இந்து தொன்மவியல் உயிரினங்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
இந்து தொன்மவியல் உயிரினங்கள் என்பவை இந்து சமயத்தில் உள்ள புராணங்கள் மற்றும் கதைகளில் கூறப்பட்டுள்ள உயிரினங்களாகும்.
விலங்குகளின் உடற்கூறுகளைக் கொண்டவை[தொகு]
மீன்[தொகு]
- மச்ச அவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக கருதப்படுவது. இந்த உருவத்தில் இடைவரை மனித உடலும், அதன்பிறகு மீன் உருவமும் உள்ளது.[1]
- சுவர்ணமச்சை - தெற்காசியப் பகுதிகளில் கூறப்படும் இராமயணத்தில் இராவணனின் மகளாகவும், அனுமனின் மனைவியாகவும் கூறப்படுகின்றவர். [2] இவர் கடற்கன்னிகளின் இளவரசியாக அனுமான் மீது கொண்டகாதலால் இராமருக்கு பாலம் அமைத்திட உதவி செய்தவராக கருதப்படுகிறார்.[3]
- வானவில் மீன் என்பது இந்து சமயத்தில் திமிங்கிலத்தினை விடப் பெரியதாக கருதப்படுகின்ற உயிரினமாகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான புத்தரை உண்டதாகவும், அவரை மீனவர் மீட்டதாகவும் கூறப்படுகிறது.[4]
நீர்நில வாழ்வன[தொகு]
- பீகி - தொடுவான சூரியனின் குறியீடாக் கூறப்படும் தவளையாகும். இது சமஸ்கிருத விளக்கவுரையில் குறிப்பிடுகிறது.
ஊர்வன[தொகு]
|
பறவைகள்[தொகு]
- கருடன், புராணம் - திருமாலின் வாகனமாக உள்ள கழுகுப் பறவை.
- அண்டப்பேருண்ட பட்சி - இரு தலைகளைக் கொண்ட பறவை.
- சடாயு - இராமயணத்தில் அருணா என்ற பறவையின் இளைய மகனாவர். இவருடைய சகோதரர் சம்பாதி. தசரதனின் நண்பராக அறியப்படுகிறார்.
- சம்பாதி - இராமயணத்தில் அருணா என்ற பறவையின் மூத்த மகன். இவர் சீதை இலங்கையில் இருப்பதை இராமனுக்குத் தெரிவிக்கின்றார்.
யானை[தொகு]
- ஐராவதம் - தொன்மவியலில் கூறப்படுகின்ற வெள்ளை யானை. இந்த யானையானது இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது.
- கஜாசுரன் - சிவபெருமானால் கொல்லப்பட்ட யானை.
- கஜேந்திரன் - தடாகத்தில் இருந்த முதலையால் தாக்கப்பட்ட யானை, இதனை திருமால் காப்பாற்றினார். இச்சம்பவம் கஜேந்திர மோட்சம் என்று கூறப்படுகிறது.
- பிள்ளையார் - யானை தலையுடன் இருக்கும் கடவுள்.
- ஐராவதி - ஐராவதம் எனும் வெள்ளையானையின் தாய். இவர் கருது மற்றும் காசியப்பரின் தம்பதியினரின் மகள்.
- விநாயகி - யானை தலையுடைய பெண் கடவுள்.
முதனி[தொகு]
|
காட்டுப் பன்றி[தொகு]
- வராக அவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம். பன்றி தலையும், மனித உடலும் பெற்றதாக உள்ளது.
- வராகி அம்மன் - ஏழு கன்னிமார்களில் ஒருவராவார். இவர் பன்றி தலையும், பெண் உடலும் பெற்றதாக உள்ளது.
மாடு[தொகு]
- நந்தி தேவர் - சிவபெருமானின் வாகனமாக கூறப்பெறுகின்ற காளை உயிரினம். சில சமயங்களில் காளை தலையும், மனித உடலும் கொண்ட நந்தி தேவர்.
- காமதேனு - இந்து சமயத்தில் புனிதமாக கருதப்படும் பசு. பெண்ணின் தலையும், பசுவின் உடலும், மயிலின் சிறகும் உடைய உயிரினம். பல சமயங்களில் பசுவே காமதேனுவாக கொண்டாடப்படுகிறது.
- பட்டி - காமதேனுவின் மகள்.
ஆடு[தொகு]
- தக்கன் - ஆட்டின் தலையும், மனித உடலும் கொண்டவர். யாகத்தினை சிவபெருமானை அழைக்காமல் செய்தமைக்காக வீரபத்திரரால் தலை வெட்டப்பட்டு, ஆட்டின் தலையை பெற்றவர்.
குதிரை[தொகு]
- ஹயக்ரீவர் - குதிரைமுகமும் உடலும் பெற்ற திருமாலின் வடிவம்.
- உச்சைச்சிரவம் - ஏழு தலைகளைக் கொண்ட வெள்ளைக் குதிரை. இக்குதிரை மகாபலி மற்றும் இந்திரனின் வாகனமாக உள்ளது.
- வெள்ளைக் குதிரை - பல்வேறு தொன்மவியல் கதைகளில் வெள்ளைக் குதிரை இடம்பெற்றுள்ளது.
சிங்கம்[தொகு]
- நரசிம்மர் - திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவர்.
- பிரத்யங்கிரா - சிங்க முகத்தினைக் கொண்ட பெண் தெய்வம்.
- சிம்மமுகன் - இவர் சிங்க முகத்தினையும், மனித உடலைக் கொண்டவர். சூரபத்மனின் சகோதரராவார்.
கரடி[தொகு]
|
பல உயிர் கலவை[தொகு]
- நவகுஞ்சரம் - மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகும்.
- யாளி - இந்துக் கோயில்களின் தூண்களிலும், படிக்கட்டுகளிலும் எண்ணற்ற சிற்பங்களாக யாளி காணப்படுகிறது.
- சரபா - சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவது. சரபம் பறவையானது சிங்கம் மற்றும் பறவையின் கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது.
அரக்கர்கள்[தொகு]
|
பூதங்கள்[தொகு]
- துவாரபாலகர் - இறைகளின் வாயிற்காவலர்கள் துவாரபாலகர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் அனுமதியைப் பெற்றே இறையை தரிசனம் செய்ய முடியும். கதை போன்ற பெரிய ஆயுதங்களைக் கொண்டும், பேருருவமாக இருப்பர்கள்.
இவற்றையும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ Hindu Temple, Somnathpur
- ↑ Satyavrat Sastri (2006). Discovery of Sanskrit Treasures: Epics and Puranas. Yash Publications. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89537-04-3. https://books.google.com/books?id=seljAAAAMAAJ. பார்த்த நாள்: 2012-07-24.
- ↑ S.N. Desai (2005). Hinduism in Thai Life. Popular Prakashan. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7154-189-8. https://books.google.com/books?id=VmsKr7lqTjwC&pg=PA135. பார்த்த நாள்: 2012-07-24.
- ↑ From: A guide to Hinduism. C.M.Faren[full citation needed]
- ↑ "Hinduism - Shiva Parvati". msu.edu. மூல முகவரியிலிருந்து 28 September 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 October 2015.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 74.
- ↑ Robert Beer (10 September 2003). The handbook of Tibetan Buddhist symbols. Serindia Publications, Inc.. பக். 77–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-932476-03-3. https://books.google.com/books?id=-3804Ud9-4IC&pg=PA77. பார்த்த நாள்: 17 January 2011.
- ↑ George Mason Williams (2003). Handbook of Hindu mythology. ABC-CLIO. பக். 294–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-106-9. https://books.google.com/books?id=SzLTWow0EgwC&pg=PA294. பார்த்த நாள்: 17 January 2011.
- ↑ Bhāgavata Purāṇa 3.26.25
- ↑ Bhāgavata Purāṇa 10.1.24