இந்து மேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து மேளா (Hindu Mela ) என்பது 1867 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் கலாச்சார விழாவாகும். பிரித்தனில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு நகரவாசிகளிடையே தேசிய பெருமித உணர்வை ஏற்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது. இதில் சுதேசி மல்யுத்தம், சுதேசி கலை மற்றும் பாராயணம் மற்றும் சுதேசி கவிதை மற்றும் பாடல்களின் நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும். மேளா 1880 வரை தவறாமல் நிகழ்ந்தது. அதன் பிறகு மற்ற இயக்கங்கள் நிறுவப்பட்டதால் இது தன் முக்கியத்துவத்தை இழந்தது.

நிறுவனம்[தொகு]

1867 ஆம் ஆண்டில், வங்காளத்தின் படித்த பூர்வீக மக்களிடையே தேசிய உணர்வை மேம்படுத்துவதற்கான இராஜ்நாராயண பாசு என்பவரால் தேசிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த கையேட்டால் ஈர்க்கப்பட்ட நவகோபால் மித்ரா என்பவர் 1867 இல் இந்து மேளா மற்றும் தேசிய சங்கத்தை நிறுவினார். [1] மேளா முதலில் சைத்ரா மேளா என்று அழைக்கப்பட்டது . [2] மேளாவை நிறுவுவதற்கு ஜோராசங்காவின் தாகூர் குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். இந்த நிகழ்வில் தாகூர் குடும்ப உறுப்பினர்கள் கவிதைகளை இயற்றினர். மேலும் பாடல்களையும் பாடினர். [3]

பின் வரும் காலங்கள்[தொகு]

சத்யேந்திரநாத் தாகூர் இந்து மேளாவுடன் ஆழமாக தொடர்பு கொண்டிருந்தார். இவர் மேற்கு இந்தியாவில் இருந்ததால் ஏப்ரல் 1867இல் நடைபெற்ற இந்து மேளாவின் நிறுவன அமர்வில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், இரண்டாவது அமர்வில் இவர் கலந்து கொண்டார். இவர் "மைல் சபே பாரத் சாந்தன், எக்டன் கஹோ கான்"" ( "ஒன்றிணை, இந்தியாவின் குழந்தைகளே, ஒற்றுமையாகப் பாடுங்கள்") என்ற பாடலை இயற்றினார். இது இந்தியாவின் முதல் தேசிய கீதமாகப் புகழப்பட்டது. [4]

மேளாவின் நிறுவன ஆண்டுகளில் மிகவும் இளமையாக இருந்தபோதிலும், இரவீந்திரநாத் தாகூர் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இங்குதான் இவர் முதலில் பிரிட்டிசு எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினார். இது பிற்கால வாழ்க்கையில் இவரது நம்பிக்கைகளை வடிவமைத்தது. மேளாவின் பத்தாவது ஆண்டுக் கொண்ட்டாட்ட நாளில், இரவீந்திரநாத் தாகூர் தில்லியில் ஒரு பகட்டான தர்பாரை நடத்திய அன்றைய தலைமை ஆளுநர் லிட்டன் பிரபுவின் முடிவை எதிர்த்து ஒரு கவிதையை வெளியிட்டார். இதில் விக்டோரியா மகாராணி "இந்தியாவின் பேரரசி" என்று அறிவிக்கப்பட்டார். பிரிட்டிசு இராச்சியத்தை பகிரங்கமாக தாக்கிய தாகூரின் முதல் செயல்களில் இதுவும் ஒன்றாகும். [5]

இந்து மேளாவின் பல அமைப்பாளர்கள் ஒன்று கூடி ஒரு ரகசிய சமுதாயத்தை உருவாக்கினர். சஞ்சிவனி சபா, இது சுதேசி தீப்பெட்டிகளையும், சுதேசி தறிகளில் நெய்த துணியையும் தயாரித்தது. [6]

இந்து மேளா உள்நாட்டு உடல் விளையாட்டுகளுக்கு போதுமான வெளிப்பாட்டை வழங்கியது. மேளாவின் முதல் அமர்வில், நகரத்தின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் அழைக்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர். பின்வரும் அமர்வில், குச்சிச் சண்டை மற்றும் மல்யுத்தம் போன்ற உள்நாட்டு உடல் விளையாட்டுகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1874 ஆம் ஆண்டில், மேளாவின் ஐந்தாவது அமர்வு நடைபெற்றபோது, உடல்தகுதி நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக் கட்டணம் 50 பைசா விகிதத்தில் விற்கப்பட்டன. இந்த வெளிப்பாட்டின் விளைவாக, பல பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தில் உடற்கல்வியை அறிமுகப்படுத்தின. இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளிலும் பாடத்திட்டத்தில் உடற்கல்வி சேர்க்கப்பட்டுள்ளது. [7]

குறிப்புகள்[தொகு]

  1. Datta, Amaresh (1988). Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti. Sahitya Akademi. பக். 1578. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1194-0. https://books.google.com/books?id=zB4n3MVozbUC&pg=PA1578. 
  2. Gupta, Swarupa. Notions of Nationhood in Bengal: Perspectives on Samaj, C. 1867-1905. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004176140. https://books.google.co.in/books?id=AGSuVgPH9T4C&pg=PA105#v=onepage&q&f=false. 
  3. Hogan, Patrick Colm. Rabindranath Tagore: Universality and Tradition. Fairleigh Dickinson Univ Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780838639801. https://books.google.co.in/books?id=lyr2gZZnWl8C&pg=PA30#v=onepage&q&f=false. 
  4. Bandopadhyay, Hiranmay, Thakurbarir Katha, pp. 98–104, Sishu Sahitya Sansad (in வங்காள மொழி).
  5. Hogan, Patrick Colm; Pandit, Lalita (2003) (in en). Rabindranath Tagore: Universality and Tradition. Fairleigh Dickinson Univ Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780838639801. https://books.google.co.in/books?id=lyr2gZZnWl8C&pg=PA30#v=onepage&q&f=false. 
  6. Hogan, Patrick Colm; Pandit, Lalita (2003) (in en). Rabindranath Tagore: Universality and Tradition. Fairleigh Dickinson Univ Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780838639801. https://books.google.co.in/books?id=lyr2gZZnWl8C&pg=PA30#v=onepage&q&f=false. 
  7. Raha, Bipasha; Chattopadhyay, Subhayu (2017-12-22) (in en). Mapping the Path to Maturity: A Connected History of Bengal and the North-East. Routledge. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781351034128. https://books.google.co.in/books?id=SCtEDwAAQBAJ&pg=PT99. 

மேலும் படிக்க[தொகு]

  • Islam, Sirajul (2003) (in en). Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789843205803. https://books.google.co.in/books?id=_fptAAAAMAAJ. 
  • "Facets of Hinduism in the Cultural-Nationalist Programme of the Hindu Mela". The Oxford Centre for Hindu Studies (in ஆங்கிலம்). 2012-10-01. 2019-11-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_மேளா&oldid=3234062" இருந்து மீள்விக்கப்பட்டது