இந்தி-தமிழ் தொடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 இந்தி மொழியில் உள்ள பல தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இவற்றால் இந்தி மக்களின் கலச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை நாம் அறிய முடிகிறது. இந்தி தொடர்களால் தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் அவர்கள் அதை எதிர்க்கின்றனர். ஆனால் இந்தி தொடர்களுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றனர். அழகான உடைகள், அறிமுகமில்லாத புதிய முகங்கள், வித்தியாசமான கதையம்சம், நகைச்சுவை உணர்வு போன்றவையே இந்தி தொடர்கள் மீது தமிழ் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம். ஆகவே இந்தி தொடர்களுக்கு இணையான தமிழ்த்தொடர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய தமிழ் சின்னத்திரை உலகம் என்பது நிதர்சனமான உண்மை. இப்போது புகழ்பெற்ற சில இந்தி-தமிழ் தொடர்களைக் காணலாம்.
  ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த புகழ்பெற்ற தொடர் சிந்து பைரவி. இது சிந்து மற்றும் பைரவி என்ற இரு தோழிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மண்வாசனை என்ற தொடர் குழந்தை திருமணத்தால் ஆனந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை கூறுகிறது. கருத்தம்மா என்ற தொடர் பெண் சிசுக் கொலையை மையமாகக் கொண்டது. பூவிழி வாசலிலே என்ற தொடர் அடிமைத் தொழிலாளிகள் அனுபவிக்கும் வேதனையை காண்பிக்கிறது.
  பாலிமர் தொலைக்காட்சியில் இன்றும் நீண்டகாலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் மூன்று முடிச்சு. இத்தொடரில் தன் குடும்பத்தைப் பாதுகாக்க ஒரு நல்ல மருமகளாக இருந்து சீமா போராடுகிறார். மாயா தொடரில் அர்ஜூன் மீது எல்லையற்ற காதல் கொள்ளும் மாயா என்ற பெண் அதனால் சைகோவாக மாறுகிறாள். வாடகைத்தாய் பற்றிய தொடர்  என்னருகில் நீ இருந்தால்.
  விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற தொடர் ஒளிபரப்பானது. மேலும் இது பல மொழிகளில் பல நாடுகளில் ஒளிபரப்பாகிறது. இத்தொடர் ஐ.பி.எஸ் கனவு காணும் சந்தியாவையும் அதை நிறைவேற்ற உதவும் அவர் கணவர் சூர்யாவையும் மையமாகக் கொண்டது. சரித்திர தொடர்களான மகாபாரதம், சீதையின் ராமன், சந்திர நந்தினி, ஜெய் ஹனுமான் போன்ற தொடர்கள் தமிழில் புகழ் பெற்றன.
  மக்கள் டிவியில் ஒளிபரப்பான நீலாம்பரி என்ற சிறுதொடர் மாமியார்-மருமகள் சண்டையை காண்பித்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத தொடராக இருந்தது. 
  ஜீ தமிழில் ஒளிபரப்பான சி.ஐ.டி என்ற க்ரைம் தொடர் இந்தியில் 18 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர். அபி-பிரக்யாவின் காதல் கதையைக் கூறுகிறது இனிய இருமலர்கள் தொடர்.
  இந்தி நாடகங்களை மொழிமாற்றம் செய்வதற்கு பதில் மறுதயாரிப்பும் செய்கின்றனர். ஆனால் அவற்றை இந்தி நாடங்களுக்கு இணையாக ஒப்பிட முடியாது. இதற்கு உதாரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய தொடர்களைச் சொல்லலாம். இவை முதலில் புகழ் பெற்றாலும் பிறகு கதையில் தொய்வு ஏற்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டன. 
  யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான முதல் டப்பிங் தொடர் நாகினி. அது இந்தியைப் போலவே தமிழிலும் புகழ் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இதனால் ஊக்கம் பெற்ற சன் டிவி தொடர்ந்து தெலுங்கு டப்பிங் தொடர்களான யமுனா, இவள் ஒரு தொடர்கதை போன்றவற்றை ஒளிபரப்பி வருகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி-தமிழ்_தொடர்கள்&oldid=2403006" இருந்து மீள்விக்கப்பட்டது