உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் - கர்நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையொட்டி, 14 செப்டம்பர் 2019 அன்று, பெங்களுருவில், பல்வேறு கன்னட மொழி ஆர்வலர்கள், அவ்வூரின் நகரக்கூடம் (டவுன்ஹால்) எனும் பகுதியிலிருந்து விடுதலை பூங்கா (ஃபிரீடம் பார்க்) பகுதி வரை, இந்தி நாள் (ஹிந்தி திவாஸ்) கொண்டாடுதலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்தி நாள் கொண்டாட்டங்களை எதிர்த்து, செப்டம்பர் 14, 2019 அன்று பெங்களூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

2017 ல் போராட்டங்கள்

[தொகு]

பெங்களுர் மாநகர் தொடரி

[தொகு]

நம்ம மெட்ரோவின் பெங்களூர் நகர தொடரி நிறுவன வரையறை (பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பொரேஷன் லிமிடெட்),  தொடரி நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மும்மொழி கொண்டு பெயர்ப்பலகைகளை நிறுவியது. அஃது, சில உள்ளூர் மக்கள், இதனை இந்தி திணிப்பு என்றே கருதினர், எனில், தொடரி திட்டத்தின் பெரும்பங்கு முதலீடு மாநில அரசே வழங்கியுள்ளது.[1]

பல்வேறு கன்னட மொழி ஆர்வலர்கள் தொடரி நிலையங்கள் வெளியே போராட்டங்களில் ஈடுபட்டனர், மேலும், கீச்சு (டுவிட்டர்) இணையத்திலும் தங்களது எதிர்ப்பு பதிவுகளை பகிர்ந்தனர்.[2][3]

வங்கிகள்

[தொகு]

மாநகர தொடரிகளில் போராட்டங்கள் இயற்றியபின், கன்னட மொழி ஆர்வலர்கள், வங்கிகளிலும் கன்னட மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கக் கோரினர்.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "KDA issues notice to Namma Metro on Hindi usage".
  2. "#NammaMetroHindiBeda: Pro-Kannada activists stage protest outside BMRCL office".
  3. "Hindi beda in Namma Metro, say Kannada activists - Times of India".
  4. "Campaign seeks restoration of Kannada in bank services - Deccan Herald". m.deccanherald.com.[தொடர்பிழந்த இணைப்பு]