இனவாரி தனிப்படுத்துகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சியார்ச்சியா மாநிலப் பேருந்து நிலையமொன்றில் "நிறமுள்ளோருக்கான" காத்திருப்பு அறைக்கான வழிகாட்டி, 1943.

ஐக்கிய அமெரிக்காவில் இனவாரி தனிப்படுத்துகை (Racial segregation in the United States) எனும் பொதுச்சொல், வேலை, போக்குவரத்து, மருத்துவ உதவி, இருப்பிடம் போன்றவற்றில் வசதிகள், சேவைகள் மற்றும் வாய்ப்புகள் இன அடிப்படையில் பிரிக்கப்படுவதைக் குறிக்கிறது. இச்சொற்றொடர் பெரும்பாலும் சட்டத்தாலும் சமூகத்தாலும் ஆபிரிக்க அமெரிக்கர்கள் பிற இனத்தவரிடமிருந்து தனிப்படுத்துவதைக் குறிப்பிட்டாலும் மற்ற சிறுபான்மையினரும் முதன்மை பெரும்பான்மையினரிடமிருந்து பிரிக்கப்படுவதையும் குறிக்கிறது.

ஐக்கிய அமெரிக்காவில் இனவாரி தனிப்படுத்துகையால் தனியான வசதிகள் (குறிப்பாக ஜிம் குரோ காலத்தில்) அளிக்கப்பட்டன; மேலும் இனவாதத்தின் வெளிப்பாடாக ஒரே நிறுவனத்தில் தனித்தனி பதவிகள் என்றும் விரிந்தன. காட்டாக ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளில் 1950கள் வரை கறுப்பினத்தவரின் பிரிவுகளும் வெள்ளை இனத்தவரின் பிரிவுகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.