டப்படுகிறது.

InupiaqNumbers.gif

சார்ந்த பேச்சு வடிவங்கள் பின்வருமாறு:

0 1 2 3 4
atausiq malġuk piŋasut sisamat
5 6 7 8 9
tallimat itchaksrat tallimat malġuk tallimat piŋasut quliŋuġutaiḷaq
10 11 12 13 14
qulit qulit atausiq qulit malġuk qulit piŋasut akimiaġutaiḷaq
15 16 17 18 19
akimiaq akimiaq atausiq akimiaq malġuk akimiaq piŋasut iñuiññaŋŋutaiḷaq
20
iñuiññaq

(பத்தில் இருந்து கழித்து 9 உருவாக்கப்படுவது போலவே 20 எனும் iñuiññaq இலிருந்து கழித்து 19 உருவாக்கப்படுகிறது. காண்க, இனுபியாத் மொழி.)

கிரீன்லாந்தின் இனூத் மொழியில்:

1 2 3 4 5 6 7 8
Ataaseq Marluk Pingasut Sisamat Tallimat Arfinillit Arfineq-marluk Arfineq-pingasut
9 10 11 12 13 14 15 16
Qulaaluat, Qulingiluat,
Arfineq-sisamat
Qulit Isikkanillit,
Aqqanillit
Isikkaneq-marluk,
Aqqaneq-marluk

(கிரின்லாந்து வட்டாரத்தைப் பொறுத்து எண்கள் மாறும். மேலும் குரல்உரப்பு மாற்றத்தைப் பொறுத்து எண்களும் மாறும். )[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.ankn.uaf.edu/SOP/SOPv2i1.html#oldway
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனூத்_எண்குறிகள்&oldid=3062783" இருந்து மீள்விக்கப்பட்டது