உள்ளடக்கத்துக்குச் செல்

இனம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனம்
சுவரிதழ்
இயக்கம்சந்தோஷ் சிவன்
தயாரிப்புமுபினா ராட்டன்சி
சந்தோஷ் சிவன்
என். சுபாஷ் சந்திரபோஸ்
திரைக்கதைசந்தோஷ் சிவன்
சாசி
சரண்யா ராஜ்கோபால்
கதைசொல்லிஅரவிந்த்சாமி
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புஎஸ். கரண்
சுகந்தா ராம்
சரிதா
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
கலையகம்சந்தோஷ் சிவன் பிலிம்ஸ்
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா
வெளியீடு5 அக்டோபர் 2013 (2013-10-05)(பூசன் சர்வதேச திரைப்பட விழா)
28 மார்ச்சு 2014
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆங்கிலம்

தமிழில் இனம் என்று பெயரிடப்பட்ட சிலோன் [1] என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தியப் போர் திரைப்படமாகும். இப்படத்தை சந்தோஷ் சிவன் எழுதி, இயக்கி, படமாக்கி, தயாரித்தார். இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த ஈழப் போரின் போது ஒரு அனாதை இல்லத்தில் உள்ள விடலைப் பருவக் குழுவினரைப் பற்றியது ஆகும். இந்தத் திரைப்படம் 2013 பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது [2] பின்னர் 2014 மார்ச் 28 அன்று இந்தியாவில் திரையரங்குகளில் வெளியானது.[3] இது விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் குழுக்களின் எதிர்ப்புகளைச் சந்தித்தது. பின்னர், லிங்குசாமி (படத்தின் விநியோக உரிமையை வாங்கியவர்) இந்தப் படத்தை திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெற்றார்.[4]

கதைக்களம்

[தொகு]

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான ரஜினி, தனது தாயகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதியாக வாழ வேண்டியதன் கொடூரமான கதையை விவரிக்கிறார்.

நடிகர்கள்

[தொகு]
  • நந்தனாக கரண் எஸ்
  • ரஜினியாக சுகந்தா ராம்
  • சுனாமி அக்காவாக சரிதா
  • ஸ்டான்லியாக கருணாஸ்
  • ரவியாக ஷியாம் சுந்தர்
  • ஸ்டெல்லாவாக ஜானகி
  • சௌமியா சதானந்த்
  • விக்ரம் சக்ரவர்த்தி
  • எம்.கே.விஜயன்
  • மாலினி சாத்தப்பன்
  • தஸ்லிம்

தயாரிப்பு

[தொகு]

2009 ஆம் ஆண்டில், சந்தோஷ் சிவனின் அடுத்த படம் " விடுதலைப் புலிகள் தொடர்பான மோதல் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கடுமையான அரசியல் படம்" என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.[5] 2012 சூனில், அவர் கூறுகையில் இலங்கையில் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் ஒரு சில இளைஞர்களின் பார்வையில் இருந்து இலங்கை நிலைமையைப் பார்க்க விரும்புகிறேன். இது அரசியலைப் பற்றியது அல்ல, பயங்கரங்களுக்கு வெளியாட்களின் எதிர்வினையைப் பற்றியது" என்று அவர் கூறினார்.[6] மழைக்குப் பிறகு இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவேன் என்றும், " இலங்கை ஒரு சுற்றுலா தலமாக மட்டும் தோன்றுவதை" விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.[6] சிவன் இப் படத்தை தன் செல்லப் படம் என்று விவரித்தார்.[7]

இந்தப் படத்தை கேரளம், திருநெல்வேலி, இராமேசுவரம், மகாராட்டிரம் [8] உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவன் தானே ரெட் எபிக் டிஜிட்டல் ஒளிப்படமி கொண்டு படமாக்கினார்.[9] அவரால் அதிக முறை படம்பிடிக்க முடியாததால், ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு ஒளிப்படமிகள் பயன்படுத்தப்பட்டன.[10] அவர் ஒரு உயர்நிலை எண்ணியல் ஒளிப்படமியைப் பயன்படுத்தினாலும், இலங்கைப் போர்களில் செல்பேசிகள் முக்கியப் பங்கு வகித்ததை அறிந்ததால், செல்பேசி அல்லது கையடக்க ஒளிப்படமி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை இயற்கைநிலையாகக் காட்ட வேண்டுமென்றே செய்ததாகக் கூறினார் [11] .[12] படம் "பச்சையாகவும், பழமையானதாகவும்" இருக்க வேண்டும் என்றும், அழகாக இருக்கக்கூடாது என்றும் சிவன் உணர்ந்ததால், "அனைத்து அழகான காட்சிகளையும் ஒதுக்கி வைக்குமாறு" படத்தொகுப்பாளர் சுரேஷிடம் கூறினார்.[11]

இலங்கை வரைபடத்தை ஒத்த இரத்தம் தெறித்த கைரேகையைக் கொண்டு முதல் தோற்றம், ஜெய்ராம் போஸ்டர்வாலாவால் வடிவமைக்கப்பட்டு, 2013 சூனில் வெளியிடப்பட்டது.[13] அரவிந்த்சாமி படத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்தார்.[14] இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் 2013 அக்டோபரில் அனுமதி அளித்தது.[15] நடிகர் உதயாவின் மனைவி கீர்த்திகா உதயா அனைத்து பதிப்புகளிலும் சுகந்தாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது பரபரப்பூட்டும் படம் என்பதால் "பின்னணி இசை இதயத்தைத் தொடுகிறது" என்றும், ஆனால் ஒரு பைலா மற்றும் "சில காதல் பாடல்கள், வித்தியாசமான வழியில் நடைபோடப்பட்டன" ஆகியவையும் சேர்க்கப்பட்டதாகவும் சிவன் கூறினார்.[12]

வெளியீடு

[தொகு]

இந்தப் படம் முதன்முதலில் 18வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[16][17] படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை பிப்ரவரி 2014 இல் என். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கியது.[18] திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பு, சிவனும், திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமும் சென்னை மற்றும் மும்பையில் பலருக்கு படத்தைத் திரையிட்டு காட்டினர்.[19] இந்தப் படம் 2014 மார்ச் 28 அன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள பாலாஜி திரையரங்கைத் தாக்கி தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். இந்தப் படம் ஈழப் போரை மோசமாக சித்தரிப்பதாகக் கூறினர். மறுநாள் நான்கு காட்சிகளும் ஒரு உரையாடலும் நீக்கப்பட்டது.[20] மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ இந்தப் படம் சிங்களவர்களுக்கு ஆதரவானது என்று கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, லிங்குசாமி 2015 மார்ச் 31 முதல் திரையிடலை நிறுத்திவிட்டு திரையரங்குகளில் இருந்து படத்தை திரும்பப் பெற முடிவு செய்தார்.[21][22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mumbai Mirror (20 August 2013). "Santosh Sivan's film on island of blood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 23 August 2013. Retrieved 15 November 2013.
  2. Santosh SIVAN (8 August 2009). "WWW.BIFF.KR A Window on Asian Cinema Program / A Window on Asian Cinema". Biff.kr. Archived from the original on 4 March 2016. Retrieved 19 December 2013.
  3. "Friday Fury – March 28". சிஃபி. Archived from the original on 1 April 2014. Retrieved 31 March 2014.
  4. "Santosh Sivan's 'Inam' pulled from cinemas after Tamil groups protest". Livemint. Retrieved 31 March 2014.
  5. Subhash K Jha (6 July 2009). "Sivan to make film on LTTE". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 December 2013. Retrieved 15 November 2013.
  6. 6.0 6.1 Subhash K Jha (11 June 2012). "Santosh Sivan, Shoojit Sircar set to capture LTTE". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 27 August 2012. Retrieved 15 November 2013.
  7. Sudhish Kamath (1 June 2012). "Sivan in focus". The Hindu. Retrieved 15 November 2013.
  8. Sudhish, Navamy (25 March 2014). "Inam, a Fresh Take on War". The New Indian Express. Archived from the original on 6 October 2015. Retrieved 31 March 2014.
  9. "'The best fish is eaten by people living by the sea who don't add too many flavours'". The Telegraph. Kolkota. Archived from the original on 2 December 2013. Retrieved 15 November 2013.
  10. Sudhish Kamath (16 November 2013). "A special point of view". The Hindu. Retrieved 19 December 2013.
  11. 11.0 11.1 Pudipeddi, Haricharan (11 November 2013). "Santosh Sivan broke grammar of capturing shots in 'Ceylon': Editor". The New Indian Express. Archived from the original on 11 November 2013. Retrieved 15 November 2013.
  12. 12.0 12.1 "'I don't make movies to invite controversy': Santosh Sivan". Deccan Chronicle. 30 July 2013. Archived from the original on 2 August 2013. Retrieved 15 January 2016.
  13. "Santosh Sivan's 'Ceylon' first-look poster!". சிஃபி. 4 June 2013. Archived from the original on 9 June 2013. Retrieved 15 November 2013.
  14. "Arvind Swami in Santosh Sivan's 'Ceylon'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 June 2013. Archived from the original on 21 June 2013. Retrieved 15 November 2013.
  15. . 30 October 2013. 
  16. Our Bureau (16 September 2013). "Indian films at Busan Film Festival". Business Line. Retrieved 15 November 2013.
  17. Santosh SIVAN (8 August 2009). "WWW.BIFF.KR A Window on Asian Cinema Program / A Window on Asian Cinema". Biff.kr. Archived from the original on 4 March 2016. Retrieved 15 November 2013.
  18. "Santosh Sivan's Inam (aka) Ceylon to be released by Thirrupathi Brothers". Behindwoods. Retrieved 31 March 2014.
  19. "Inam- Everybody is raving about it!". சிஃபி. 26 March 2014. Archived from the original on 27 March 2014. Retrieved 31 March 2014.
  20. "After Protests, Five Inam Scenes Clipped". The New Indian Express. Archived from the original on 7 April 2014. Retrieved 31 March 2014.
  21. "Inam's screening to be pulled out after Vaiko's Protest". The New Indian Express. Archived from the original on 31 March 2014. Retrieved 31 March 2014.
  22. "Inam out of theatres in Tamil Nadu". The Times of India. Retrieved 31 March 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனம்_(திரைப்படம்)&oldid=4368116" இலிருந்து மீள்விக்கப்பட்டது