உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திர மல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திர மல்லர்
இலலித்பூரின் அரசன்
ஆட்சிக்காலம்1706–1709
முன்னையவர்லோக பிரகாஷ் மல்லர்
பின்னையவர்வீர நரசிம்ம மல்லர்
பிறப்புநேபாளம்
இறப்பு1709
அரசமரபுமல்லர் வம்சம்
தந்தைபௌத்த மல்லர்
தாய்மணிமதி

இந்திர மல்லர் (Indra Malla) மல்லர் வம்ச மன்னர் ஆவார். இவர் இலலித்பூரை லோக பிரகாஷ் மல்லனுக்குப் பிறகு 1706 முதல் 1709 இல் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.[1][2]

வாழ்க்கை

[தொகு]

இந்திர மல்லர், யோக நரேந்திர மல்லரின் சகோதரி மணிமதியின் மகனும் சிறீநிவாச மல்லரின் பேரனும் ஆவார். யோக நரேந்திரனின் மரணத்திற்குப் பிறகு, இலலித்பூரின் உள்ளூர் பிரபுக்கள் யோக நரேந்திரனின் பேரனான லோகபிரகாஷ் மல்லனை அரசனாக நியமித்தனர். பதினொரு மாத ஆட்சி பிறகுதான் லோக பிரகாஷ் பெரியம்மை நோயால் இறந்தார். அதன் பிறகு இந்திர மல்லர் ஆட்சிக்கு வந்தார். தனது முன்னோர்களைப் போலவே இவரும் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மத இடங்களுக்கு பல்வேறு பொருட்களை நன்கொடையாக வழங்கினார். [1]

இந்திர மல்லர் 1709 இல் இறந்தார். இவருக்குப் பின் வீர நரசிம்ம மல்லர் பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. pp. 75–76.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Burleigh, Peter (16 February 2022). "A Chronology of Later Kings of Patan". University of Cambridge: 52–53. https://www.repository.cam.ac.uk/bitstream/handle/1810/227429/kailash_04_01_02.pdf?sequence=2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_மல்லர்&oldid=4220974" இலிருந்து மீள்விக்கப்பட்டது