இந்த் மஸ்தூர் சபா
![]() | |
சுருக்கம் | HMS |
---|---|
உருவாக்கம் | 29 டிசம்பர் 1948 |
நிறுவனர் | அசோக் மேத்தா, பஸ்வான் சிங், ஆர். எஸ். ரூய்கர், மணிபென் கரா, சிவநாத் பானர்ஜி, ஆர். ஏ. கேட்ஜிகர், டி. எஸ். இராமானுஜம், வி. எஸ். மாத்தூர், ஜி. ஜி. மேத்தா |
வகை | தொழிலாளர் சங்கம் |
தலைமையகம் | புது தில்லி |
உறுப்பினர்கள் | 3.3 மில்லியன் |
தலைவர் | சி. ஏ. இராஜாசிறீதர் (தலைவர்) & ஹர்பஜன் சிங் (பொதுச் செயலாளர்) |
சார்புகள் | பன்னாட்டு தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (ITUC) |
வலைத்தளம் | www |
இந்த் மஸ்தூர் சபா அல்லது இந்தியத் தொழிலாளர் சபை (Hind Mazdoor Sabha) (சுருக்கமாக:HMS), இந்தியாவின் சோசலிசத் தலைவர்கள் 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொழிலாளர் சங்கம் ஆகும். இது பன்னாட்டு தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த் மஸ்தூர் சபாவில் 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
வரலாறு
[தொகு]இந்தியாவின் சோசலிசவாதிகள், அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட தொழிற்சங்கவாதிகள் ஒன்றிணைந்து 29 டிசம்பர் 1948 அன்று மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஹவுரா நகரத்தில் இந்த் மஸ்தூர் சபா எனும் தொழிற்சங்கம் நிறுவப்பட்டது. இதன் நிறுவனத் தலைவர்கள் அசோக் மேத்தா, பஸ்வான் சிங், ஆர். எஸ். ரூய்கர், மணிபென் கரா, சிவநாத் பானர்ஜி, ஆர். ஏ.கேட்ஜிகர், டி. எஸ். இராமானுஜம், வி. எஸ். மாத்தூர் மற்றும் ஜி. ஜி. மேத்தா ஆவார். இந்த் மஸ்தூர் சபாவின் முதல் தலைவராக ஆர். எஸ்.. ரூய்கரும், பொதுச்செயலராக அசோக் மேத்தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசிலிருந்து (AITUC) விலகிய எம். என். ராய் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை இந்த் மஸ்தூர் சபா தன்னுள் இணைத்துக் கொண்டது.[1]மார்ச், 1949ல் இந்த் மஸ்துர் சபா தொழிற்சங்கத்தில் 180 தொழிற்சங்கங்கள், 6,18,802 உறுப்பினர்களுடன் செயல்பட்டது.[2][3] தற்போது இதன் தலைவராக சி. ஏ. இராஜாசிறீதர் மற்றும் பொதுச்செயலளராக ஹர்பஜன் சிங் உள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை
[தொகு]இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2002ஆம் ஆண்டில் இந்த் மஸ்தூர் சபா 33,42,213 உறுப்பினர்களை கொண்டிருந்தது. (இது இந்தியாவின் தொழிற்சங்க உறுப்பினர்களில் 13% ஆகும்)[4][5]
1.4 மில்லியன் உறுப்பினர்கள் கொண்ட அனைத்திந்திய இரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பு (All India Railwaymen's Federation) இந்த் மஸ்தூர் சபாவில் இணைந்துள்ளது.[6][7] அனைத்திந்திய துறைமுகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (All India Port and Dock Workers Federation), இந்த் மஸ்தூர் சபாவுடன் இணைப்பு பெற்றுள்ளது.[8][9]
பன்னாட்டு இணைப்பு
[தொகு]1949ல் இந்த் மஸ்தூர் சபா, சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் (International Confederation of Free Trade Unions) நிறுவன உறுப்பினராக இணைந்துள்ளது. தற்போது இந்த் மஸ்தூர் சபா, பன்னாட்டு தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பில் (International Trade Union Federation) இணைப்பு பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sinha, P.R.N.; Sinha, Indubala; Shekhar, Seema (2006). Industrial Relations, Trade Unions, and Labour Legislation. Pearson Educational. pp. 79–80. ISBN 9788177588132.
- ↑ Park, Richard L.. Labor and Politics in India, in Far Eastern Survey, Vol. 18, No. 16. (10 August 1949), pp. 181-187.
- ↑ header3 பரணிடப்பட்டது 28 நவம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Aggregate data on membership of CTUOs 1989 and 2002 (Provisional)" (PDF). Archived from the original (PDF) on 9 April 2011. Retrieved 9 April 2011.
- ↑ indianexpress.com
- ↑ Vikas Dhoot (June 29, 2013). "Indian Railways headed for first indefinite strike in October". Economic Times. http://economictimes.indiatimes.com/industry/transportation/railways/indian-railways-headed-for-first-indefinite-strike-in-october/articleshow/20825762.cms..
- ↑ "List of Federations". Hind Mazdoor Sabha. Retrieved July 7, 2017.
- ↑ Venkataraman, CS (1997). "Changes in Industrial Relation in Indian Ports". In Venkataraman, CS; Varma, Anil (eds.). Challenge of Change: Industrial Relations in Indian Industry. Allied Publishers. p. 454. ISBN 9788170236511. Retrieved July 7, 2017.
- ↑ P. Manoj. "Government planning to convert 12 of 13 Union govt-owned ports into companies". LiveMint. http://www.livemint.com/Politics/1bNWZWafvfvLyVywQK6vvJ/Government-planning-to-convert-12-of-13-ports-into-companies.html. பார்த்த நாள்: July 7, 2017.
- ICTUR, ed. (2005). Trade Unions of the World (6th ed.). London, UK: John Harper Publishing. ISBN 0-9543811-5-7.