இந்து சோனாலி
இந்து சோனாலி | |
---|---|
பிறப்பு | 27 செப்டம்பர் 1980 பாகல்பூர், பீகார், இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்படம், கிராமிய இசை |
தொழில்(கள்) | ஓவியர் |
இசைக்கருவி(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2009–2010 |
வெளியீட்டு நிறுவனங்கள் | வீனசு, டீ சீரிசு, வேவ் |
இந்து சோனாலி (Indu Sonali)(பிறப்பு 27 செப்டம்பர் 1980) என்பவர் போச்புரி திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். இவர் 300 போச்புரி படங்கள் மற்றும் 50 இசைத் தொகுப்புகளில் பாடியுள்ளார். போச்புரி திரைப்படத் துறையின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக. இந்தியப் பாரம்பரிய இசை, சுற்றுப்புற மின்னணு மற்றும் புதிய கால ஜாஸ் இணைவு ஆகியவற்றின் சில தடயங்களைக் கொண்ட இவரது இசை வகை பழமையான-கிராமிய இசை சேர்ந்ததாகும். "லெஹ்ரியா லூட் ரே ராஜா" (பார்த்திக்யா), "கஹான் ஜெய்பே ராஜா நஜாரியா" (கஹா ஜெய்பா ராஜா), "உத்தா தேப் லெங்கா" (டமாட்ஜி) மற்றும் "தேவர் ஹோ டபா நா மோர் கரிஹையா" (ரக்வாலா) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சில பாடல்கள் ஆகும்.[1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]இந்து சோனாலி 7 நவம்பர் 1978 அன்று பாகல்பூரில் (பீகார்) பிறந்தார். இவர் பீகாரில் படித்தவர். இராஜேசு குப்தா இசையமைத்த போச்புரி திரைப்படமான பண்டிட்ஜி படாய் நா பியா கப் ஹோய் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
இவர் இந்திய இசை குயில் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகை.
சோனாலி மின்னணு மற்றும் நியூ ஏஜ் ஜாஸ் இசை இணைப்புடன் பாடும் கலைஞராக உள்ளார்.
2016ஆம் ஆண்டில், இசை நிறுவனமான சாய் இசைத்தட்டுகள் வெளியிடப்பட்ட ஸ்வரஞ்சலி என்ற தனி பக்தி இசைத்தொகுப்பினை இசை அமைப்பாளர் தாமோதர் ராவுடன்சோனாலி வெளியிட்டார்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Top songs sung by surya ante". YouTube. Retrieved 26 February 2014.