இந்திரா பிரியதர்சினி விரிக்சமித்ர விருதுகள்
இந்திரா பிரியதர்சினி விரிக்சமித்ர விருதுகள் (Indira Priyadarshini Vrikshamitra Awards) என்பது இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால்[1] காடு வளர்ப்பு மற்றும் தரிசு நில மேம்பாட்டுத் துறையில் முன்னோடியாகவும் முன்மாதிரியான பணிகளைச் செய்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் விருதுகள் ஆகும். ஏழு பிரிவுகளில் தனிநபர்கள்/நிறுவனங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு இந்த விருதிற்காக வழங்கப்படுகிறது. இது 1986-இல் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்த விருதுகள் 2006 வரை பன்னிரண்டு பிரிவுகளில் வழங்கப்பட்டன. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் 2012 அறிவிப்பின்படி, தற்பொழுது ஏழு பிரிவுகளின் கீழ் மட்டுமே வழங்கப்படுகிறது.
அளவுகோல்கள்
[தொகு]இந்திய அரசாங்கத்தின் செய்தித் தகவல் பணியகத்தின்படி, விருதுகளைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகள் பரவலாக்கப்பட்ட நாற்றங்கால்களை நிறுவுதல்; தரிசு நிலம்/பண்ணை நிலங்களில் மரம் நடுதல்; விழிப்புணர்வு, உந்துதல் மற்றும் விரிவாக்கப் பணி; காடு வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பில் கிராமப்புற ஏழைகள்/பழங்குடியினர்/கூட்டுறவு நிறுவனங்களை ஈடுபடுத்துதல்; மரம் வளர்ப்போர் கூட்டுறவு போன்ற அடிமட்ட நிறுவனங்களை நிறுவுதல்; சமூக மரங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களின் சமூக வேலி அமைத்தல் போன்ற பணிகளைச் செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.[2]
வகைகள்
[தொகு]- தனிநபர்-வன அலுவலர்கள்
- தனிநபர் - வன அலுவலர்கள் தவிரப் பிற
- அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்/கல்வி நிறுவனங்கள்
- கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் (மண்டல வாரியாக ஆறு விருதுகள்)
- இலாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
- பெருந்துறை (தனியார்/பொதுத்துறை நிறுவனங்கள்)
- பள்ளி அளவில் சுற்றுச்சூழல் குழுக்கள் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தேசியப் பசுமைப்படை திட்டத்தின் கீழ்)
விருது பெற்றவர்கள்
[தொகு]கௌரா தேவி (1925 - 1991) 1986-இல் இந்திரா பிரியதர்சினி வரிக்சமித்ர விருதுகள் விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார்.
ஆண்டு | நிறுவனம்/நபர் | வகை | மாநிலம் |
---|---|---|---|
1986 | கௌரா தேவி | செயற்பாட்டாளர் | உத்தரப்பிரதேசம் |
1987 | சிறீ ராகேசு கலா | அரசு ஊழியர் உட்படத் தனிநபர் | உத்தரப்பிரதேசம் |
2000 | சிறீ ரோங்குரா ஹ்ராஹ்செல் | தனி வன அலுவலர் | மிசோரம் |
2003[2] | சிறீமதி கொல்லகல் தேவகியம்மா | அரசு ஊழியர் உட்படத் தனிநபர் | கேரளம் |
2006[2] | சிறீ உ. வீரகுமார் | அரசு ஊழியர் உட்படத் தனிநபர் | தமிழ்நாடு |
2006[2] | சமூக வனவியல் பிரிவு, ஜுனகர் | அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் / அமைப்பு | ஒடிசா |
2006[2] | 24-பர்கானாசு (தெற்கு) பிரிவின் ராய்திகி எல்லைக்கு உட்பட்ட பினோத்பூர் பைகுந்தபூர் வனப் பாதுகாப்புக் குழுவிற்குள் உள்ள பெண் சுயஉதவி குழுக்கள் | கூட்டு வன மேலாண்மைக் குழு | மேற்கு வங்காளம் |
2006[2] | ஜல்கிரகன் நிறுவனம், சத்து, துங்கர்பூரில் உள்ள போஜடோ கா ஓடாவின் கிராமப் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது | அரசு சாரா நிறுவனம்/கல்வி நிறுவனம் | இராசத்தான் |
2007[2] | பி. பி. லிம்பாசியா | அரசு ஊழியர் உட்படத் தனிநபர் | குசராத்து |
2007[2] | வனத் துறை மற்றும் கல்வித் துறை, கேரள அரசு | அரசின் கீழ் உள்ள நிறுவனம் / அமைப்பு | கேரளம் |
2007[2] | கிராம காடுகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குழு, பாலியகேரா | கூட்டு வன மேலாண்மைக் குழு | இராசத்தான் |
2007[2] | நிசார்க் சேவா சமிதி, வார்தா | அரசு சாரா நிறுவனம் / அமைப்பு | இராசத்தான் |
2008[2] | பி. சிவகுமார் | அரசு ஊழியர் உட்படத் தனிநபர் | அசாம் |
2008[2] | எல்லை வன அலுவலகம், தாலுகா சேவா சதன், கம்பாட் | அரசின் கீழ் உள்ள நிறுவனம் / அமைப்பு | குசராத்து |
2008[2] | தி வான் சுரசா ஏவம் பிரபந்த் சமிதி, கிராம் கரேல், தி ஜாடோல், உதய்பூர் | கூட்டு வன மேலாண்மைக் குழு | இராசத்தான் |
2008[2] | பெண்கள் மாண்டுவா, சமூக-கலாச்சார விழிப்புணர்வுக்கான பெண்கள் அமைப்பு, கியோஞ்சர் | அரசு சாரா அமைப்பு | ஒடிசா |