உள்ளடக்கத்துக்குச் செல்

இனாம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனாம்தார் (Inamdar) என்பவர், இந்தியாவை ஆட்சி செய்த மராத்திய பேஷ்வாக்கள், தக்கானச் சுல்தான்கள் மற்றும் பிரித்தானிய இந்தியா அரசுக்கு செய்யும் ஊழியத்திற்காக மானியமாக வழங்கப்படும் விளைநிலங்களைக் கொண்ட நிலக்கிழார்கள் ஆவார்.[1][2] சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு நம்பிக்கை உரியவர்களுக்கு நிலமாக அல்லது பெரும் பரிசுப் பொருளாகப் பெறுபவர்களுக்கு இனாம்தார் எனும் பட்டம் வழங்கப்பட்டது.[2][3][4][5]

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இனாம்தார்களின் உரிமைகள், கடமைப்பொறுப்புகள் தொடர்பாக 1989- சென்னை மாகாண அரசு, 1989-இல் சென்னை மாகாண இனாம் சட்டம் VIII, 1989-இல் இயற்றியது.[1][2] மேலும் சென்னை மாகாண அரசு இனாம் நிலங்கள் தொடர்பான நிலவரி மற்றும் பதிவேடுகளை நிர்வகிக்க தனி இனாம் ஆணையாளரை நியமித்தது.[6]சில இனாம் நிலங்களை பர்கானா வாட்டன் இனாம் நிலங்கள் என அழைக்கப்பட்டது.[7]

இனாம் ஒழிப்புச் சட்டம்

[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய மாகாண அரசுகள் இனாம்தார் அனுபவிக்கும் நிலங்களின் உரிமையைத் தகுதி நீக்கம் செய்து, இனாம் நிலங்களை, நிலமற்றவர்களுக்கு வழங்கி சட்டங்கள் இயற்றியது.

இனாம் ஒழிப்புச் சட்டங்களில் குறிப்பிடத்தக்கது, பம்பாய் மாகாண அரசின், பம்பாய் தனிநபர் இனாம் ஒழிப்புச் சட்டம் (XLII of 1953), கர்நாடகா (சமயம் & தொண்டு நிறுவனங்கள்) இனாம் ஒழிப்புச் சட்டம் 1955, கர்நாடகா தனிநபர் இனாம் ஒழிப்புச் சட்டம், 1977, ஹைதராபாத் இனாம் ஒழிப்புச் சட்டம், 1955 மற்றும் தமிழ்நாடு இனாம் (ஒழிப்பு & ரயத்துவாரி மாற்றம்) சட்டம், 1963[8] [1][7][9][10][11]ஆகும்.

இனாம் ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டதால், இனாம்தார் எனும் கௌரவப் பெயரும் காலப் போக்கில் வழக்கொழிந்தன. வட இந்தியாவில் சில முன்னாள் இனாம்தார்கள், தங்களின் குடும்பப் பெயராக இனாம்தார் என வைத்துக் கொண்டுள்ளனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 A. Bhaskaran vs The State Of Madras By The ... on 24 June, 1966
  2. 2.0 2.1 2.2 [1] All India reporter, Volume 3, 1955
  3. | P.V. Bheemasena Rao And Anr. vs Sirgiri Peda Yella Reddi And Ors. on 8 January, 1954
  4. [2] The Law reports:Indian appeals: being cases in the Privy Council on appeal from the East Indies...1949
  5. | P.V. Bheemasena Rao And Anr. vs Sirgiri Peda Yella Reddi And Ors. on 8 January, 1954
  6. [3] Accounts and papers of the House of Commons By Great Britain. Parliament. House of Commons
  7. 7.0 7.1 [4] Bombay law reporter: Reports, Volume 87, 1985
  8. The Tamil Nadu Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963
  9. [5] Land Reforms in India: Karnataka: Promises Kept and Missed
  10. [6] Debates; Official Report, Volume 43, Issue 3
  11. | P.V. Bheemasena Rao And Anr. vs Sirgiri Peda Yella Reddi And Ors. on 8 January, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனாம்தார்&oldid=4058766" இலிருந்து மீள்விக்கப்பட்டது