உள்ளடக்கத்துக்குச் செல்

இனானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனானம்
Inanam
下南南
கோத்தா கினபாலு புறநகர்ப் பகுதி
இனானம் நகரத் தெரு
இனானம் நகரத் தெரு
இனானம் is located in Borneo
இனானம்
இனானம்
ஆள்கூறுகள்: 5°59′N 116°08′E / 5.983°N 116.133°E / 5.983; 116.133
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
மாவட்டம்கோத்தா கினபாலு
நேர வலயம்மலேசிய நேரம் +8
தொலைபேசி+60-088

இனானம் (மலாய்; ஆங்கிலம்: Inanam) என்பது போர்னியோ தீவு, மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதி; மற்றும் ஒரு துணை மாவட்டமும் ஆகும். அத்துடன் ஒரு நகரம் என்றும் வகைப்படுத்தப்படும் இந்தத் துணை மாவட்டம் செபங்கார் மக்களவைத் தொகுதியில் உள்ளது.

இந்தப் புறநகர்ப் பகுதி, கோத்தா கினபாலு மாநகர மையத்திலிருந்து 10 கிமீ. (6.2 மைல்கள்) தொலைவில் உள்ளது. மலைப்பாங்கான நிலப்பரப்பையும், வளமான சமதள நிலத்தையும் கொண்டுள்ள இனானம், அருகில் உள்ள கொலம்போங் நகரைப் போல தொழில்துறைப் பகுதிகளில் ஒன்றாகவும் சிறந்து விளங்குகிறது. இனானம் வணிக மையம் கோத்தா கினபாலு மாநகரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில், துவாரான் சாலையின் 6-வது மைலில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

ஓகேகே மஜிம்புன் மஜாங்கின் (OKK Majimbun Majangkin) என்பவர் இனானம் நகர மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1] மஜிம்புன் மஜாங்கின் (1908–1981); இனானம் நகரம் மற்றும் கோத்தா கினபாலு மாநகரம் ஆகியவற்றின் சமூகப் பூர்வீகத் தலைவர் ஆவார். இவர் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[2]

இரண்டாம் உலகப் போரின் போது, ​​ஆல்பர்ட் குவோக்[3] (Albert Kwok) தலைமையிலான கினபாலு கெரில்லாக்கள் சப்பானியர்களை எதிர்த்துப் போராட இனானம் நகரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டனர்.[2]

மக்கள்தொகை

[தொகு]

இனானம் நகர மக்கள் தொகையைப் பொருத்த வரையில், பூர்வீக டூசுன் மக்கள் மற்றும் பஜாவு மக்கள் என இரு தரப்பினரும் முதன்மையாக உள்ளனர். வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மையினர் சீனர்கள், பலவகைக் கடைகளை வைத்து வணிகம் செய்து வருகின்றனர்.

இருப்பினும், தெற்கு பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குடியேறிகளும் வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் குடிநுழைவு ஆவணங்கள் இல்லாதவர்களாக வாழ்கின்றனர்.[4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Syarifah Yasreen Balqish Syed Hassan (2009). "OKK Majimbun Majangkin: Tokoh pemimpin daerah Inanam, Sabah (1908-1981)" (in மலாய்). Universiti Malaysia Sabah Repository. Retrieved 15 March 2017.
  2. "OKK Majimbun Majangkin was first appointed as the Kota Kinabalu District Chief by the British Governor in the 1960s". MalaysiaAktif. Retrieved 24 July 2026.
  3. Tregonning, page 219
  4. "Make Inanam a police hotspot, urges Kapitan". Daily Express. 25 February 2011. Retrieved 15 March 2017.
  5. Elton Gomes (6 May 2016). "Police, City Hall to go after illegals in Inanam". The Borneo Post. Retrieved 15 March 2017.

    நூல்கள்

    [தொகு]
    • K. G. Tregonning: "A History Of Modern Sabah (North Borneo 1881-1963)", 2. Edition, University of Malaya Press, Kuala Lumpur, 1965, Reprint 1967

    வெளி இணைப்புகள்

    [தொகு]
    "https://ta.wikipedia.org/w/index.php?title=இனானம்&oldid=4608959" இலிருந்து மீள்விக்கப்பட்டது