இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?
நூலாசிரியர்ராஜ்சிவா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைதுப்பறியும் கட்டுரை
வெளியீட்டாளர்உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
01.01.2014
பக்கங்கள்216 பக்கங்கள்
ISBN978-93-81975-52-7

‎இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? எனப்படுவது தமிழ் எழுத்தாளர் ராஜ்சிவா எழுதிய ஒரு அறிவியல் கட்டுரைத் தொகுப்பு நூலாகும். 2013-ல் எழுதிய இந்தப் புத்தகம் உயிர்மை இதழில் ஒரு தொடராக வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இது அறிவியலா? இல்லை மூட நம்பிக்கையா? என்று புரியாமல் மக்களைத் தவிக்க வைக்கும் மர்மங்கள் உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. இந்த மர்மங்கள் விடுவிக்கப்படாமல், 'இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம்' என்ற அனுமானங்களுடன் இருக்கும் போது, இவற்றின் உண்மையான தீர்வுகள் எங்கேயோ புதைந்து போய் வெளிவராமல்தான் இருக்கின்றன. இந்த மர்மங்கள் தொடர்பான உண்மைகள் ஏற்கனவே சில நாடுகளுக்கு அல்லது நிறுவனங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த வகையில் பார்க்கும் போதுதான், பலமான ஒரு கேள்வி நம்மிடையே எழுகின்றது. அந்தக் கேள்வி இதுதான். 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?'.

இந்தக் கேள்வியின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில மர்மங்களை இந்த நூல் விளக்குகிறது. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் பயிர் வட்டங்கள் யாரால், எப்படி, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் மர்மத்தில் ஆரம்பமாகி அயல்கிரகவாசிகளான (Aliens) இருக்கின்றனரா? என்பது வரை இந்த நூல் ஆராய்கிறது. ஒரு முழுமையான அறிவியல் தன்மையுடைய ஆராய்ச்சியை இந்தப் நூல் கொண்டிருக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]