இந்து மிசன் மருத்துவமனை
[[File: | |
இந்து மிஷன் மருத்துவமனை | |
அமைவிடம் | ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் (தாம்பரம் தொடருந்து நிலையம் எதிரில்), சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
ஆள்கூறுகள் | 12°55′26″N 80°6′50″E / 12.92389°N 80.11389°E |
மருத்துவப்பணி | இலாப-நோக்கமற்றது |
வகை | இலவச மருத்துவமனை |
அவசரப் பிரிவு | உண்டு |
படுக்கைகள் | 300 |
நிறுவல் | 1982 |
வலைத்தளம் | இந்து மிஷன் மருத்துவமனை |
பட்டியல்கள் |
முதன்மை நபர்கள் | சீனிவாசன் கே சுவாமி, தலைவர் தாமல் கண்டலை சீனிவாசன் நிறுவனச் செயலாளர் டி. கே. சிறீராம், மருத்துவ இயக்குநர் |
---|
இந்து மிஷன் மருத்துவமனை (Hindu Mission Hospital) 300 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகும். இதனை நிறுவியவர் தாமல் கண்டலை சீனிவாசன் ஆவார். தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 1982ஆம் ஆண்டு முதல் இயங்கும் இம்மருத்துவமனை இலாப-நோக்கமற்ற அடிப்படையில் செயல்படுகிறது. இது சென்னை அருகே உள்ள தாம்பரம் தொடருந்து நிலையம் எதிரில் மூன்று மாடி கட்டிடத்தில் இயங்குகிறது.
வரலாறு
[தொகு]வணிகர் மற்றும் புரவலருமான தாமல் கண்டலை சீனிவாசன் மற்றும் சமூக ஆர்வலர் & தொழுநோய் மருத்துவரான சி. எஸ். கங்காதர சர்மா[1] ஆகியோரால் 5 டிசம்பர் 1982 அன்று இந்து மிசன் மருத்துவமனை புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக துவக்கப்பட்டது.[2]
14 ஏப்ரல் 1985 முதல் இம்மருத்துவமனை 10,000 sq ft பரப்பளவில் 3 தளங்கள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டது. சூன் 1988 முதல் அருகில் இருந்த 1.7 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. 14 செப்டம்பர் 1988 முதல் 20 படுக்கைகள் கொண்ட உள்-நோயாளிகளுக்கான பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளும் துவங்கப்பட்டது. 11 அக்டோபர் 1992 முதல் இம்மருத்துவமனை 300 படுக்கைகளுடன் செயல்பட்டது. மே 1993 முதல் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவும் துவங்கப்பட்டது. சனவரி 1995 முதல் கண் மருத்துவம் மற்றும் முதியோர் மருத்துவப் பிரிவுகள் நிறுவப்பட்டது. 1 நவம்பர் 1997 அன்று கண்புரை அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. 12 பிப்ரவரி 1988 அன்று எலிசா ரீடர் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் சேர்க்கப்பட்டது.
பின்னர் வாய்பேசாதவர்களுக்கு பேச்சுப் பயிற்சி, சரியாக காது கேளாதவர்களுக்கு ஆடியோகிராம் வசதிகள் செய்யப்பட்டது. மார்ச் 2000ஆம் ஆண்டில் இரத்த சேமிப்பு நிலையம் துவக்கப்பட்டது.[3]
நிதி
[தொகு]சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் பல்வேறு தொழில் & வணிக நிறுவனங்கள் வழங்கும் நிதியுதவிகள் அடிப்படையில் இம்மருத்துவமனை இயங்குகிறது.
மருத்துவமனை
[தொகு]74,000 sq சதுர அடியில் அமைந்துள்ள இம்மருத்துவமனை 300 படுக்கைகளும், 9 அறுவை அரங்குகளும் (operation theatre), 7 அவசர கால ஊர்திகளும் (ambulances), தீவிர சிகிச்சைப் பிரிவும், இதய சிகிச்சைப் பிரிவும் மற்றும் அவசர கால விபத்து சிகிச்சைப் பிரிவும் உள்ளது. நாள் ஒன்றுக்கு 450 புறநோயாளிகள் பிரிவில் நாள் ஒன்றுக்கு 450 பேருக்கு பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் இம்மருத்துவமனையில் நுரையீரல் தொற்று, சீறுநீரக டயலிசஸ் பிரிவும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'I dedicate the award to my family, doctors and staff'". The Hindu. 30 January 2016. Retrieved 15 August 2016.
- ↑ 2.0 2.1 Pain, Paromita (27 August 2004). "Hindu Mission Hospital to set up critical care block". The Hindu (Chennai) இம் மூலத்தில் இருந்து 11 September 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040911165923/http://www.hindu.com/2004/08/27/stories/2004082714140600.htm.
- ↑ "Milestones". Hindu Mission Hospital. Archived from the original on 2013-05-22. Retrieved 5 Apr 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official webpage of the Hindu Mission Hospital பரணிடப்பட்டது 30 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம்