இனியாத் கான்
இனியாத் கான் عنایت خان | |
---|---|
படிமம்:Hazrat Inayat Khan 1916.jpg | |
பதவி | சூபி மத குரு உலக சமாதானத்திற்கான நடனம் |
சுய தரவுகள் | |
பிறப்பு | இனியாத் ரெஹ்மத் கான் பதான் 5 சூலை 1882 |
இறப்பு | 5 பிப்ரவரி 1927 (வயது 44) |
சமயம் | இசுலாம் |
பதவிகள் | |
பின் வந்தவர் | விலயந்த் (சூபி மத குரு) |
இனியாத் கான் خان عنایت | |
---|---|
![]() இனியாத் கானின் கல்லறை | |
ஏற்கும் சபை/சமயங்கள் | இனியாதி |
முக்கிய திருத்தலங்கள் | சர்வதேச சூபி ஆலயம், நெதர்லாந்து |
இனியாத் ரஹ்மத் கான் பதான் ( உருது : حضرت عنایت رحمت خان پٹھان (ஜூலை 5 1882 - பிப்ரவரி 5 1927) 1914 (லண்டன்) ஆம் ஆண்டில் மேற்கில் சூஃபி மரபினை நிறுவியவர் ஆவார். இவர் சர்வதேச அளவிலான சூபியிசத்தின் ஆசிரியராக இருந்தார். ஹைதராபாத்தின் நிஜாமில் இருந்து மரியாதைக்குரிய " தான்சேன்" விருதினைப் பெற்ற இவர் ஆரம்பத்தில் வட இந்திய பாரம்பரிய இசைக்கலைஞராக இருந்து பின் மேற்கு நோக்கி வந்தார். ஆனால், அவர் விரைவில் சூஃபி சிந்தனை மற்றும் நடைமுறையின் அறிமுகத்தின் காரணமாக ஒரு மாற்றத்திற்கு திரும்பினார். பின்னர், சுவிஸ் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "சர்வதேச சூஃபி இயக்கம் " என்று அமைப்பு உருவாக்கப்பட்டதன் காரணமாக 1923 ஆம் ஆண்டில், லண்டன் காலத்தின் சூஃபி மரபு கலைக்கப்பட்டது.
தெய்வீக ஒற்றுமை பற்றிய அவரது செய்தி (தவ்ஹீத்) காதல், நல்லிணக்கம் மற்றும் அழகு ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டது. எந்தவொரு புத்தகத்தையும் குருட்டுத்தனமாக பின்பற்றுவது ஆன்மா இல்லாத மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒப்பாகும் என்று கற்பித்தார். இனாயத் கானின் இயக்கத்தின் கிளைகள் நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. மியூசிக் ஆஃப் லைஃப்[1] மற்றும் தி மிஸ்டிசம் ஆப் சவுண்ட் அண்ட் மியூசிக்[2] போன்ற அவரது பல்வேறு எழுத்து வடிவ படைப்புகளில், இனயத் கான் தனது சூஃபி சித்தாந்தங்களுடன் இசையின் மீதான தனது ஆர்வத்தை ஒன்றிணைக்கிறார்.
வாழ்க்கை[தொகு]
"அசரத்" என்ற மரியாதை நிமித்தமான அடைமொழியானது மரியாதைக்குரிய என்ற பொருளைத் தருகிறது. இனயாத் கானின் முழுப் பெயர் இனயாத் ரெஹ்மான் கான் பதான் ஆகும்.[3]. இவர் பரோடாவிலுள்ள ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோரைப் பொறுத்தவரை இறைநிலைச் சிந்தனை மற்றும் கவித்துவம் நிறைந்தவர்களாக இருந்தனர். இவரது குடும்பமானது ஆப்கானிஸ்தானி பாஸ்துன்கள் வழி வந்த மரபினைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில் இவர்கள் பஞ்சாப், சியால்கோட்டில் தமது வாழ்வைத் தொடங்கினார்கள். [4][5] இவருடை தாய் வழி தாத்தாவான உஸ்தாத் மெளலா பக்ஷ் கான் (1833–1896) இந்தியாவின் பீத்தோவன் என்று அழைக்கப்பட்டார்.[6][7] உஸ்தாத் மெளலா பக்ஷ்கான் உள்ளூர் அரசர் சாயாஜிராவ் என்பவரரது உதவியுடன் ஞ்யான்சாலா என்ற இந்திய இசைக்கான அகாதெமியை வதோதராவில் தொடங்கினார். இந்திாவில் இத்தகைய அகாதெமிகளில் இது முதலாவதானதாகும்.[8] இன்று இந்த நிறுவனம் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைகளுக்கான கல்விப்புலமாகத் திகழ்கிறது. இனயாத் கானின் தாய்வழி பாட்டியான காசிம் பீவியானவர், மைசூரின் 18 ஆம் நூற்றாண்டு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் பேத்தி ஆவார். [9]
இனயாத் கான் இந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதில் திறன் கொண்டவராக இருந்தார். இனயாத் கான் தனது 18 ஆம் வயதில் பல இசைக் கச்சேரிகளுக்கான இந்தியா முழுவதும் பயணம் செய்தார். இந்த காலகட்டத்தில் பல புதிய மெல்லிசைப்பாடல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட அல்லது மறைந்து போன பல நாட்டுப்புறப்பாடல்களைச் சேகரிக்கும் முயற்சியை மேற்கொண்டார். அவரின் கணிப்புப்படி அவ்வாறு பின்னுக்குத் தள்ளப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களில் தொனியில் ஒரு சிறப்பான, தனித்துவம் மிக்க ஆன்மீகத் தன்மை காணப்பட்டதை உணர்ந்தார். இனயாத்திற்கு இசை கற்றுத் தந்த குருவானவர் மேற்குலகையும், கிழக்குலகையும் உனது வசீகரிக்கும் இசையால் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபடக் கட்டளையிட்டார். இதைத் தொடர்ந்து இனயாத் 1910 ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவிற்குச் சென்றார். [10]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Khan, Hazrat Inayat (2005). The music of life (Omega uniform ed., 1988. ). New Lebanon, N.Y.: Omega Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780930872380. https://archive.org/details/musicoflife00inay.
- ↑ Khan, Hazrat Inayat (1996). The mysticism of sound and music (1. Shambhala ). Boston [u.a.]: Shambhala. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781570622311. https://archive.org/details/mysticismofsound0000inay.
- ↑ Susheela Misra, Great masters of Hindustani music, Hem Publishers (1981), p. 106
- ↑ Vilayat Inayat Khan, The Message in Our Time: The Life and Teaching of the Sufi Master, Pir-O-Murshid Inayat Khan, Harper & Row (1978), p. 28
- ↑ Zia Inayat-Khan, A Hybrid Sufi Order at the Crossroads of Modernity: The Sufi Order and Sufi Movement of Pir-o-Murshid Inayat Khan, ProQuest (2006), p. 80
- ↑ Elisabeth Keesing, Inayat Khan: A Biography, East-West Publications Limited (1974), p.95
- ↑ Carol Ann Sokoloff in Inayat Khan, The Mysticism of Sound, Ekstasis Editions (2002), p. 11
- ↑ Carol Ann Sokoloff in Inayat Khan, The Mysticism of Sound, Ekstasis Editions (2002), p. 9
- ↑ Parvati Raghuram, Tracing an Indian Diaspora: Contexts, Memories, Representations, SAGE Publications India (2008), p. 241
- ↑ "A short biography of Hazrat Inayat Khan". http://www.om-guru.com/html/saints/khan.html.