உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திர யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திர யாத்திரை
தர்பார் சதுக்கத்தில் சுவேத பைரவரின் முகமூடி
பிற பெயர்(கள்)நேபாளி மொழியில் யென்யா
கடைப்பிடிப்போர்நேபாள இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள்
வகைமதம் சார்ந்தது
முக்கியத்துவம்காத்மாண்டுவின் உள்ளூர் மக்களின் ஒற்றுமை
கொண்டாட்டங்கள்செப்டம்பர் 17, 2024 (குவானேயா) அன்று ரத ஊர்வலங்கள்

செப்டம்பர் 18, 2024 (தானேயா)

செப்டம்பர் 21, 2024 (நானிச்சாயா)
அனுசரிப்புகள்ஊர்வலங்கள், முகமூடி நடனங்கள், அலங்கார ஊர்திகள்
தொடக்கம்யென்லா துவாதசி
முடிவுயென்லா சதுர்த்தசி
மூலம் தொடங்கப்பட்டதுஅரசன் குணமகாதேவன்

யென்யா புன்கி என்றும் அழைக்கப்படும் இந்திர யாத்திரை (Indra Jatra) நேபாளத்தின்காத்மாண்டுவில் நடைபெறும் மிகப்பெரிய மதத் திருவிழாவாகும். "யெ" என்றால் "காத்மாண்டு" என்பதற்கான பழைய நேவாரி பெயர், "யா" என்றால் "கொண்டாட்டம்", மற்றும் "புன்கி" என்றால் முழு நிலவு என்று பொருள். எனவே ஒன்றாக பழைய நகரமான காத்மாண்டுவின் பிறந்த நாள் என்று பொருள்.[1] இந்த கொண்டாட்டங்களில் இந்திர யாத்திரை மற்றும் குமாரி யாத்திரை ஆகிய இரண்டு நிகழ்வுகள் உள்ளன. தெய்வங்கள் மற்றும் அரக்கர்களின் முகமூடி நடனங்கள், புனித உருவங்களின் காட்சிப் பொருட்கள் மற்றும் தேவ உலகத்தின் அரசனான இந்திரன் நினைவாக அலங்கார ஊர்திகள் ஆகியவற்றால் இந்திர யாத்திரையில் நிகழ்த்தப்படுகிறது. குமாரி யாத்திரை என்பது வாழும் தெய்வமான குமாரி தேவியின் தேரோட்டம் ஆகும்.

கடந்த ஆண்டு இறந்த குடும்ப உறுப்பினர்களும் திருவிழாவின் போது நினைவுகூரப்படுகிறார்கள். காத்மாண்டு நகரச் சதுக்கத்தில் திருவிழாவின் முக்கிய நிக்ழவுகள் நடைபெறும். நேபாளத்தின் தேசிய சந்திர நாட்காட்டியான நேபாள சகாப்த நாட்காட்டியில் பதினொன்றாவது மாதமான யான்லாவின் 12 வது நாளிலிருந்து 4 வது நாள் வரை எட்டு நாட்கள் கொண்டாட்டங்கள் நீடிக்கின்றன.[2][3]

10 ஆம் நூற்றாண்டில் காத்மாண்டு நகரம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் மன்னர் குணகமாதேவனால் இந்திர யாத்திரை தொடங்கப்பட்டது.[4] குமாரி யாத்திரை 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. கொண்டாட்டங்கள் சந்திர நாட்காட்டியின் படி நடத்தப்படுகின்றன, எனவே தேதிகள் மாறுபடும்.

திறப்பு விழா

[தொகு]
யோசின் தேனேகு எனப்படும் கம்பம் நடும் விழா

யோசின் தானேகு என்பது காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் இந்திரனின் கொடியைக் கொண்டிருக்கும் கம்பத்தை நிறுவும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது. காத்மாண்டுவுக்கு கிழக்கே 29 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமான நாலாவுக்கு அருகிலுள்ள ஒரு காட்டில் இருந்து ஒரு மரம் தேர்தெடுக்கப்பட்டு அதன் கிளைகள் மற்றும் பட்டை அகற்றப்பட்டு கம்பமாக நிறுத்த கயிறுகளில் இழுத்துச் சென்று தர்பார் சதுக்கத்தில் நிறுத்தப்படுகிறது.

உபாகு வனேகு என்பது முதல் நாளில் நடைபெறும் மற்றொரு நிகழ்வு ஆகும். இதில் பங்கேற்பாளர்கள் இறந்த குடும்ப உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக தூபம் ஏற்றி வழிபட கோயிகளுக்கு செல்வார்கள். கோயிலின் உள்ளே அவர்கள் சிறிய வெண்ணெய் விளக்குகளையும் வைக்கிறார்கள். சிலர் சுற்றி வரும்போது பக்தி பாடல்களையும் பாடுகிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க நகரப் பகுதியில் ஊர்வலம் மாலை சுமார் 4 மணிக்குத் தொடங்குகிறத.[5]

குமாரி யாத்திரை, அதாவது குமாரியின் தேரோட்டம், இந்திர யாத்திரையுடன் ஒத்துப்போகிறது. இது கிபி 1756 இல் ஜெயப்பிரகாஷ் மல்லனின் ஆட்சியின் போது தொடங்கப்பட்டது.[6]

இந்த திருவிழாவின் போது, பிள்ளையார், பைரவர் மற்றும் குமாரி தேவி ஆகிய தெய்வங்களின் சிலைகளை ஏற்றிச் செல்லும் மூன்று தேர்கள் இசைக்குழுக்களுடன் மூன்று நாட்களில் காத்மாண்டு வழியாக திருவிழா பாதையில் இழுத்துச் செல்லப்படுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலம் தொடங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhandari, S.; Paudayal, K. N. (2007-12-31). "Palynostratigraphy and palaeoclimatic interpretation of the Plio- Pleistocene Lukundol Formation from the Kathmandu valley, Nepal". Journal of Nepal Geological Society 35: 1–10. doi:10.3126/jngs.v35i0.23629. பன்னாட்டுத் தர தொடர் எண்:0259-1316. 
  2. Toffin, Gérard (January 1992). "The Indra Jātrā of Kathmandu as a Royal Festival Past and Present". Contributions to Nepalese Studies. Center for Nepal and Asian Studies, Tribbuvan University. Retrieved 24 July 2012. Page 73.
  3. Lewis, Todd Thornton (1984). The Tuladhars of Kathmandu: A Study of Buddhist Tradition in a Newar Merchant Community. Columbia University. p. 377. Retrieved 30 July 2012.
  4. "Indra Jatra, Munindra Ratna Bajracharya". Gorkhapatra. Archived from the original on 2012-03-25. Retrieved 2011-09-17.
  5. "Kathmandu's Indra Jatra Festival". Lonely Planet. 2012. Retrieved 1 August 2012.
  6. Oldfield, Henry Ambrose (2005). Sketches from Nipal. Asian Educational Services. p. 315. ISBN 9788120619586. Retrieved 2 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_யாத்திரை&oldid=4222163" இலிருந்து மீள்விக்கப்பட்டது