இந்தோனேசிய ரூபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசிய ரூபாய்
ரூபியா இந்தோனேசியா
இந்தோனேசிய ரூபியா வங்கித்தாள்கள் (தற்போது புழக்கத்திலுள்ளவை)
ஐ.எசு.ஓ 4217
குறிIDR (எண்ணியல்: 360)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுRp
மதிப்பு
துணை அலகு
 1/100சென் (புழக்கத்திலில்லை)2
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)Rp 1000, Rp 2000, Rp 5000, Rp 10 000, Rp 20 000, Rp 50 000, Rp 100 000
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
Rp 100, Rp 200, Rp 500, Rp 1000
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

Rp 25, Rp 50
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
 இந்தோனேசியா
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
 கிழக்குத் திமோர்நடைமுறைப்படி 1
வெளியீடு
நடுவண் வங்கிBank Indonesia
 இணையதளம்www.bi.go.id
அச்சடிப்பவர்பெரும் பெரூரி
 இணையதளம்www.peruri.co.id
காசாலைபெரும் பெரூரி
 இணையதளம்www.peruri.co.id
மதிப்பீடு
பணவீக்கம்4.61%, அக்டோபர் 2012
 ஆதாரம்இந்தோனேசிய வங்கி
 முறைநுகர்வோர் விலைக் குறியீடு
1) கிழக்குத் திமோரில் அலுவல்முறையாக அமெரிக்க டாலரும் சென்டாவோ நாணயங்களும் அறிவிக்கப்பட்டபோதிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வணிகர்களும் சந்தைகளும் இந்தோனேசிய ரூபியாவையும் அவுஸ்திரேலிய டொலர்களையும் ஏற்றுக் கொள்கின்றனர்.[1]
2) உள்-அலகு, சென், அதன் மிகக் குறைந்த மதிப்பினால் புழக்கத்தில் இல்லை. விலைகளும் பணத்தொகைகளும் RpX.XXX,00 அல்லது RpX.XXX,- என எழுதப்படுகின்றன. (குறிப்பு:இந்தோனேசியாவில் தசமத் தான குறியீடு காற்புள்ளியாகும்) பல விலைப்பட்டிகள் விலையை RpX.XXX என்றே குறிக்கின்றன. (25 ரூபியா நாணயமே மிகவும் குறைந்த மதிப்பிலான நாணயமாகும்). இருப்பினும், சென் நிதி அறிக்கைகளிலும் வங்கி அறிவிக்கைகளிலும் இடம் பெறுகின்றது.

இந்தோனேசிய ரூபாய் அல்லது ரூபியா (rupiah, Rp) இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு (ஐடிஆர்) IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானியச் சொல்லான ரூப்யா (روپیہ),(रुपया), மற்றும் சமசுகிருத வேரிலிருந்து (रूप्य; வார்ப்பு வெள்ளி) வந்துள்ளது. பேச்சு வழக்கில் இந்தோனேசியர்கள் வெள்ளி என்பதற்கான இந்தோனேசியச் சொல்லான "பெராக்" என்பதையும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரூபியாவும் 100 சென்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; பணவீக்கத்தால் சென் நாணயங்களும் வங்கித்தாள்களும் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன.

ரியாயு தீவுகளும் நியூ கினியின் இந்தோனேசியப் பகுதியும் முன்பு தங்களுக்கேயான ரூபியாவைப் பயன்படுத்தி வந்தன; ஆனால் முறையே 1964, 1971ஆம் ஆண்டுகளில் இருந்து இங்கும் தேசிய ரூபியாவே செயலாக்கப்பட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ளவை[தொகு]

தற்போது 50 ரூபியா முதல் 1000 ரூபியா வரை நாணயங்கள் புழங்கி வருகின்றன. (ஒரு ரூபியா, அலுவல்முறையாகச் செல்லும் என்றாலும் நடைமுறையில் அதற்கு மதிப்பில்லை என்பதால் சுற்றில் இல்லை.) 1000 ரூபியா மதிப்பிலிருந்து 100,000 ரூபியா மதிப்பிலான வங்கித்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க டாலருக்கு 13,448 ரூபியாக்கள் (அக். 2015) என்ற செலாவணியில் இந்தோனேசியாவின் மிக உயர்ந்த மதிப்புள்ள வங்கித்தாள் ஏறத்தாழ அமெரிக்க $7.45 இற்குச் சமமாக உள்ளது.

நாணயங்கள்[தொகு]

தற்போது இருவகையான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன: அலுமினியம், வெண்கலம். ஈருலோக நாணயங்கள் 1991–1998 காலத்திலும், எடை குறைந்த அலுமினிய நாணயங்கள் 1999 முதலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறைந்த மதிப்பினாலும் 100 ரூபியாவிற்குக் கீழான நாணயங்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாலும் பணத்தொகைகள் அடுத்த மேல் அல்லது கீழ்த் தொகைக்கு முழுமையாக்கப்படுகின்றன; பல்லங்காடிகளிலும் கடைகளிலும் கடைசி சில ரூபியாக்களுக்கு மாற்றாக இனிப்புகள் வழங்குவதும் வழமையாக உள்ளது.[2]

நாணயத்தாள்கள்[தொகு]

தற்போது 1000 (2000 ஆண்டு வெளியானது), 5000 (2001), 20,000, 100,000 (2004), 10,000, 50,000 (2005) 2000 (2009) நாணயத்தாள்களும் 2010 இல் புதிய பதிப்பாக வெளியிடப்பட்ட 10,000 மற்றும் 2011 இல் வெளியிடப்பட்ட 20,000, 50,000, 100,000 நாணயத்தாள்களும் புழங்கி வருகின்றன. 1998–1999 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் சனவரி 31, 2008 முதல் செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டது; இருப்பினும் இவற்றை இந்தோனேசிய வங்கியில் சனவரி 31, 2018 வரை மாற்றிக் கொள்ளலாம்.[3]

குறைந்த மதிப்புள்ள நாணயத்தாள் இந்திய ரூபாய் 6.7க்குச் சமமாதலால், பேருந்துச் சீட்டுக்களுக்குக் கூட நாணயத்தாள்களே பயன்படுத்தப்படுகின்றன.[4] 1000 ரூபியாவிற்கு மாற்றாக 2000 ரூபியா நாணயத்தாள்களை வெளியிட முடிவெடுத்து மிகுந்த நாட்களுக்குப் பிறகு 2000 ரூபியா நாணயத்தாள்கள் சூலை 9, 2009 இல் வெளியிடப்பட்டன.[5] இருப்பினும் 1000 ரூபியா நாணயத்தாள்களும் 1000 ரூபியா நாணயங்களும் இரண்டுமே புழங்கி வருகின்றன.

பாதுகாப்புக் கூறுகள்[தொகு]

50,000 ரூபியா நாணயத்தாள்களின் சேகரிப்பில் பாதுகாப்பு நூலிழையைத் தெளிவாகக் காணலாம்.
 • நாணயத்தாள்களின் அடிப்படை ஊடகம் மரம், அல்லது மரக்கலவைகளிலிருந்து பெறப்பட்ட நீண்ட இழைகளாகும். அபக்கா மரயிழை மிகவும் விரும்பப்படும் ஊடகமாகும்; இந்த மரம் இயற்கையாகவே இந்தோனேசியாவில் வளர்கின்றது. இம்மர இழைகளாலான வங்கித்தாட்கள் வெகுநாட்கள் நீடித்துள்ளன. வெப்பச் செயல்முறை மூலம் வங்கித்தாட்களுக்கான தனிப்பட்ட மரக்கூழ் தயாரிக்கப்படுகின்றது.
 • கண்ணுக்குத் தெரியும் குறைந்தபட்ச பாதுகாப்புக் கூறுகள் நீரோட்டக்குறிகளும், மின்னச்சுக்களும், வண்ணயிழை பாதுகாப்பு நூற்களுமாகும். முப்பரிமாண ஒளிப்படவியல் போன்ற பிற சிறப்புப் பாதுகாப்புக் கூறுகளும் சேர்க்கப்படுகின்றன.
  • பாதுகாப்பு நூலிழைகள் நுழைக்கப்படும்போது கிடைமட்ட வரிகளும் குத்துமட்ட வரிகளும் மேலிருந்து கீழாக காட்டுமாறு அமைக்கப்படுகின்றன.இந்த நூலிழைகளின் ஊடகம், வண்ணம், அளவு மற்றும் வடிவமைப்பு மாறுபடுகின்றது.
  • பார்வைக்குறை உள்ளவர்களும் மெய்யறியும் வண்ணம் மதிப்புகளை அச்சிட இன்டாக்ளோ அச்சுமுறை பயன்படுத்தப்படுகின்றது.
 • 2010 இல் வெளியான 10,000 ரூபியா தாளும் 2011 இல் வெளியான 20,000, 50,000 மற்றும் 100,000 ரூபியாத் தாட்களும் புதிய பாதுகாப்புக் கூறைக் கொண்டுள்ளன: யூரியான் வளையங்கள் (வண்ண நகல் எடுப்பதைத் தடுக்க), வானவில் அச்சுமுறை (பல கோணங்களில் காண்கையில் வண்ணம் மாறும் வகையில்), பார்வைக்குறை உள்ளவர்களும் தொட்டுணரக்கூடிய வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய ரூபாய் மதிப்பில்[தொகு]

ஆகஸ்டு 2016 ஆண்டு நாணய மாற்று நிலவரப்படி ஒரு இந்திய ரூபாய்க்கு, 196.289 இந்தோனேசிய ரூபாய் என்ற விகிதத்தில் உள்ளது. [6]

மேற்சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Banknotes of Indonesia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 1. Dave Owens in East Timor. Jobsletter.org.nz. Retrieved on 28 சூலை 2011.
 2. Bank to redenominate rupiah
 3. Bank Indonesia says Suharto banknotes invalid from Aug. 21 | Asian Economic News | Find Articles at BNET. Findarticles.com. Retrieved on 28 சூலை 2011.
 4. News. Jawaban.Com (3 மார்ச்சு 2008). Retrieved on 2011-07-28.
 5. Siaran Pers No.11/ 19 /PSHM/Humas – Bank Sentral Republik Indonesia பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம். Bi.go.id (9 சூலை 2009). Retrieved on 2011-07-28.
 6. XE Currency Converter: INR to IDR

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coins of Indonesia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசிய_ரூபாய்&oldid=3409088" இலிருந்து மீள்விக்கப்பட்டது