இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனம்
Badan Pusat Statistik | |
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1960 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | இந்தோனேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Jl. Dr. Sutomo 6-8 ஜகார்த்தா 10710, இந்தோனேசியா |
வலைத்தளம் | www |
இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனம் (இந்தோனேசியம்: Badan Pusat Statistik (BPS); ஆங்கிலம்: Statistics Indonesia; Central Agency of Statistics) என்பது இந்தோனேசியாவின் துறை சாராத அரசு நிறுவனமாகும்.[1] இந்த நிறுவனம் புள்ளிவிவர ஆய்வுகளை நடத்துவதற்குப் பொறுப்பாகும்.[2]
இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இந்தோனேசிய அரசாங்கம் முதன்மை வகிக்கிறது. இருப்பினும் புள்ளிவிவரத் தரவுகளைப் பொதுமக்களுக்கும் பெற்றுக் கொள்ள இயலும். ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவை தேசிய மற்றும் மாநிலச் சமூக-பொருளாதாரம், உற்பத்தி நிறுவனங்கள், மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் சக்தி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியவை ஆகும்.[3]
பொது
[தொகு]1960-ஆம் ஆண்டு, மத்திய புள்ளியியல் பணியகமாக (இந்தோனேசியம்: Biro Pusat Statistik (BPS); ஆங்கிலம்: Central Bureau of Statistics) நிறுவப்பட்ட இந்த நிறுவனம்,[4] இந்தோனேசிய அதிபரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது.
அதன் செயல்பாடுகளில் பிற அரசு நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தரவுகளை வழங்குதல்; மற்றும் பொருளாதாரம், சமூக மாற்றம் மற்றும் மேம்பாடு குறித்த புள்ளிவிவரங்களை அவ்வப்போது வெளியிட புள்ளிவிவர ஆய்வுகளை நடத்துதல்; ஆகியவை அடங்கும்.
அத்துடன் இந்த நிறுவனம், பிற பொது அலுவலகங்களில் தரவு செயலாக்கப் பிரிவுகளுக்கு, புள்ளிவிவர தயாரிப்புகளுக்கு ஆதரவு வழங்கி ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக விளங்குகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ www.bps.go.id: Tentang BPS
- ↑ Lengkap! Ini Daftar Terbaru Kementerian dan Lembaga Terdampak Efisiensi Anggaran
- ↑ Indonesia, Badan Pusat Statistik. "Statistics Indonesia 2023 is a BPS publication that presents various types of data sourced from BPS and other institutions". www.bps.go.id. Retrieved 24 March 2025.
- ↑ "Profil BPS - Portal PPID BPS RI". ppid.bps.go.id. Retrieved 2024-01-02.