இந்து உப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரிமலைக் குழம்பின் மேற்பரப்பில் பாறைகள் போல் படிந்து கிடக்கும் உப்பிற்கு இந்துப்பு என்று பெயர். இது கனமான கட்டிகளாகவும், சிலாசித்தைப் போன்ற வேறு கற்களும் கலந்து இருக்கும். மேற்பக்கம் அழுக்கு படிந்தும் உள் பக்கம் வெண்மையாகவும் வாயிலிட்டால் கரிப்பு சுவையுடனும் இருக்கும். கனமான படிகங்களால் ஆன இந்துப்பில் சோடியம் குளோரைடு அதிகமாக இருக்கும். இது தூய்மையான நிலையில் நிறமற்றதாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆனால் மெக்னீசிய இரும்பு உப்புகள் கலந்திருந்தால் செந்நிரமாகவோ பழுப்பு நிறமாகவோ இருக்கும். இது ஈரத்தை ஏற்கும் தன்மை கொண்டது. இது சிந்து தேசத்திலும் பஞ்சாப் வடமேற்குப் பகுதியிலும் உள்ள உப்பு மலைத்தொடரிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தில் குன்மம், மலக்கட்டு, வயிற்றுப் பொருமல், தசை வீக்கம் போன்ற நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது.[1]

  1. அறிவியல் களஞ்சியம்-தொகுதி 4- தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-4, மே 1988-பக்கம் 275. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_உப்பு&oldid=2527846" இருந்து மீள்விக்கப்பட்டது