இனாத்கான்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துலுக்கம்பட்டி என அழைக்கப்படும் இனாத்கான்பட்டி, தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கே இனாத்கான் என்ற இஸ்லாமியர் ஒருவரின் சமாதி உள்ளது. இங்கிருக்கும் இனாத்கான் என்பவர் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர்களிடம் வரிவசூல் செய்யும், குறுநில மன்னனாக இருந்தவன் என வாய்வழிச்செய்திகள் மூலம் அறியமுடிகிறது. இவரைப்பற்றி அப்பகுதி மக்களின் வாய்மொழிச்செய்திகள்-கதைகள் தவிர வரலாற்று பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் சாதி-மதம் என்ற எல்லைகளைக் கடந்து இந்த கிராமத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் கோரி அய்யா என அழைக்கப்படும் இனாத்கான், இஷ்டதெய்வமாக வழிபடப் படுவது இவ்வூரின் சிறப்பு. இஸ்லாமிய வழிபாட்டு முறைப்படி ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழாவும், இந்துமத சம்பிராதய முறையில் ஆனிமாதம் 10 நாள் கிராமத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எஸ். ராஜகுமாரன் இயக்கத்தில் இனாத்கான்பட்டி ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனாத்கான்பட்டி&oldid=1490373" இலிருந்து மீள்விக்கப்பட்டது