இந்திர ஜெயசிங்க வருமதேவன்
இந்திர ஜெயசிங்க வருமதேவன் (ஆங்கிலம்: Indrajayasingha Warmadewa; இந்தோனேசியம்: Jayasingha Warmadewa; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், நான்காம் அரசர் ஆவார். இந்திரஜெயசிங்க வர்மதேவன் அல்லது ஜெயசிங்க வர்மதேவன் என்றும் அழைக்கப்படும் இவர் தவநேந்திர வருமதேவன் எனும் மூன்றாம் பாலி அரசரின் வாரிசு மன்னர் ஆவார்.
இந்த மன்னரை மனுகாயா கல்வெட்டு (Manukaya inscription) (882 சக ஆண்டு) எனும் கல்வெட்டிலிருந்து அடையாளம் காணலாம்.
பலத்த நீர் ஓட்டத்தால் ஆண்டுதோறும் சேதம் அடைந்து வந்த எம்பூல் தீர்த்தக் கோயிலை) (Tampaksiring); Tirtha Empul) மீட்டெடுக்க மன்னரின் உத்தரவு இந்தக் கல்வெட்டில், உள்ளது.[1] மறுசீரமைப்புக்குப் பிறகு, இரண்டு ஏரிகளும் வலுவுடன் நீண்ட காலம் நீடித்தன என்று நம்பப்படுகிறது.
மனுகாயா கல்வெட்டு
[தொகு]தற்போது தம்பாக்சிரிங் அரசு அரண்மனைக்கு (Tampaksiring State Palace) அருகில் அமைந்துள்ள மனுக்ரயா கிராமத்தில் மன்னர் ஜெயசிங்க இரண்டு குளியலறைகளைக் கட்டியதாகவும் அந்தக் கல்வெட்டில் கூறப்படுகிறது.
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், மனுகாயா கல்வெட்டு தவநேந்திர வருமதேவன் மற்றும் அவரின் துணைவியார் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dawan, Lanang (14 May 2011). "INDRAJAYASINGHA WARMADEWA". PEMECUTAN-BEDULU-MAJAPAHIT. Retrieved 2019-11-19.
சான்றுகள்
[தொகு]- Poesponegoro, Marwati Djoened; Notosusanto, Nugroho (2008). Sejarah Nasional Indonesia II: Zaman kuno. PT Balai Pustaka. ISBN 9789794074084.
- Setiawan, I Ketut (2008). Brigitta Hauser-Schäublin, I Wayan Ardika. ed. "Socio-Political Aspect of Julah". Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia (Bali: Universitätsverlag Göttingen). doi:10.17875/gup2019-1239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783940344120. https://books.google.com/books?id=K7AcwO4jxFIC&pg=PA219.
- Shastri, Narendra Dev. Pandit (1963). Sejarah Bali Dwipa. Denpasar, Bali: Bhuana Saraswati.