இந்த் பிந்த் உத்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த் பிந்த் உத்பா (Hind bint Utbah) என்பவர் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த ஓர் அரபு பெண்ணாவார். இவர் மேற்கு அரேபியாவில் மக்காவின் சக்திவாய்ந்த மனிதரான அபு சுப்யான் இப்னு அர்பின் என்பவரின் மனைவியாவார். இவர் உமையா வம்சத்தின் நிறுவனர் முதலாம் முஆவியா மற்றும் அன்சாலா, சுவேரியா மற்றும் உம் ககம் ஆகியோரின் தாயாருமாவார். [1] . முகம்மதுவின் மனைவிகளில் ஒருவரான ராம்லா பின்த் அபி சுப்யான், இவரது வளர்ப்பு மகளாவார். [2]

அபு சுப்யான் மற்றும் இந்த் இருவரும் 630 இல் இசுலாமிய மதமாற்றத்திற்கு முன்னர் இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மதுவை எதிர்த்து வந்தனர். [3] [4] [5] [6]

வாழ்க்கை[தொகு]

இவர் மக்காவில் பிறந்தார். குறைசிகளின், மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான உத்பா இப்னு ரபியா மற்றும் சபியா பின்த் உமய்யா இப்னு அப்து சாம்சின் மகளாவார். எனவே சபியா மற்றும் உத்பா இவரது உறவினர்கள் ஆவர். [7] இவருக்கு அபு-உதாய்பா இப்னு உத்பா மற்றும் வாலித் இப்னு உத்பா என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இவருக்கு அட்டிகா பிந்த் உத்பா மற்றும் உம் குல்தும் பிந்த் உத்பா என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இசுலாத்தின் பிரதான விரோதிகளில் இவரது தந்தையும் இவரது தந்தை மாமா சைபா இப்னு ரபாவும் இருந்தனர், அவர்கள் இறுதியில் பதுருப் போரில் அலியால் கொல்லப்பட்டனர். [8]

இவரது முதல் கணவர் மக்சூம் குலத்தைச் சேர்ந்த அப்சு இப்னுல் - முகிரா என்பராவார். இவருக்கு அபான் என்ற ஒரு மகன் பிறந்தார். [9] அப்சு நோய் காரணமாக இளம் வயதிலேயே இறந்தார். இந்த் அப்சின் சகோதரர் அல்-பகா என்பவரை மணந்தார். [10] [11]

முகம்மதுவுடன் மோதல்[தொகு]

613 முதல் 622 வரை முகம்மது இசுலாத்தின் செய்தியை மக்காவில் பகிரங்கமாகப் பரப்பி வந்தபோது, இந்துவும் இவரைப் பின்பற்றுபவர்களும் இதை எதிர்த்தனர். 622 ஆம் ஆண்டில் இவர்கள் மதீனா அழைக்கப்படும் தொலைதூர நகரமான யாத்ரிபிற்கு குடிபெயர்ந்தனர். 624 ஆம் ஆண்டில், வர்த்தக நோக்கங்களுக்காக சிரியாவிற்கு சென்று கொண்டிருந்த இந்த் மற்றும் அவரது கணவர் அபு சுப்யான் தலைமையிலான ஒரு குழுவைத் தாக்க முகம்மது ஏற்பாடு செய்தார். தாக்குதலைப் பற்றி அவர்கள் அறிந்தவுடன், அபு சுப்யான் தங்களைப் பாதுகாக்க ஒரு மெக்கன் இராணுவத்தை ஏற்பாடு செய்தார். இது பதுருப் போருக்கு வழிவகுத்தது. முஸ்லிம்கள் மெக்கன்களை தோற்கடித்தனர். இந்தின் தந்தை, மகன், சகோதரர் மற்றும் மாமா அனைவரும் இந்தப் போரில் கொல்லப்பட்டனர். [12]

இதனால் முஸ்லிம்கள் மீது இந்தின் கோபம் மிகத் தீவிரமானது. தன் தந்தை மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பழிவாங்கும் விதமாக  முஸ்லீம்களை பழிவாங்க எண்ணினார். அதற்காக தானே முன்னின்று மெக்கன் படைகளை ஏற்பாடு செய்தார். இந்து மெக்கான் படைகளுடன் உஹத் போருக்குச் சென்றார். அபு சுப்யான் இப்னு அர்ப் வெளியேறிய பிறகு, முகம்மது உடனடியாக ஒரு பெரிய இராணுவத்தை கூட்டினார். இந்த நடவடிக்கையின் நோக்கம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் முகம்மதுவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் தளபதிகளுக்குக் கூட அவரது திட்டங்கள் பற்றி அறியவில்லை. முகம்மது இரகசியமாக குரேசை தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். [13]

இருப்பினும், கி.பி 630 இல் முகம்மது தலைமையிலான முஸ்லிம்களால் மக்கா கைப்பற்றப்பட்டப் பின்னர், இந்த் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வுகளின் தேதிகள் குறித்து பண்டைய ஆதாரங்கள் வேறுபடுகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. Ibn Ishaq, Sirat Rasul Allah. Translated by Guillaume, A. (1955). The Life of Muhammad, pp. 337, 385. Oxford: Oxford University Press.
  2. Tabari, Tarikh al-Rusul wa’l Muluk. Translated by Landau-Tasseron, E. (1998). Biographies of the Prophet's Companions and Their Successors, vol. 39, p. 177. New York: SUNY Press.
  3. "Why Abu Sufyan Was Ordered To Be Killed…". Discover The Truth. 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  4. "The Prophet and the people who opposed him | SoundVision.com". www.soundvision.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  5. Administrator. "The Letter of the Prophet to the Emperor of Byzantium (part 1 of 3): An Introduction - The Religion of Islam". www.islamreligion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  6. "Abu Sufyan and his position in the Islamic community". www.aldhiaa.com. Archived from the original on 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  7. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir vol. 8. Translated by Bewley, A. (1995). The Women of Madina, p. 165. London: Ta-Ha Publishers.
  8. Olsen, Kirstin (1994). Chronology of women's history. Greenwood Publishing Group. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-313-28803-8. https://archive.org/details/isbn_9780313288036/page/31. 
  9. Ibn Saad/Bewley p. 165.
  10. Munir Mohammed AlGhadban, Hind Bint Utbeh (1982) p. 19. Riyadh: Mektabat Al-Haramin.
  11. Jalal al-Deen al-Suyuti. Tarikh al-Khulufa. Translated by Jarrett, H. S. (1881). History of the Caliphs, p. 200. Calcutta: The Asiatic Society.
  12. Ibn Ishaq/Guillaume p. 337.
  13. Ibn Ishaq/Guillaume p. 371.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்த்_பிந்த்_உத்பா&oldid=3543524" இலிருந்து மீள்விக்கப்பட்டது