இந்தி மொழி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தி மொழி நாள் (hindi day, हिन्दी दिवस) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்தியை பரப்பும் வகையில் இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தி நாளும் ஒன்று. இந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியருக்கு இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. [1]

வரலாறு[தொகு]

இந்தி பேசாத பிற மொழியினரின் எதிர்ப்பையும் மீறி, இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று ஏற்றது[2]. [3] [4] [5]. இந்தி பேசாத மக்களிடையே இந்தியை பரப்புவதற்கு தொடங்கப்பட்ட ஆட்சி மொழித் துறை என்ற பிரிவு இவ்விழாவினை நடத்துகிறது. ஆண்டுதோறும் இந்தியில் செயல்பாடுகளை மேற்கொள்வோருக்கு இந்தி விருது வழங்கப்படுகிறது. முதன்முதலாக, 1975 ஆம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது[6].

சான்றுகள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/city/navi-mumbai/Vashi-man-to-get-language-award-from-President/articleshow/22534857.cms
  2. http://books.google.com/books?id=KRgLNgAACAAJ[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://books.google.com/books?id=JLGBUEs74n4C
  4. http://books.google.com/books?id=-bh6AAAAMAAJ
  5. http://books.google.com/books?id=glA6t2p7arwC
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி_மொழி_நாள்&oldid=3543529" இலிருந்து மீள்விக்கப்பட்டது