இனயம்
Appearance
இனயம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°13′02″N 77°11′17″E / 8.21722°N 77.18806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மொழிகள் | |
• அலுவலல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 629193 |
இனயம் (Enayam) கடற்கரை கிராமம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இனையம் புத்தன்துறை ஊராட்சியில், அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான நாகர்கோவிலுக்கு தென்மேற்கே 32 கிமீ தொலைவில் உள்ளது. இது குளச்சல் அருகே உள்ளது.
இனையம் துறைமுகத் திட்டம்
[தொகு]அரபுக் கடற்கரை கிராமமான இனையத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பரப்பில் பன்னாட்டு துறைமுகம் நிறுவ, இந்திய அரசு ரூ. 27,570 கோடி மதிப்பிலான திட்டம் தீட்டியுள்ளது.[1] [2]
இனயம் துறைமுகம் நிறுவ எதிர்ப்புகள்
[தொகு]இனயத்தில் துறைமுகம் நிறுவினால் தங்கள் வாழ்வாதாரம் அழியும் என உள்ளூர் மீனவ மக்கள் கருதுவதால், இனயம் துறைமுகத் திட்டத்திற்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. [3]